25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >> ராஜபாளையம் கோதண்ட ராமசாமி கோயில்  பிரம்மோற்ஸவ கொடியேற்றம். >> புது பஸ் ஸ்டாண்டிலிருத்து  ராஜபாளையத்தில் இணைப்பு சாலை திறப்பு . >>


அழகுக் குறிப்பு

Oct 28, 2025

உடல் எடையை குறைக்க .....

கேரட் புதினா மற்றும் பீட்ரூடை சேர்த்து அரைத்து சிறிது நீர், எலுமிச்சை சாறு, சிறிது உப்பு சேர்த்து குடிக்க வேண்டும்.தொடர்ந்து குடித்து வந்தால் கொழுப்புகள் விரைவாக கரைய தொடங்கி உடல் எடை ஒரே வாரத்தில் குறைய தொடங்கும். அதேபோல், தக்காளி, புதினாமற்றும் பீட்ரூட்டை சேர்த்து அரைத்து. எலுமிச்சை சாறு, உப்பு கலந்து தொடர்ந்து குடித்து வந்தால் உடல் எடை குறையும்.தக்காளி அதிகமாக உணவில் சேர்க்கும் பொழுது உடல் எடை குறைய வாய்ப்புள்ளது. காலையில் உள்ள அமினோ அமிலம் கொழுப்பை குறைத்து உடல் எடையை குறைக்கும். ஆனால் நாம் தக்காளியை சமைத்து சாப்பிடாமல் அப்படியே பச்சையாக சாப்பிட வேண்டும், அப்பொழுது மட்டுமே முழு பலன் கிடைக்கும்.கலோரிகள் மிகக் குறைவாக உள்ள தர்பூசணியை அதிகப்படியாக சாப்பிடும் பொழுது உடல் எடை எளிதில் குறைக்க முடியும். வெள்ளரிக்காயில் வைட்டமின் கே அதிகமாக இருப்பதால் உடல் ஆன்ட்டி ஆக்சிடென்ட், விட்டமின்கள், கொழுப்பை குறைக்கும் உட்பொருட்கள் கொண்ட எலுமிச்சை பழத்தை தினமும் ஒன்று என நம் உணவில் சேர்க்கும் பொழுது எளிதில் உடல் எடையை குறைக்க முடியும்.விட்டமின் சி, நீர்ச்சத்து, ஆன்ட்டி ஆக்சிடென்ட் நிறைந்த ஆரஞ்சு பழம் தினமும் ஒன்று சாப்பிடும் விதத்தில் உடல் எடையை குறைக்க முடியும்.உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் முந்தைய நாள் இரவே ஒரு தேக்கரண்டி வெந்தயத்தை தண்ணீரில் ஊற வைத்து மறுநாள் காலை வெறும் வயிற்றில் குடித்து வரும் பொழுது உடலில் நல்ல மாற்றம் தெரியும்.எடையை குறைக்க உதவுகிறது.

Oct 20, 2025

இளம் வயது நரைக்கு ஆயில்..

தேவையான பொருட்கள்- கருவேப்பிலை -2 கைப்பிடி மருதாணி - 2 கைப்பிடி செம்பருத்தி இலை -15 வெந்தயம் - 2 ஸ்பூன் சின்ன வெங்காயம் -10 பெரிய நெல்லிக்காய் -1 மேலே குறிப்பிட்டுள்ள அனைத்தையும் அரைத்து ஒரு பத்திரத்தில் போட்டு அடுப்பில் வைத்து கிளற வேண்டும் இப்போது அதன் தண்ணி சத்து வெளியே வந்த பின்பு எடுத்து வைத்திருக்கும் தேங்காய் எண்ணெய் எடுத்து ஊற்ற வேண்டும். இப்போது இது நன்கு கொதித்த பின்பு 4-5 நாட்கள் அப்படியே விட்டு விட வேண்டும். பிறகு வடிகட்டி இதை பயன்படுத்தினால்  இளநிறை இருக்கிறவர்களுக்கு இது  அருமையான தீர்வாக இருக்கும் 

