ரோஜா FACE PACK.
மென்மையான, அழகான, மருத்துவக்குணம்நிறைந்தபூக்களைக்கொண்டுமுகத்தையும், சருமத்தையும், அழகாக்க முடியும். பூக்களில் வைட்டமின்கள், புரதங்கள், சத்துக்கள் நிறைந்துள்ளன. எளிய முறையில், குறைந்த செலவில், முகத்தின் அழகை பூக்களால் பாதுகாக்கலாம். சருமத்திற்கு அழகுத் தரும் பூக்களை பற்றி அறிந்துக் கொள்வோம்.
ரோஜா
இன்றும் அழகு சாதனங்கள் அனைத்திலும், ரோஜாவின் பங்கு அதிகமாக இருக்கிறது. ரோஜாவின் நிறம் கிடைத்தால் மிகவும் மகிழ்ச்சியாக தானே இருக்கும்.
ரோஜா இதழை பறித்து நிழலில் உலர்த்தி பொடித்து வைத்துக் கொள்ள வேண்டும். இதற்கான பேஸ்ட் தயாரிக்க...
ரோஜா பொடி _ 4 ஸ்பூன் வெந்தயப் பொடி _2 ஸ்பூன் தயிர் _தேவைக்கு
இந்த மூன்றையும் பேஸ்ட் போல குழைத்து முகத்தில் தடவி 15 நிமிடங்கள் கழித்து முகத்தை குளிர்ந்த நீரில் கழுவவும். இதனால் முகத்தில் இருக்கும் தழும்பு களும், கரும்புள்ளிகளும் நீங்கும். முக்கியமாக கரடு முரடான முகம் பளபளப்பாக பளிச்சென்று இருக்கும். தினமும் இதை செய்யலாம்.
0
Leave a Reply