25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >> இராஜபாளையம் நாடார் மேல்நிலைப்பள்ளியில் மாநில வாலிபால் போட்டி >> இராஜபாளையம் சஞ்சீவி மலையில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் வனத்துறை வீரர்கள். >> ராஜபாளையத்தில் மழை பொய்த்து கடும் வெயிலால் மக்காச்சோள பயிர்கள் நாசம் >> இராஜபாளையம் ராம்கோ குருப் ராமராஜு சர்ஜிகல் காட்டன் மில்ஸ் லிட், சுதர்சனம் ஸ்பின்னிங் மில்ஸ் நூற்பாலைகளில் பணி புரியும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது >> M.B. ராதாகிருஷ்ணன் நினைவாக வாழ்நாள் சாதனையாளர் விருது >> இராஜபாளையம்  ரோட்டரி சங்கம், M.V.பீமராஜா ஜானகியம்மாள் அறக்கட்டளை மற்றும் நாற்று இலக்கிய அமைப்பு நடத்திய "யானைகள் திருவிழா" >>


சமையல் குறிப்பு

Aug 05, 2024

வேர்க்கடலை சட்னியில் வேர்க்கடலையுடன் சிறிது  பொட்டுக்கடலையும் சேர்த்து செய்தால் மிகவும் சுவையாக இருக்கும்.

தக்காளிசாதம்செய்யும்போதுசிறிதுபச்சைமிளகாய், தக்காளி, இஞ்சிஅரைத்துஊற்றினால்தக்காளிசாதமவாசனையாகவும், சுவையாகவும் இருக்கும்.சாம்பாருக்கு துவரம் பருப்பை வேக வைக்கையில் சிறிதளவு வெந்தயத்தையும் சேர்த்தால் சாம்பார் இரவு வரை கெடாமல் இருக்கும் வேர்க்கடலை சட்னியில் வேர்க்கடலையுடன் சிறிது  பொட்டுக்கடலையும் சேர்த்து செய்தால் மிகவும் சுவையாக இருக்கும்.எலுமிச்சம் பழத்தை கொதிக்கும் தண்ணீரில் போட்டு பின்னர் எடுத்து பிழிந்தால் எலுமிச்சை சாறு  கொஞ்சம் அதிகமாக கிடைக்கும்.வெண்டைக்காயை துணியால் சுற்றி அதனை பாலிதீன் கவரில் வைத்து குளிர்பதனப் பெட்டியில்வைத்தால்  நீண்ட நாட்களுக்குக் கெடாது.

Jul 30, 2024

கார சுண்டல் செய்யும் போது....

கொண்டைக்கடலை,பட்டாணி போன்ற மசாலா சுண்டல் (கார சுண்டல்) செய்யும் போது குழந்தைகள் காரமாக இருந்தால் சாப்பிட மாட்டார்கள். அதில்எலுமிச்சை சிறிது பிழிந்து கலந்துவிட்டு கேரட் துருவல்,கருவேப்பிலை,கொத்தமல்லி தழை நைசாக நறுக்கி சேர்த்து கிளறி கொடுக்கலாம். (அ) ​​கார சுண்டலில் சீஸ் துருவி சேர்த்து குழந்தைகளுக்கு கொடுத்தால் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள்.வாழை இலைக்கு நடுவே இருக்கும் தண்டை, சின்னதாக வெட்டி, எண்ணெயில் போட்டு, பின்பு பலகாரங்கள் சுட்டு எடுத்தால், பலகாரங்கள் அதிக எண்ணெய் குடிக்காது.உளுந்தம் பருப்பை வாங்கியதும் அதை முறத்தில் போட்டு தட்டினால் மாவு மாதிரியான பொருள் வெளியே றும். தட்டிய பிறகு டப்பாவில் வைத்தால் வண்டு வராது.பூண்டில் புழு வராமல் இருக்க அதில் கேழ்வரகை சிறு மூட்டையாக கட்டிப் போடலாம்.தேங்காயை உடைத்ததும், கண் உள்ள பாகத்தை முதலில்  உபயோகித்து விட வேண்டும். அந்தப் பகுதிதான் விரைவில் கெட்டுப்போகும்.

Jul 29, 2024

உணவுப் பொருட்களில் பூச்சி வராமல் இருக்க …..