Oct 14, 2025

எண்ணெய் பசையுள்ள சரும பராமரிப்பு …

தேன், ஆரஞ்சுப் பழச்சாறு, ரோஸ் வாட்டர், முல்தாணிமட்டித்தூள் ஆகியவற்றை ஒவ்வொன்றும் தலா ஒரு தேக்கரண்டி அளவு எடுத்து பேக் போட்டு நன்கு காய்ந்த பின்பு கழுவி வர சருமம் பொலிவு பெறும்.வெள்ளரிச்சாறு 4 தேக்கரண்டி, தேன் 1 தேக்கரண்டி, எலுமிச்சைச் சாறு 1 தேக்கரண்டி இம்மூன்றையும் கலந்து முகம் மற்றும் கழுத்தில் தடவி வர பருக்கள் மறைவதோடு நல்ல நிறத்தையும் கொடுக்கும்.எண்ணெய் பசையுள்ள சருமத்தில் துவாரங்கள் பெரிதாக இருக்கும். இதற்கு தக்காளிச்சாறு ஒரு தேக்கரண்டி எடுத்து அத்துடன் எலுமிச்சைச் சாற்றை சேர்த்து பேக் போட்டு 20 நிமிடம் கழித்து கழுவி வர துவாரங்கள் இறுக்கமாகும்.நன்றாக பழுத்த வாழைப்பழத்தில் சில துளிகள் எலுமிச்சைச் சாற்றை கலந்து நன்றாக மசித்து பேக் போட்டு 15 நிமிடங்கள்  கழித்து முகம் கழுவவேண்டும்

Oct 08, 2025

இயற்கையாக முகத்தில் உள்ள தேவையற்ற முடிகளை நீக்க உதவும் மாவு.

 தேவையான பொருட்கள்- கோதுமை மாவு - 2 ஸ்பூன் பால் - 1 ஸ்பூன் மஞ்சள் தூள் - 1 சிட்டிகை தண்ணீர் - தேவையான அளவு பயன்படுத்தும் முறை- முதலில் ஒரு கிண்ணத்தில் கோதுமை மாவு, பால் மற்றும் மஞ்சள் தூளை சேர்த்துக்கொள்ளவும் பின் அதில் சிறிது நீரை ஊற்றி சற்று கெட்டியான பேஸ்ட் போல் கலந்து கொள்ள வேண்டும். அடுத்து அதை முகத்தில் தடவி 10-15 நிமிடம் காய வைக்க வேண்டும். இதற்கடுத்து முகத்தில் மென்மையாக ஸ்க்ரப் செய்ய வேண்டும். இப்படி செய்யும் போது சருமத்தில் உள்ள முடிகள் நீங்கும். அதன் பின் மூகத்தை வெதுவெதுப்பான நீரால் கழுவி, உலர்த்த வேண்டும் இந்த பேக்கை வாரத்திற்கு 2-3 முறை பயன்படுத்தி வர முகத்தில் உள்ள முடிகள் நீங்கும்.

Oct 06, 2025

உதடுகளின் கருமையை நீக்க....

உதடுகளின் கருமையை நீக்க, குங்குமப்பூவை பச்சைப் பாலில் அரைத்து உதடுகளில் தேய்க்கவும். இதன் பயன்பாடு உதடுகளின் கருமையை நீக்குவது மட்டுமல்லாமல், முன்பை விட கவர்ச்சிகரமானதாகவும் இருக்கும்

Oct 04, 2025

முகப்பொலிவை தரும் பீட்ரூட்.

சரும வறட்சியை போக்கும் உருளைக்கிழங்கு. கருவளையத்தை நீக்கும் வெள்ளரி. பொடுகைப் போக்கும் எலுமிச்சை. நரைமுடிகளைப் போக்கும் நெல்லிக்காய். முகத்தை பளபளப்பாக்கும் கொத்தமல்லி இலை. உதட்டிலுள்ள கருமையைப் போக்கும் புதினா இலை. தலைமுடியை கருமையாக்கும் கறிவேப்பிலை. முகத்தை பொலிவுடன் வைக்கும் ஆப்பிள். வசீகர அழகை தரும் ஆரஞ்சு. தோல் சுருக்கத்தைப் போக்கும் மாதுளை.

Oct 03, 2025

உ டல் பருமன் குறைய ...

