25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >> இராஜபாளையம் நாடார் மேல்நிலைப்பள்ளியில் மாநில வாலிபால் போட்டி >> இராஜபாளையம் சஞ்சீவி மலையில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் வனத்துறை வீரர்கள். >> ராஜபாளையத்தில் மழை பொய்த்து கடும் வெயிலால் மக்காச்சோள பயிர்கள் நாசம் >> இராஜபாளையம் ராம்கோ குருப் ராமராஜு சர்ஜிகல் காட்டன் மில்ஸ் லிட், சுதர்சனம் ஸ்பின்னிங் மில்ஸ் நூற்பாலைகளில் பணி புரியும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது >> M.B. ராதாகிருஷ்ணன் நினைவாக வாழ்நாள் சாதனையாளர் விருது >> இராஜபாளையம்  ரோட்டரி சங்கம், M.V.பீமராஜா ஜானகியம்மாள் அறக்கட்டளை மற்றும் நாற்று இலக்கிய அமைப்பு நடத்திய "யானைகள் திருவிழா" >>


அழகுக் குறிப்பு

Jun 11, 2024

முகம் டக்குன்னு பளிச்சிட தர்பூசணி

இந்த வெயிலுக்கு ஏற்ற தர்பூசணி பழத்தை சாப்பிடுவதால் உடலுக்கு குளிர்ச்சியை ஏற்படுத்தும். தர்பூசணி பழமானது உடல் ஆரோக்கியத்திற்கு மட்டுமில்லாமல், முக அழகிற்கும் உதவியாக இருக்க கூடியது. ஒரு பீஸ் தர்ப்பூசணி எடுத்து அதன் சதையை மிக்சியில் சேர்த்து அரைத்து கொள்ள வேண்டும், இதிலிருந்து வரும் சாற்றை மட்டும் எடுத்து கொள்ள வேண்டும். இந்த சாற்றுடன் பயத்த மாவு சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். இந்த பேக்கை முகத்தில் தடவி 20 நிமிடம் வைத்திருந்து அதன் பிறகு முகத்தை கழுவ வேண்டும். இப்படி செய்வதால் முகம் பொலிவு பெறும்.தர்ப்பூசணி சாறு மற்றும் சிறிதளவு தேன், தயிர் போன்றவற்றை மிக்சியில் சேர்த்து பேஸ்ட்டாக அரைத்து கொள்ள வேண்டும். இந்த பேக்கை முகத்தில் தடவி 15 நிமிடம்  வைத்திருந்து அதன் பிறகு முகத்தை வெதுவெதுப்பான நீரில் கழுவ முகம் பொலிவு பெறும்.

Jun 05, 2024

தலைமுடிக்கும், சருமத்துக்கும் ஆரஞ்சு பழத்தோல், பவுடர் 

ஆரஞ்சு பழத்தில் பொட்டாசியம் சத்துக்கள் அதிகமாக இருப்பதால், ரத்த அழுத்தத்தினை கட்டுக்குள் வைக்க உதவுகிறது. முடி கொட்டுதலை தடுத்து நிறுத்துவதுடன், முடி வளரவும் வழி வகுக்கும்.பல்வலியால் அவதிப்படுபவர்கள், ஆரஞ்சு பழம் சாப்பிட்டால் வலி குறையும்.. தலைமுடி உதிர்வது அதிகமாக இருந்தால், தினம்1 ஆரஞ்சு பழம் சாப்பிட்டு வரலாம். முடி கொட்டுதலை தடுத்து நிறுத்துவதுடன், முடி வளரவும் இது வழி வகுக்கக் செய்யும்.குளிர்காலத்தில் மந்தமான சருமம், வறண்ட கூந்தல் இப்படியான பிரச்சனைகள் இருந்தாலும், ஆரஞ்சு பழமே நமக்கு பயன்படுகிறது.  நம்முடைய சருமத்துக்கு கவசம் போல ஆரஞ்சு தோல் உதவுகிறது ஆரஞ்சு தோல் பவுடரை, சருமத்துக்கு பேக் போல போடுவார்கள். இதனால், இறந்த செல்களை நீக்கி, சருமம் பளபளப்பாகவும், பொலிவாகவும் திகழும். பருக்கள், மருக்கள், மங்குகள் இருந்தாலும் நீங்கிவிடும்.. கண்களுக்கு கீழே கருவளையம் இருந்தாலும் சரி, சருமத்தில் சுருக்கம் இருந்தாலும் சரி, எண்ணெய் பசை இருந்தாலும்சரி, மொத்தத்துக்கும் இந்த ஆரஞ்சு தோல் பவுடர்தான் மருந்தாகிறது. எனவே, ஆரஞ்சு பழ தோலை காயவைத்து, பொடி செய்து, உடலுக்கு பூசி குளித்தும் வரலாம். அல்லது இந்த பொடியில் சிறிது தயிர் சேர்த்து முகத்துக்கும், கழுத்து, கைகளுக்கும் தேய்த்தும் வரலாம். 

