பருப்பு குழம்புக்கு சிறிது சுக்கு பொடி சேர்த்தால் வாசனை மிகுந்திருக்கும். ரவா உப்புமாவிற்கு சிறிது தேங்காய் துருவல் சேர்த்தால் மென்மையாக வரும். பருப்பு வகைகளை நன்கு ஊறவைத்தால் மட்டுமே செரி மானம் சுலபமாகும். புளியை நீரில் ஊறவைக்கும் போது உப்பு போடாதீர்கள். அது கசப்பை அதிகமாக்கும். உளுத்தம் பருப்பை ஊறப் போட்டு அரைத்து கோதுமை மாவுடன் சேர்த்து முதல் நாள் இரவே கரைத்து வைத்து மறுநாள் காலை தோசை வார்த்தால் சூப்பராக இருக்கும்.
* கேரட் அல்வா செய்யும்போது நெய் குறைந்தால், போதுமான அளவில் பால் சேர்க்கவும். மென்மையாக வரும்.imagesrot *வெஜ் புலவு செய்யும்போது சிறிதளவு புதினா இலை சேர்த்தால் நல்ல வாசனையாக இருக்கும். *வெண்டைக்காய் குழம்பு செய்யும் போது, வெண்டைக்காயை சிறிது உப்புடன் வதக்கி சேர்த்தால் ஒட்டாது. * பன்னீர் புரூஜி செய்யும் போது, இறுதியில் சிறிது தேங்காய் துருவல் சேர்த்தால் பஞ்சுப் போல் மென்மையாக வரும். நெய் சாதம் சுவையாக இருக்க சிறிது கடுகு, பெருங்காயம் தாளித்து தூவவும்.
ஆப்பம் மாவில் சிறிது வெல்லம் அரைத்து கலக்கினால் மென்மையாகவும், இனிப்பு சுவையாக வும் இருக்கும். இறால் குழம்பு ருசிக்க, இறாலை சிறிது மஞ்சள் தூள், உப்பு சேர்த்து வேக வைத்து பிறகு குழம்பில் போடுங்கள். சூடான சூப் செய்யும் போது கொஞ்சம் வெண்ணெய் விட்டு பரிமாறினால் வாசனை கூடி வரும். பழங்கள் அடங்கிய பாயசத்தில் எப்போதும் பழங்களை இறுதியில் சேர்க்க வேண்டும். இல்லை என்றால் கரைந்து விடும். இடியாப்பம் செய்யும் போது, பச்சரிசி மாவை மட்டும் அல்ல சிறிது புழுங்கல் அரிசி மாவும் கலக்கவும்.
பாசிப்பயறு, கொண்டைக்கடலை சுண்டல்செய்யும்போது தேங்காய்த் துருவலுடன் சிறிது இஞ்சித் துருவல்" சேர்த்து தாளித்தால் சுவையாக இருக்கும்.பஜ்ஜி உப்பி வர சமையல் சோடா சேர்க்காமல் கொஞ்சம் இட்லி மாவு சேர்த்து பஜ்ஜி செய்தால் உப்பி வரும்.ஆப்பம் ஸ்பாஞ்ச் போல் வருவதற்கு ஒரு ஸ்பூன் மைதா மாவு ,அரை கப் பால் சேர்த்து கலந்து ஆப்பம் செய்ய ருசியும் கூடும் மெத்தென்றும் இருக்கும்.தேங்காய் பாலில் பொட்டுக்கடலையை பொடி செய்து சேர்த்து உப்பு சேர்த்து தாளித்து இறக்கினால் அவசர சட்னி ரெடி,பூரி, சப்பாத்திக்கு மாவு பிசையும்போது கொஞ்சம் கடலை மாவையும் சேர்த்து பிசைந்து சுட்டால் ருசியாக இருக்கும்.