 சிலர் உடல் எடை அதிகமாக இருப்பதால் உடலை நினைத்து மிகவும் வருந்துவார்கள். இந்த நிலையை போக்குவதற்கு கருமிளகு தூள் 1/4 தேக்கரண்டி, எலுமிச்சை சாறு 3 தேக்கரண்டி, தேன் 1 தேக்கரண்டி மூன்றையும் நீரில் நன்றாக கலந்து உடல் எடை அதிகம் உள்ளவர்கள் 3-4 மாதம் வரை தொடர்ச்சியாக குடித்து வர விரைவில் உடல் எடை மாற்றம் அடையும்.இதுமட்டும் இல்லாமல் 3-4 மாதங்கள் வரை காலை உணவிற்கு முன்பு தினமும் 1 தக்காளி சாப்பிட்டுவர உடல் எடையானது குறைவதை நீங்களே அறியலாம்.அடுத்து உடல் எடையினைகுறைப்பதற்கு முழுமையாக கருவேப்பிலை இலையினை 10 முதல்  12 இலைகளை சாப்பிட்டு வர 3 அல்லது நான்கே மாதங்களில் உடல்  எடை முற்றிலுமாக மெலிவடைந்துவிடும்.

Sep 23, 2025

பாத வெடிப்புகள் மறைய....

உடலில் நீர்ச்சத்து குறைந்தால் பாதங்களில் வறட்சி காணமாக வெடிப்பு உண்டாகும். உடல் எடை அதிகரித்தாலும் அழுத்தம் ஏற்பட்டு பாத வெடிப்பு உண்டாகும். இதற்கு மருதாணி இலைகள் சிறந்த தீர்வைத் தரும். குளிர்ச்சி தன்மையுடைய மருதாணி இலைகளை அரைத்து வெடிப்புகள் உள்ள இடங்களில் தடவி உலர்ந்த பிறகு கழுவிவர வெடிப்புகள் மறைந்துவிடும்.

Sep 22, 2025

உடலில் ஏற்படும் வெளுப்பு .

உடலில் ஏற்படும்வெளுப்பு மற்றும் தேமல் நோய் குணமாக சிறந்த மருத்துவகுணம் உள்ள வெள்ளை பூண்டை, வெற்றிலை சேர்த்து ,மசிய அரைத்து ,தினமும் பாதிக்கப்பட்ட இடத்தில் தேய்த்துக்குளித்து வர நல்ல மாற்றம் எற்படும்.பூவரச மரத்தில் காய்களை அம்மியில் உரசி வரும் மஞ்சள் நிறப் பாலை முகத்தில் தேமல் உள்ள இடங்களில் பூசி வர முகத்தில் காணும் தேமல் அகலும்.அருகம்புல் உடல் நலத்திற்கும், இரத்தத்தை சுத்தம் செய்யவும் மிக முக்கியமாக பயன்படுத்தப்படுகிறது. அருகம்புல், கஸ்தூரிமஞ்சள் , மருதோன்றி போன்றவற்றை அம்மியில் வைத்து அரைத்து பூச தேமல் விரைவாக குணமாகும்.நாயுருவி இலை சாறை தடவி வந்தால் தேமல், படை குணமாகும். இந்த நாயுருவி இலையானது எளிதாக கிராமப்புறங்களில் கிடைக்க கூடியது. அவ்வாறு கிடைக்கவில்லை என்றால், நாட்டுமருந்து கடைகளில் வாங்கி பயன்படுத்திக் கொள்ளலாம்.

Sep 20, 2025

டை போடாமல் தலைமுடி கருப்பாக....

கொய்யா இலை10,5 செம்பருத்தி அரைத்து சாறு எடுத்து கடுகு வெந்தயம் பொன்னிறமாக வறுத்து தூளாக்கி இரண்டு ஸ்பூன் கரிசலாங்கண்ணி பொடியை இரண்டு ஸ்பூன் கொய்யா சாற்றில் கலந்து தேவைக்கு நீரிட்டு ,நன்கு தடவி அரை மணி நேரம்ஊறவைத்து மாதத்தில் ஒரு முறை குளித்தாலே போதும் தலை முடி நன்கு கருப்பாக ஆகும், டை தேவையில்லை.

1 2 3 4 5 6 7 8 9 10 ... 24 25

AD's



More News