உடல் எடை குறைய , அதிக புரத சத்து உள்ள இரவு உணவு .
தேவையான பொருட்கள்; ஒரு கப் பாசி பயறு, கால் கப் உளுந்து,4 டேபிள் ஸ்பூன் அரிசி, 1 டீஸ்பூன் வெந்தயம், தேவையான அளவு உப்பு,1 வெங்காயம் நறுக்கியது, 4 பச்சை மிளகாய், பெருங்காயப் பொடி,கொத்தமல்லி ஒரு
கை பிடி
செய்முறை: இதை நீங்கள் இரவு செய்வதற்கு முடிவு செய்தால், காலையில் மாவு ரெடி செய்து கொள்ளுங்கள். பாசி பயறு, உளுந்து, அரிசி, வெந்தயம் ஆகியவற்றை சேர்த்து ஊற வைக்கவும்.4 மணி நேரம் ஊறியதும் அதை தண்ணீர் சேர்த்து அரைத்துகொள்ளவும். அதை4 மணி நேரம் புளிக்க வைக்கவும். தொடர்ந்து அதில் உப்பு, பெருங்காயம், பச்சை மிளகாய் நறுக்கியது, வெங்காயம், கொத்தமல்லி நறுக்கியது ஆகியவற்றை சேர்த்து கொள்ளவும். தொடர்ந்து இதை எண்ணெய் ஊற்றி அடை போல் சுட்டு கொள்ளவும்.
0
Leave a Reply