Jun 04, 2024

சருமத்துக்கும் தலைமுடி ஆரோக்கியத்துக்கும் பலாப்பழ கொட்டைகள்

பலாப்பழ கொட்டைகளை குளிர்ந்த பாலுடன் அரைத்து சருமத்தில், தேய்த்து வந்தால் சரும பொலிவு கிடைக்கும். அல்லது தேனுடன் கலந்தும் பேஸ் பேக் போல பயன்படுத்தலாம். சரும நோய் பிரச்னைகள் நீங்கும்.முக பொலிவு, முக சுருக்கங்களை குறைக்கவும் இந்த கொட்டைகள் உதவுகின்றன. அனைத்துக்கும் மேலாக, மைக்ரோ நியூட்ரியன்டுகள், புரதங்கள் அதிகமாக இருப்பது, சருமத்துக்கு கவசம் போல பாதுகாக்க உதவுகின்றன.முகத்துக்கு மட்டுமல்ல, தலைமுடி ஆரோக்கியத்துக்கும் இந்த பலா கொட்டைகள் உறுதுணையாகின்றன. தலைமுடி உதிர்வுக்கு இது பயன்படுகிறது. முக்கியமாகஆண்களும்இந்தடிப்ஸைபயன்படுத்திபார்க்கலாம்.இந்த பலாக்கொட்டையை காயவைத்துபவுடராக அரைத்துகொள்ள வேண்டும்.இந்த பவுடருடன்சிறிது பயத்தமாவு,சிறிது வெந்தயத்தூள்சூசர்த்து, நல்லெண்ணெயுடன்சேர்த்து குழைத்துகொள்ள வேண்டும்.இதனை தலையில்பூசி15 நிமிடம்ஊறவைத்து குளித்துவந்தால், அரிப்புநீங்கி, முடிகொட்டுவதும் நிற்கும்.முடியும் வளரஆரம்பிக்கும்.

Jun 03, 2024

கால் ஆணி பிரச்சனைக்கு...