உருளைக்கிழங்கை மணலில் வைத்தால் சீக்கிரமாக கெட்டுப்போகாது. கடலை மாவு, அரிசி மாவு இல்லாவிட்டால் கோதுமை மாவிலும் சுவையான பஜ்ஜி செய்யலாம்.பருப்புப்பொடி தயாரிக்கும் போது இரண்டு ஸ்பூன் ஓமம் சேர்த்து அரைத்தால் ,மணமாக இருக்கும். ஜீரணத்துக்கும் நல்லது.குருமாசெய்யும்போதுவெங்காயம், தக்காளி, இஞ்சி, பூண்டு,கசகசாபெருஞ்சீரகம், முந்திரியுடன், கல்பாசி, ஏலக்காய், சிறிதளவு தேங்காய் துருவல் அல்லது தேங்காய் பால் சேர்த்து வதக்கி மிக்ஸியில் அரைத்து செய்யும் குருமா தனி ருசியுடன் மணமாக இருக்கும். இட்லி தோசைக்கு தொட்டு சாப்பிட சுவையாக இருக்கும்.மசால் வடை செய்யும்போது மாவில் அரைமணி நேரம் ஊறிய ஜவ்வரிசி 4 ஸ்பூன், பாசிப்பருப்பு 3 ஸ்பூன் கலந்து வடை செய்தால், மொறுவலாகவும், சுவையாகவும் இருக்கும்.ரசத்திற்கு மிளகு, சீரகம் அரைக்கும் போது அதனுடன் சிறிது கொள்ளு சேர்த்தால், ரசத்தின் சுவை கூடும்.
ரசத்திற்கு மிளகு, சீரகம் அரைக்கும் போது அதனுடன் சிறிது கொள்ளு சேர்த்தால் ரசத்தின் சுவை கூடும்.மாங்கொட்டைகளை தூர எறிந்து விடாமல், உப்பு தடவி வெயிலில் நன்றாக காய வைத்து எடுத்துக்கொள்ள வேண்டும். புளி இல்லாமல் ரசம் தயார் செய்து, அந்த ரசம் கொதிக்கும் போது இரண்டு மாங்கொட்டைகளை போட்டு, ஒரு கொதி வந்ததும் இறக்கி விட்டால், ரசம் சாப்பிட சுவையாக இருக்கும்.மட்டன் குழம்பு வைக்கும்போது அதில் தேங்காய் சிரட்டை போட்டு வேகவைத்தால் சீக்கிரம் வெந்துவிடும்.பீன்ஸ், முட்டைக்கோஸ்,கூட்டு செய்யும்போது தேங்காய்,சீரகம் அரைத்து சேர்த்தால் ருசியாக இருக்கும்.குலோப் ஜாமூன் ஜீரா மீந்து விட்டால் பாயசம் செய்யும் போது சர்க்கரைக்கு பதிலாக ஜீராவை கலந்து கொண்டால் மிகவும் ருசியாக இருக்கும்.
வெந்தயம், பூண்டு, தேங்காய்ப்பால் சேர்த்த கஞ்சிக்கு வெந்தயத்தை வறுக்க கூடாது.வறுக்காமல் சேர்த்தால் கசப்பு இருக்காது.பூரி கிழங்கு செய்யும் போது கடலை மாவு இல்லாவிட்டால் பொட்டுக்கடலை பொடி செய்துபோடலாம்.மிளகு பொங்கல் செய்யும் போது பாசிப்பருப்பு லேசாக வறுத்து செய்தால் வாசமாக இருக்கும்.சிறிது இட்லி மாவு சேர்த்தால் பஜ்ஜி உப்பி வரும், உடலுக்கு கெடுதல் கிடையாது.காய்ந்த எலுமிச்சை, ஆரஞ்சு தோல்களை அலமாரிகளில் போட்டு வைத்தால் பூச்சிகள் வராது.
