வெண்டைக்காய் வத்தல் குழம்பு
தேவையான பொருட்கள்: - 1/2 கப் வெண்டைக்காய் வற்றல்,1/2கப் சாம்பார் வெங்காயம்,10 பல் பூண்டு,1 தக்காளி,1டீஸ்பூன் மிளகாய் தூள்,1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள்,1டேபிள்ஸ்பூன் தனியாத்தூள், 1/2டீஸ்பூன் சீரகத் தூள், 1கப் புளி கரைசல்
அரைப்பதற்கு - 1டேபிள்ஸ்பூன் பச்சரிசி, 1/4 டீஸ்பூன் வெந்தயம்,1/4கப் தேங்காய்
தாளிக்க - 3டேபிள்ஸ்பூன் நல்லெண்ணெய்,1/4 டீஸ்பூன் கடுகு கறிவேப்பிலை, மிளகாய் வற்றல்
செய்முறை -
வெண்டைக்காய் வற்றல் குழம்பு செய்ய தேவையான பொருட்களை எடுத்து தயாராக வைத்துக் கொள்ளவும். புளியை கரைத்து வைத்துக் கொள்ளவும்.
வெங்காயம், பூண்டு, தக்காளியை பொடியாக நறுக்கி வைத்துக்கொள்ளவும்.
வாணலியை ஸ்டவ்வில் வைத்து நல்லெண்ணெய் சேர்த்து காய்ந்ததும், வெண்டைக்காய் வற்றல் சேர்த்து பொன்னிறமாக வதக்கி எடுத்து வைக்கவும்.
பச்சரிசி, தனியா, வெந்தயத்தை வரும் வாணலியில் வறுத்துக் கொள்ளவும்.
சூடாறியவுடன் மிக்ஸி ஜாரில் சேர்த்து, தேங்காய்,கொஞ்சம் தண்ணீர் சேர்த்து விழுதாக அரைக்கவும்.
பின்னர் வாணலியில் எண்ணை சேர்த்து காய்ந்ததும் கடுகு, வெந்தயம், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
கடுகு பொரிந்ததும் நறுக்கி வைத்துள்ள வெங்காயம், பூண்டு, மிளகாய் வற்றல் சேர்த்து வதக்கவும்.
பின் நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்கி, மஞ்சள் தூள், உப்பு சேர்த்து வதக்கவும்.
தக்காளி நன்கு வதங்கியதும் தனியாத்தூள், சீரகத்தூள், மிளகாய் தூள், சேர்த்து நன்கு வதக்கவும்.
அத்துடன் வறுத்து வைத்துள்ள வெண்டைக்காய் வற்றலை சேர்க்கவும்.
வெண்டைக்காய் வற்றல் ,மசாலா நன்கு வதக்கியதும் கரைத்து வைத்துள்ள புளிக்கரைசல் சேர்த்து வதக்கி, தேவையான அளவு உப்பு, தண்ணீர் சேர்த்து ஐந்து நிமிடங்கள் கொதிக்கவிடவும்.
பின்னர் அரைத்து வைத்துள்ள தேங்காய் விழுது சேர்த்து கலந்து மேலும் இரண்டு நிமிடங்கள் கொதிக்க வைக்கவும்.
குழம்பு நன்கு கொதித்து எண்ணை பிரிந்து வரும் போது கடுகு வற்றல் தாளித்து சேர்த்து, மல்லி இலை தூவி இறக்கவும்.
இப்போது தயாரான வெண்டைக்காய் வத்தல் குழம்பை எடுத்து ஒரு பரிமாறும் பௌலில் சேர்க்கவும்.
இந்த வெண்டைக்காய் வத்தல் குழம்பு மிகவும் அருமையான சுவையில் ,சூடான சாதத்தில் கலந்து சாப்பிட மிக மிக சுவையாக இருக்கும்.
0
Leave a Reply