கால் ஆணி ஏற்பட்ட உடனேயே பூண்டை நசுக்கி அதன் சாறை காலில் ஆணி இருக்கும் இடங்களில் தடவி வரவும். இரவுப் பொழுதில் பூண்டை நசுக்கி காலில் வைத்து துணியால் கட்டுப்போட்டு விட்டு காலையில் எடுத்துவிடலாம்.வேப்பிலை இலை பசை, குப்பைமேனி இலை பசையுடன் சிறிது மஞ்சள் பொடி சேர்த்து நன்றாக கலந்து கால் ஆணி, உள்ளங்கை தடித்திருந்தால் அந்த  இடத்தில் இந்த பசையை வைத்து துணியால் இரவு முழுவதும் கட்டி வைத்தால் கால் ஆணி பிரச்சனை சரியாகும்.  5 கிராம் மஞ்சள், 5 கிராம்  வசம்பு, கைப்பிடி அளவு மருதாணி இலைகள் ஆகியவற்றை தண்ணீர் விட்டு அரைத்து, கால் ஆணி உள்ள இடத்தில் அடைபோல் கனமாக வைத்து மேலே ஒரு  வெற்றிலையை வைத்து, துணியினால் இறுகக் கட்டி விட வேண்டும். படுக்கும் முன்பு இதை செய்யவதால், கால் ஆணி இருந்த இடம் தெரியாமல் மறைந்து  விடும்.கடுகை பயன்படுத்தி கால் ஆணியை சரிசெய்யும் மருந்து தயாரிக்கலாம். பாத்திரத்தில் விளக்கெண்ணெய் எடுக்கவும். இதனுடன் வறுத்து பொடி செய்த கடுகு, மஞ்சள் பொடி சேர்த்து தைலப்பதத்தில் காய்ச்சவும். இதை ஆறவைத்து வடிகட்டி எடுத்து வைக்கவும். இரவு நேரத்தில் தூங்க போகும் முன்பு கால்களை  சுத்தப்படுத்தி இந்த தைலத்தை தடவினால், கால் ஆணி குணமாகும்.

May 29, 2024

சுருள்முடியினை நேராக்கும் இயற்கை வழி Straightening.

சுருள் சுருளாக இருக்கும் தலைமுடியினை நேராக்க இயற்கையாக நமக்கு கிடைக்கும் பொருட்கள் கொண்டு செய்யலாம்.ஒரு ஸ்பூன் தேனுடன் ஒரு ஸ்பூன் பால் மற்றும் போதுமான அளவு சேம்பு சேர்த்து கூந்தலுக்கு ஸ்ப்ரே அடிப்பது போல் பயன்படுத்தி பின்னர் தலைக்கு குளித்துவிட நல்ல பலன் கிடைக்கும்.இரண்டு முட்டையுடன் போதுமான அளவு ஆலிவ் எண்ணெய் சேர்த்து கலந்து கூந்தலுக்கு தடவி சுமார் 20 நிமிடங்கள் உலர வைக்கவும். பின் குளிர்ந்த நீர் கொண்டு தலைக்கு குளித்துவிட நல்ல மாற்றம் தெரியும்.கூந்தல் ஆரோக்கியம் காக்கும் ஊட்டச்சத்துக்கள் வாழைப்பழத்தில் இருக்கும் நிலையில் இந்த வாழைப்பழத்தை கூந்தலுக்கு ஹேர் பேக் போல் பயன்படுத்தலாம். 2 ஸ்பூன் முல்தானி மெட்டி பொடியுடன், முட்டை ஒன்றை சேர்த்து கலந்து கூந்தலுக்கு ஹேர் மாஸ்க் போல் பயன்படுத்தவும். 30 நிமிடங்கள் விட்டு, குளிர்ந்த நீரில் குளித்துவிட நல்ல பலன் கிடைக்கும்.கால் காப் அரிசி மாவுடன் முட்டை ஒன்று, முல்தானி மெட்டி 1 ஸ்பூன் சேர்த்து பேஸ்ட் போல் தயார் செய்து, கூந்தலுக்கு பன்படுத்தவும். ஒரு மணி நேரத்திற்கு பின் கூந்தலை சுத்தம் செய்ய நல்ல பலன் கிடைக்கும்.கூந்தல் ஆரோக்கியம் காக்கும் கற்றாழை ஜெல்லினை மிதமான சூட்டில் உள்ள ஆலிவ் எண்ணெயுடன் சேர்த்து அரைத்து கூந்தலுக்கு பயன்படுத்தவும். பின், 20 நிமிடங்கள் கழித்து தலைக்கு குளித்துவிடவும்.ஒரு ஸ்பூன் தேங்காய் பாலுக்கு கால் ஸ்பூன் எலுமிச்சை சாறு என கலந்து கூந்தலுக்கு ஸ்ப்ரே போல் பயன்படுத்தவும் பின், மிதமான ஷேம்பு பயன்படுத்தி தலைக்கு குளிக்க நல்ல பலன் கிடைக்கும்2 ஸ்பூன் தயிருக்கு 1 ஸ்பூன் தேன், 1 ஸ்பூன் ஆலிவ் எண்ணெய் மற்றும் வாழைப்பழ திப்பை ஒரு ஸ்பூன் சேர்த்து கலந்து கூந்தலுக்கு ஹேர் மாஸ்க் போல் பயன்படுத்தி வர நல்ல பலன் கிடைக்கும்.

