25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >> ராஜபாளையம் கோதண்ட ராமசாமி கோயில்  பிரம்மோற்ஸவ கொடியேற்றம். >> புது பஸ் ஸ்டாண்டிலிருத்து  ராஜபாளையத்தில் இணைப்பு சாலை திறப்பு . >> ரோட்டின் வெள்ளைக்கோடு வெளியே வரை ,ஆக்கிரமிப்புகளால் முடங்கும் முடங்கியாறு ரோடு . >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில்பத்தாம் திருநாள் பஞ்ச மூர்த்தி புறப்பாடு. >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில் ஒன்பதாம் நாள் தேர்த்திருவிழா. >>


இயற்கையான முறையில் கண்களை சுற்றியுள்ள கருவளையத்தை போக்க.....
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

இயற்கையான முறையில் கண்களை சுற்றியுள்ள கருவளையத்தை போக்க.....

இயற்கையான முறையில் உங்கள் வீட்டில் உள்ள சில பொருட்களை பயன்படுத்தி உங்கள் கண்களை சுற்றியுள்ள கருவளையங்களை நிரந்தரமாக போக்க உதவும்.

ஆவாரம்பூ பொடி - 2 டேபிள் ஸ்பூன்

.மைசூர் பருப்பு பொடி - 2 டேபிள் ஸ்பூன்

பாதாம் எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்

கற்றாழை ஜெல் - 1 டேபிள் ஸ்பூன்

உருளைக்கிழங்கு - 1/2 கிழங்கு

மிக்சி ஜாரை எடுத்து கொள்ளவும்:.முதலில் ஒரு மிக்சி ஜாரை எடுத்து அதில் நாம் எடுத்து வைத்துள்ள 1/2 உருளைக்கிழங்கினை அதனின் தோலினை நீக்கி சேர்த்து கொள்ளவும். இதனை நன்கு பசைபோல் அரைத்து கொள்ளுங்கள்.அதில் உள்ள சாற்றினை மட்டும் ஒரு கிண்ணத்தில் வடிக்கட்டி கொள்ளுங்கள்.பிறகு அதில் நாம் எடுத்து வைத்துள்ள 2 டேபிள் ஸ்பூன் ஆவாரம்பூ பொடியை சேர்த்து நன்கு கலந்து கொள்ளுங்கள்.அடுத்துஅதில் 2 டேபிள் ஸ்பூன் மைசூர் பருப்பு பொடியை கலந்துகொள்ளுங்கள். அதில் நாம் எடுத்து வைத்திருந்த பாதாம் எண்ணெயை சேர்த்து நன்கு கலந்து கொள்ளுங்கள்.இறுதியாக அதில் நாம் எடுத்து வைத்துள்ள கற்றாழை ஜெல்லினையும் சேர்த்து நன்கு கலந்து ஒரு மூடி போட்ட கண்ணாடி அல்லது வேறு ஏதேனும் பாத்திரத்தில் எடுத்து வைத்து கொள்ளுங்கள்.இதனை தினமும் இரவு தூங்க செல்வதற்கு முன்னால் உங்கள் கண்களை சுற்றி தடவி அடுத்த நாள் காலையில் நன்கு குளிர்ச்சியான தண்ணீரை பயன்படுத்தி உங்கள் முகத்தை கழுவி கொள்ளுங்கள்..இதனை ஒரு வாரத்திற்கு தொடர்ந்து செய்து வந்தாலே உங்கள் கண்களை சுற்றியுள்ள கருவளையங்கள் மறைய ஆரம்பிப்பதை காணலாம்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News