கீரை போண்டா
சுவையான கீரை போண்டா சுலபமாக சட்டுன்னு செய்யலாம்... இதற்கு முருங்கைக் கீரையை உருவி, கழுவி தட்டில் பொடியாக நறுக்கி வைக்கவும். மிக்ஸி ஜாரில் பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு கொரகொரப்பாக அரைத்து தட்டில் வைத்து, அதில் பொடித்த வெங்காயத்தை கையில் மைய அழுத்தி பொடியாக உதிர்த்து சேர்த்து, இதனுடன் மிளகாய் தூள், மஞ்சள் தூள், உப்பு, பொடித்த கீரையை சேர்த்து நன்கு பிசைந்து, அதனுடன் கடலை மாவு, கோதுமை மாவு, ரவை, அரை கப் தயிர், எலுமிச்சை சாறு சேர்த்து உப்பு காரம் சரி பார்த்து, கெட்டியாக தண்ணீர் சேர்க்காமல் பிசையவும். கீரையில் உள்ள தண்ணீர் போதுமானது. ஒரு கடாயில் எண்ணெய் விட்டு உருட்டி போட்டு எடுத்தால் டீக்கடை கீரை போண்டா தயார். மாலை டிபன் ஆக சாப்பிட அருமையாக இருக்கும்.
0
Leave a Reply