May 28, 2024

பொடுகு, பேன், ஈறு தொல்லை நீங்க

நாம் தலையை எப்பொழுதும் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். நாம் பயன்படுத்தும் தலைகாணி உறை மற்றும் சீப்பு ஆகியவை மிகவும் சுத்தமாக இருக்க வேண்டும்.ஒரு சிலருக்கு தலையில் சுத்தம் இல்லாமல் இருப்பதால் பொடுகு பேன் ஈறு ஆகியவை வந்துவிடும். பொடுகு என்பது மற்றொரு தலையில் இருந்து இன்னொரு தலைக்கு தொற்றிக் கொள்ளும் ஒரு பூஞ்சை தொற்று. தேவையான பொருட்கள்:வேப்பிலை ஒரு கைப்பிடி,செம்பருத்திப்பூ நான்கு,வெந்தயம் ஒருஸ்பூன்,இஞ்சி ஒரு துண்டு.செய்முறை: முதலில் ஒரு பாத்திரத்தை எடுத்துக் கொள்ளவும்.அதில் இரண்டு கிளாஸ் அளவிற்கு தண்ணீர் ஊற்றிக் கொள்ளவும். அந்தத் தண்ணீரில் ஒரு கைப்பிடி அளவு இயற்கையான வேப்பிலையை பறித்து போட்டுக் கொள்ளவும். வேப்பம் பூ இருந்தால் அதையும் சேர்த்துக் கொள்ளலாம்.மிகவும் நல்லது. பின் அந்த தண்ணீரில் நான்கு ஐந்து செம்பருத்திப் பூவை போட்டுக் கொள்ளவும். ஒரு துண்டு இஞ்சியை எடுத்து நசுக்கி சேர்த்துக் கொள்ளவும்.பின் ஒரு ஸ்பூன் அளவிற்கு வெந்தயத்தை போட்டு அடுப்பில் வைத்து மிதமான சூட்டில் நன்றாக காய்ச்சவும்.இரண்டு டம்ளர் தண்ணீர் ஒரு டம்ளர் ஆகும் வரை நன்றாக கொதிக்க வைக்கவும்.தண்ணீர் நன்கு கொதித்தவுடன் அடுப்பை அணைத்து விட்டு நன்கு சூடு ஆற்றிக் கொள்ளவும். இதை பஞ்சில்நனைத்துவேர்க்கால்களில் படும்படி நன்றாக தேய்த்து விடவும்.அரை மணி நேரம் கழித்து மைல்டான ஷாம்பு கொண்டு தலையைக் கழுவி விடவும். இப்படி தொடர்ந்து மூன்று நாட்கள் செய்து வந்தால் தலையில் இருக்கும் பொடுகு, பேன், ஈறு ஆகியவை நிச்சயமாக நீங்கிவிடும்.

