வெயிலில் கருத்து போகும் முகத்தை ஆவாரம் பூ பொலிவடைய செய்யும்.ஆவாரம்பூ பொடியுடன் ஒரு ஸ்பூன் கசகசா சேர்த்து காய்ச்சாத பசும்பால் கலந்து நைசாக அரைத்து சற்று அதிகமாக பற்று போல முகத்திலும், கழுத்தை சுற்றிலும், தடவி வந்தால் தேமல், கருமை நிறம் போன்றவை மாறி பளிச்சென இருக்கும் . தங்கம் போல் மினுமினுக்க, இயற்கையாக முகம் ஜொலிக்கும்.இந்த பூக்களை நம் சருமத்திற்கு அடிக்கடி பயன்படுத்தும் போது பூவினும் மென்மையான சருமத்தை பெறலாம்.
தங்க பஸ்பம் என்று சொல்லப்படும் செம்பருத்தி பூவை உள்ளுக்குள் எடுப்பதன் மூலம் பலவிதமான மருத்துவ குணங்களை பெறலாம்.பூ.இலை இரண்டுமே சருமத்துக்கும், கூந்தலுக்கும் அழகை தருவதில் அதிக முக்கியத்துவம் வாய்ந்தது. முழுமையான செம்பருத்தி பூவை காய வைத்து பொடித்து கொள்ளவும்.செம்பருத்திபூ பொடி- 3 ஸ்பூன், பாசி பயறு மாவு- 3 ஸ்பூன், பால் தேவைக்கு.இந்த மூன்றையும் நன்றாக கலந்து பேஸ்ட் போல் குழைத்து முகம், கழுத்து, கை, கால்கள் என்று அனைத்து இடங்களிலும் தேய்த்து 1/2 மணி நேரம் கழித்து குளிர்ந்த நீரில் கழுவி வந்தால் முகத்தில் எண்ணெய் பசை நீங்கி ஈரப்பதம் சீராக இருக்கும். சருமம் புத்துணர்ச்சியுடனும், முகத்தில் தனி அழகும் இருக்கும்.
இவை விலை அதிகம் என்றாலும் முகத்திற்கு அதிக பலனைத் தரும். மாசு, மருக்கள் நீங்க குங்குமப் பூவை பயன்படுத்தலாம்.10 குச்சி குங்குமப்பூ எடுத்து பாலில் ஊறவைத்து அரைத்து முகத்தில் தடவி வருவதால் முகம் பளபளக்கும். கண்களை சுற்றி, உதட்டை சுற்றி, மேலும் முகத்தில் கருமை அதிக மாக இருக்கும் இடங்களில் கூடுதலாக தடவி 1/2 மணி நேரம் ஊறவைத்து முகத்தை கழுவும் போது முகத்தில் இருக்கும் கருமை மொத்தமும் நீங்கி சிவந்த நிறத்தை பெற்று பளிச்சென இருப்பதை உணரலாம். பக்க விளைவு எதுவும் இல்லாத இந்த பேஸ்டை கழுத்து பகுதிகளிலும் தடவி வரலாம்.
பெண்கள் அனைவரும் முகத்தை பளபளப்பாகவும், பொலிவாகவும் வைத்துக்கொள்ள தான் நினைப்பார்கள். ஆனால் முகஅழகைகெடுக்கும்விதமாகபருக்கள்,கரும்புள்ளிகள், பொலிவற்றதன்மை போன்றவை உண்டாகின்றன.அந்தவகையில், வீட்டிலிருந்தபடியே சரும பிரச்சனைகள் நீங்கி, முகம் பளபளக்க இந்த சார்கோல் Facepack போதும்..தேவையான பொருட்கள்சார்க்கோல்- 1 ஸ்பூன்சோள மாவு- 1 ஸ்பூன்தேங்காய் தண்ணீர்- 1 ஸ்பூன்தயாரிக்கும் முறைஒரு பவுலில் சார்க்கோல், கார்ன்ஃப்ளார் மற்றும் தேங்காய் தண்ணீர் சேர்ந்து கலந்து முகத்தில் தடவி 20 நிமிடங்களுக்குப் பிறகு முகத்தைத் தண்ணீரில் கழுவலாம்.உங்கள் சருமம் வறண்டு இருந்தால் இந்த கலவையில் சிறிது தேன் கலந்து கொள்ளவும்.
மென்மையான, அழகான, மருத்துவக்குணம்நிறைந்தபூக்களைக்கொண்டுமுகத்தையும், சருமத்தையும், அழகாக்க முடியும். பூக்களில் வைட்டமின்கள், புரதங்கள், சத்துக்கள் நிறைந்துள்ளன. எளிய முறையில், குறைந்த செலவில், முகத்தின் அழகை பூக்களால் பாதுகாக்கலாம். சருமத்திற்கு அழகுத் தரும் பூக்களை பற்றி அறிந்துக் கொள்வோம்.ரோஜாஇன்றும் அழகு சாதனங்கள் அனைத்திலும், ரோஜாவின் பங்கு அதிகமாக இருக்கிறது. ரோஜாவின் நிறம் கிடைத்தால் மிகவும் மகிழ்ச்சியாக தானே இருக்கும்.ரோஜா இதழை பறித்து நிழலில் உலர்த்தி பொடித்து வைத்துக் கொள்ள வேண்டும். இதற்கான பேஸ்ட் தயாரிக்க...ரோஜா பொடி _ 4 ஸ்பூன் வெந்தயப் பொடி _2 ஸ்பூன் தயிர் _தேவைக்குஇந்த மூன்றையும் பேஸ்ட் போல குழைத்து முகத்தில் தடவி 15 நிமிடங்கள் கழித்து முகத்தை குளிர்ந்த நீரில் கழுவவும். இதனால் முகத்தில் இருக்கும் தழும்பு களும், கரும்புள்ளிகளும் நீங்கும். முக்கியமாக கரடு முரடான முகம் பளபளப்பாக பளிச்சென்று இருக்கும். தினமும் இதை செய்யலாம்.