பாயாசத்திற்கு திராட்சைக்கு பதிலாக பேரிச்சம் பழத்தை பொடியாக நறுக்கி நெய்யில் பொரித்து போட்டால் சுவையாக இருக்கும்.சப்பாத்தி, பூரி செய்யும் போது கோதுமை மாவுடன் சோறு வடித்த கஞ்சியை சேர்த்து மாவு பிசைந்தால் சப்பாத்தி, பூரி சுவை கூடுதலாக இருக்கும்வெங்காய அடை செய்யும் போது சின்ன வெங்காயத்தை பொடியாக நறுக்கி எண்ணெயில் வதக்கி பின் மாவில் கலந்து அடை செய்தால் வாசனை கமகமவென மூக்கை துளைக்கும்..உப்புமாமீதமானால்அதனுடன் சிறிது அரிசிமாவு பொடிதாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், மல்லி இலை, கறிவேப்பிலை, இஞ்சி தேவையான உப்பு சேர்த்து வடை செய்ய அருமையான ஈவ்னிங் ஸ்னேக்ஸ் ரெடிஒரு கைப்பிடி முருங்கைக்கீரை மற்றும் 2Tbs தேங்காயை நெய்யில் வதக்கி அரைத்து சாம்பாரில் சேர்த்து கொதிக்க விட்டால் சாம்பார் நல்ல மணம், சுவையுடன் இருக்கும்
எலுமிச்சைப்பழம் உலர்ந்து விட்டால் கொதி நீரில் ஐந்து நிமிடம் போட்டு பிறகு சாறு பிழிந்தால் நிறைய சாறு கிடைக்கும்.நறுக்கி வைத்த வெங்காயத்தில் சிறிதளவு வெண்ணெய் கலந்து வைத்தால் நீண்ட நேரம் பிரஷ்ஷாக இருக்கும்.புளியை அவ்வப்போது கரைத்துக் கொண்டிருப்போம்.இதனால் மீதம் உள்ள புளி வீணாகும். இதனை தவிர்க்க புளி பேஸ்ட் தயார் செய்து வைத்துக் கொள்ளலாம்.பச்சை மிளகாயின் காம்பு பகுதியை நீக்கி விட்டு ஒரு காற்று புகாத டப்பாவில் போட்டு வைத்தால் நீண்ட நாட்களுக்கு கெடாமல் அப்படியே பிரஷ்ஷாக இருக்கும்.இறாலைசமைக்கும்போது 1013 நிமிடங்கள்மட்டுமேவேகவைக்கவேண்டும்அப்படிவேகவைத்தால்இறால்மென்மையாகவும், சுவையாகவும் இருக்கும்.
மின்சார பிரஷர் குக்கர்கள் பாரம்பரிய முறைகளை விட வேகமாக உணவை சமைக்கின்றன. இதனால் நேரம் மற்றும் ஆற்றல் மிச்சமாகிறது. வழக்கமான கேஸ் அடுப்பில் சமைப்பதை விட குறைவான ஆற்றலே பயன்படுத்துகிறது. விரைவான சமையல் செய்முறை மற்றும் மூடி அமைப்பு உள்ளதால், உணவின் விட்டமின்கள் மற்றும் தாதுக்களை பாதுகாக்க உதவுகிறது. பிரஷர் குக்கர்கள் துருப்பிடிக்காத எஃகு மற்றும் அலுமினியம் போன்ற பல்வேறு பொருட்களில் கிடைக்கின்றன. இவை நீடித்து உழைக்கும் தன்மை வாய்ந்தவை.சமைக்கும்போது அதிக ஸ்டார்ச்சை வெளியிடும் ஒரு உணவாக பாஸ்தா இருக்கிறது. எனவே, இதை ஒருபோதும் குக்கரில் சமைக்க வேண்டாம். ஒரு பாத்திரத்தில் சமைத்த பிறகு அதிகப்படியான தண்ணீரை வடிகட்டுவது ஆரோக்கியத்திற்கு நல்லது.