May 24, 2024

பாத வெடிப்புகளை போக்க

முகத்தை பராமரிப்பதில் எவ்வளவு நேரம் செலவிடுகிறீர்களோ, அதே போல் பாதங்களையும் கவனித்துக் கொள்ள வேண்டும்.குறிப்பாக, நீரிழிவு நோயாளிகள் தங்கள் கள பாதங்களை கவனித்துக்கொள்வது மிகவும் அவசியமாகும்.எலுமிச்சம் பழத் தோல் கொண்டு பாதங்களை நன்கு தேய்த்து கழுவ வேண்டும். இது கால் வெடிப்பில் உள்ள அழுக்குகளை நீக்கி, கிருமிகளை அழிக்கிறது. இதை ஒரு நாள் விட்டு ஒரு நாள் செய்யலாம்.தினமும் இரவில் படுக்கும் முன், ஒரு பாத்திரத்தில் வெதுவெதுப்பான தண்ணீர், உப்பு, எலுமிச்சை சாறு மற்றும் ஷாம்பு போட்டு, கால்களை 5 முதல் 10 நிமிடம் வைத்து பின் பிரஷ் மூலம் சுத்தம் செய்யவும்.பின் ஒரு காட்டன் டவலால் பாத ஈரங்களை துடைத்து, நல்லெண்ணெயை சிறிது சூடாக்கி, பாதங்களில் தடவலாம். இதை வாரம் இரண்டு அல்லது மூன்று நாட்கள் செய்யலாம்.மருதாணி இலையை விழுது போல நன்கு அரைத்து, வெடிப்பு உள்ள இடங்களில் வாரந்தோறும் தடவி வந்தால் பாத வெடிப்புகள் நீங்கும்.உருளைக்கிழங்கை உலர்த்தி மாவு போல் அரைத்து தண்ணீரில் குழைத்து பூசி வர, வெடிப்பினால் ஏற்பட்ட கருமை நீங்கி பாதங்கள் பளபளக்கும்.பாதங்கள் மிருதுவாக இருக்க வேண்டுமென்றால், பீர்க்கங்காய் நார் கொண்டு தினமும் குளிக்கும்போது பாதத்தில் 5 நிமிடம் நன்றாக தேய்த்து வந்தால் பாதங்கள் மிருதுவாகி விடும்.

May 23, 2024

நரைமுடிக்கு  இயற்கை ஹேர் பேக்

இயற்கை ஹேர் பேக் மூலம் நரைமுடியை எளிதாக கருப்பாக மாற்றலாம். ஒரு கப் நீரில்2 ஸ்பூன் டீ தூள் சேர்த்து நன்கு கொதிக்கவிட்டு வடிகட்டி கொள்ளவும். ஒரு கைப்பிடி மருதாணி இலை, மிளகு15, கிராம்பு5, காபி தூள் ஒரு ஸ்பூன், எலுமிச்சை சாறு2 ஸ்பூன் மற்றும் டீ தூள் நீர் சேர்த்து நன்கு அரைத்து கொள்ளவும். இதை தலைக்கு தடவி 30 நிமிடங்கள் கழித்து முடியை அலசலாம். இதை வாரத்திற்கு 2 முறை செய்தால் பலன் கிடைக்கும் .

May 22, 2024

தேங்காய் பால் - பாதாம் பேஸ் பேக்!