தேவையான பொருட்கள்; ஒரு கப் பாசி பயறு, கால் கப் உளுந்து,4 டேபிள் ஸ்பூன் அரிசி, 1 டீஸ்பூன் வெந்தயம், தேவையான அளவு உப்பு,1 வெங்காயம் நறுக்கியது, 4 பச்சை மிளகாய், பெருங்காயப் பொடி,கொத்தமல்லி ஒரு கை பிடிசெய்முறை: இதை நீங்கள் இரவு செய்வதற்கு முடிவு செய்தால், காலையில் மாவு ரெடி செய்து கொள்ளுங்கள். பாசி பயறு, உளுந்து, அரிசி, வெந்தயம் ஆகியவற்றை சேர்த்து ஊற வைக்கவும்.4 மணி நேரம் ஊறியதும் அதை தண்ணீர் சேர்த்து அரைத்துகொள்ளவும். அதை4 மணி நேரம் புளிக்க வைக்கவும். தொடர்ந்து அதில் உப்பு, பெருங்காயம், பச்சை மிளகாய் நறுக்கியது, வெங்காயம், கொத்தமல்லி நறுக்கியது ஆகியவற்றை சேர்த்து கொள்ளவும். தொடர்ந்து இதை எண்ணெய் ஊற்றி அடை போல் சுட்டு கொள்ளவும்.
கழுத்தைச் சுற்றிலும் சிலருக்கு கருப்பு கருப்பாக வளையம் விழுந்து கவலை வளையத்தை ஏற்படுத்திவிடும் இதற்கான தீர்வு.கடலை பருப்பு கால் கிலோ, பார்லி கால் கிலோ இரண்டையும் தனித்தனியே அரைத்து வையுங்கள். இரண்டிலிருந்தும் ஒவ்வொரு ஸ்பூன் எடுத்து, அதனுடன் பொடியாக்கிய பச்சை கற்பூரத்தை கடுகளவும், முல்தானி மட்டியை1 சிட்டிகையும் சேர்த்து, கழுத்தைச் சுற்றி பூசி காய்ந்ததும் அலசுங்கள்.தினமும் இதைச் செய்து வர, கழுத்து ''வரி''கள் காணாமல் போய்விடும்.
நிறைய தண்ணீர் குடிக்கவும்.கருப்பு வட்டங்கள் இல்லாத நல்ல முகத்தை பெற வேண்டும் என்றால் 8 மணி நேர தூக்கம் கட்டாயம்.வைட்டமின் சி முக்கியமானது, உங்கள் உணவில் ஆரஞ்சு எலுமிச்சை போன்றவை இருக்க வேண்டும். வாரத்திற்கு ஒருமுறை வீட்டில் தயாரிக்கப்பட்ட மஞ்சள், தேன், தயிர், ரோஸ் வாட்டர், மற்றும் கொண்டைக்கடலை மாவு ஆகியவற்றின் பேஸ் பேக்கை பயன்படுத்துங்கள்.ஒரு நாளைக்கு இரண்டு முறை உங்கள் முகத்தை கழுவுங்கள்.
தேவையான பொருட்கள்சார்க்கோல்- 1 ஸ்பூன்கற்றாழை ஜெல்- 1 ஸ்பூன்அரிசி மாவு- 1 ஸ்பூன்தயாரிக்கும் முறைஒரு பவுலில் சார்க்கோல், கற்றாழை ஜெல் மற்றும் அரிசி மாவு ஆகியவற்றை ஒகலந்து முகத்தில் தடவி 20 நிமிடம் கழித்து தேய்த்து சுத்தம் செய்யவும்.
பெண்கள் அனைவரும் முகத்தை பளபளப்பாகவும், பொலிவாகவும் வைத்துக்கொள்ள தான் நினைப்பார்கள். ஆனால் முக அழகை கெடுக்கும் விதமாக பருக்கள்,கரும்புள்ளிகள், பொலிவற்றதன்மை போன்றவை உண்டாகின்றன.அந்தவகையில், வீட்டிலிருந்தபடியே சரும பிரச்சனைகள் நீங்கி, முகம் பளபளக்க இந்த சார்கோல் Facepack போதும்.1. தேவையான பொருட்கள்சார்க்கோல்- 1 ஸ்பூன்முல்தானி மிட்டி- 1 ஸ்பூன்ரோஸ் வாட்டர்- 2 ஸ்பூன்தயாரிக்கும் முறைஒரு பவுலில் சார்க்கோல், முல்தானி மெட்டி மற்றும் ரோஸ் வாட்டர் போன்றவற்றைக் கலந்து முகத்தில் தடவி15 நிமிடம் கழித்து கழுவவும்.சருமம் ஏற்கனவே வறண்டிருந்தால் இந்த பேஸ்பேக்கில் சிறிது தேனைக் கலக்கவும்