ருசியான வெண்டைக்காய் தோசை
தேவையான பொருட்கள் - புழுங்கல் அரிசி 3 கப், உளுந்தம் பருப்பு 2 டேபிள் ஸ்பூன், வெந்தயம் 1 டீஸ்பூன், வெண்டைக்காய் 15, உப்பு தேவையான அளவு.
செய்முறை அரிசி, பருப்பு, வெந்தயம், நன்றாகக் கழுவி5 மணி நேரம் ஊறவைக்கவும். வெண்டைக்காய் பொடியாக வெட்டிக் கொள்ளவும். தண்ணீர் வடித்து விட்டு அரிசி கலவை, வெண்டைக்காய், சேர்த்து நைசாக அரைத்து கொள்ளவும். பின் உப்பு சேர்த்து கரைத்து 10 மணி நேரம் மூடி வைக்கவும். பின் தோசை வார்க்கவும், வெண்டைக்காய் தோசை ருசியாக இருக்கும். இதற்கு எள்ளுப் பொடி, எள்ளுச் சட்னி, தேங்காய் சட்னி, சுவையாக இருக்கும்.
0
Leave a Reply