முகத்தில் உள்ள சுருக்கங்களை விரட்டி, இளைமை தோற்றத்தை மீட்டு தரும்,தேங்காய்பால், பாதாம், எலுமிச்சை சாறு பயன்படுத்தி ஒரு பேஸ் பேக்,செய்முறை –  ஒரு  கோப்பையில் போதுமான அளவு தண்ணீருடன் பாதாம் சேர்த்து 8 மணி நேரத்திற்கு நன்கு ஊற வைக்கவும்.பின் இந்த பாதாமை மட்டும் ஒரு மிக்ஸியில் சேர்த்து அரைத்துக்கொள்ளவும். தொடர்ந்து பால் பவுடரையும் சேர்த்து அரைத்து தனி ஒரு கோப்பைக்கு மாற்றிக்கொள்ளவும்.பின்னர் இதனுடன் எலுமிச்சை சாறு மற்றும் தேங்காய் பால் சேர்த்து நன்கு குழைத்துக்கொள்ள இளமையை மீட்டு தரும் பேஸ்பேக் தயார்.முறையாக தயார் செய்த இந்த பேக்கினை முகம் ,கழுத்து பகுதிக்கு தடவி 25 - 30 நிமிடங்களுக்கு உலர வைக்கவும். பின் குளிர்ந்த நீர் கொண்டு சுத்தம் செய்துவிடவும்.பேஸ் பேக்கில் நாம் பயன்படுத்தும் தேங்காய் பால், சருமத்தின் ஈரப்பதத்தை தக்க வைக்கிறது.  இந்த பேக் சரும வறட்சிபிரச்சனையை போக்குகிறது.பாதாம்பயன்படுத்திதயார்செய்யப்படும்இந்தபேக்ஆனது, சருமம்தளர்வடைவதைதடுக்கிறது.சருமத்தில்காணப்படும்சுருக்கங்கள், மென் கோடுகளை மறைக்கிறது.பால்பவுடர், தேங்காய்பால்உள்ளிட்டபொருட்கள்கொண்டுதயார்செய்யப்படும்இந்தபேக்கொலாஜென்தட்டுப்பாட்டைதடுத்து, பொலிவான , மிருதுவான சருமம் பெற உதவுகிறது.

May 21, 2024

 சருமத்துக்கு நன்மைகளை தரும் ஐஸ்கட்டி 

  சருமத்திற்கு ஐஸ் கட்டிகள் கொண்டு மசாஜ் செய்து வர, சருமத்தில் காணப்படும் இறந்த செல்கள் நீங்கும் அதேநேரம் புதிய திசுக்களின் வளர்ச்சி தூண்டப்பட்டு, சருமம் பொலிவாக மாறும்.ஐஸ் கட்டியின் அழற்சி எதிர்ப்பு பண்பு, சரும தடிப்புகள் மற்றும் சரும கொப்புளங்களை குறைக்கிறது. அந்த வகையில் பருக்கள் மற்றும் பருக்களின் தழும்புகளை மறைக்கிறது.தூக்கமின்மை காரணமாக வீக்கமடையும் கண்கள் மற்றும் கண்விழி (உஷ்ண) கட்டிகளை கரைக்க இந்த ஐஸ் கட்டிகள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.சருமத்தின் இறந்த செல்களைவெளியேற்றும் ஐஸ் கட்டியினை வெள்ளரிக்காயுடன் சேர்த்து அரைத்து கண்களை சுற்றி பயன்படுத்த கருவளையங்கள் மறையும்.ஐஸ் கட்டிகள் கொண்டு உங்கள் சருமத்திற்கு தவறாது மசாஜ் செய்து வர, சருமம் தளர்வடைவது தடுக்கப்படுவதோடு சருமத்தில் காணப்படும் மென் கோடுகளும் மறையும்.சருமத்தின் pH அளவை மேலாண்மை செய்யும் ஜஸ் கட்டிகளை சருமத்திற்கு தவறாது பயன்படுத்தி வர, சருத்தின் அதிப்படியான எண்ணெய் நீங்குவதோடு, சரும வறட்சி பிரச்சனையும் நீங்குகிறது.பாலில் முக்கி எடுத்த ஐஸ் கட்டிகள் கொண்டு உங்கள் சருமத்திற்கு மசாஜ் செய்து வர, சருமத்தின் இறந்த செல்களை நீங்குவதோடு, சருமத்தில் காணப்படும் கருந்திட்டுக்களும் மறையும்சிறிதளவு கிரீம் டீ தூளுடன் ஐஸ் கட்டிகளை சேர்த்து உங்கள் சருமத்திற்கு தவறாது மசாஜ் செய்து வர, சருமத்தில் காணப்படும் தழும்புகள் மறையும்.

1 2 3 4 5 6 7 8 9 10 ... 21 22

AD's



More News