மைதா, ரவா டப்பாக்களில் கல் உப்பை ஒரு துணியில் முடிந்து போடலாம். உலர்ந்த வேப்பிலை போடலாம். கசக்காது. புழு பூச்சி வராது. சுக்குத்தூளும் தூவலாம்.இஞ்சி, பூண்டு, விழுது தயாரிக்க இரண்டையும் 2க்கு மூன்று என்ற விகிதத்தில் சேர்க்க வேண்டும். இஞ்சியை குறைவாக பயன்படுத்தினால் பண்டம் ருசியாக இருக்கும்.வடை, போண்டா போன்றவற்றை எண்ணெயில் பொரிக்கும் போது, ​​அதிக எண்ணெய் குடிக்காமல் இருக்க, எண்ணெய் காயும்போது சிறிது உப்பு போட்டால் எண்ணெய் குடிக்காமல் இருக்கும்.தக்காளி சூப் செய்யும் போது நன்றாக வேகவைத்த பீட்ரூட் துண்டு ஒன்றை அதில் போட்டால் சூப் பார்ப்பதற்கு அழகாக இருக்கும்.சூப் பருகவும் சுவையாக இருக்கும்.ஜவ்வரிசி, ரவை இரண்டையும் சம அளவு எடுத்து வறுத்து, அதில் பால் சேர்த்து வேகவிட்டு,வெல்லபாகு  சேர்த்து, நெய்விட்டுக் கிளறினால், சுவையான சர்க்கரைப் பொங்கல் தயார்.

Jul 23, 2024

ரசம் தாளிக்கும் போது சிறிது வெந்தயம்போட்டு ரசம் தாளித்தால் மணமாக இருக்கும்.

வாழைப்பூவைப் பொடிப்பொடியாக நறுக்கி அத்துடன் முருங்கைக் கீரையையும் சேர்த்து வதக்கி அடிக்கடி சாப்பிட்டால் குடற்புண் குணமாகும்.முடக்கத்தான் கீரை கிடைக்கும் காலத்தில் வாங்கி உலரவைத்து இட்லி மிளகாய்ப் பொடி செய்யும்போது அதைக் கலந்து அரைத்து பயன் படுத்தினால், மூட்டு வலி குறையும்.வெங்காயச் சட்னி கசக்காமல் இருக்க , வெங்காயத்தை சிறிது எண்ணெய் விட்டு வதக்கிய பின் அரையுங்கள். சட்னி கசக்காமல் இருக்கும். ரசம் தாளிக்கும் போது சிறிது வெந்தயம்போட்டு ரசம் தாளித்தால் மணமாக இருக்கும். மோர் குழம்பு தாளிக்கும் போது தேங்காய் எண்ணெய் விட்டு தாளித்தால் மோர் குழம்பு மணமாக இருக்கும்.

Jul 17, 2024

தயிர் வெங்காயம் ருசியாக இருக்க

தயிர் வெங்காயத்திற்கு வெங்காயம் தோலை உரித்து விட்டு,வெங்காயத்தை கழுவி பின் வெட்டவும்.வெட்டிய பின் வெங்காயத்தை கழுவினால் தயிர் வெங்காயம் ருசியாக இருக்காது.ரசத்திற்கு மிளகு சீரகம் பூண்டை இடித்து போட்டு ரசம் வைத்தால் ரசம் வீடே கமகமக்கும் .சட்னிக்கு குழம்புக்கு வெங்காயம் தக்காளியை ஒன்றாக போட்டு வதக்க கூடாது வெங்காயத்தை வதக்கிய பின் தக்காளியை வதக்கினால் வெங்காயம் பச்சை வாசனை வராது.தயிர்சாதம் செய்யும் போது அதிக பால் ஊற்றி கொஞ்சம் தயிர் சேர்த்து கிளறவும் அப்பதான் தயிர்சாதம் புளிக்காமல் இருக்கும் கிளறும் போது கொஞ்சம் தண்ணியாக கிளறினால் தான் சாதம் சிறிது நேரம் கழித்து கெட்டியாகி விடும்.அரைத்து ஃப்ரிட்ஜில் வைத்த மாவு ஒரு வாரம் ஆனால் கூட கெட்டுப் போகாமல் அப்படியே இருக்க வேண்டும் என்றால் , மாவை அரைத்து ஃப்ரிட்ஜில் வைக்கும் பொழுது ஒரு வெற்றிலையை அதில் போட்டு வைத்து விடுங்கள்.வெற்றிலையை போடும் போது அதன் காம்பு பகுதி மாவின் உள்ளே இருக்கும் படி போட்டுக் விடுங்கள். இப்படி ஸ்டோர் செய்து வைத்தால் ஒரு வாரம் கூட  மாவு புளிக்காமல் அப்படியே இருக்கும்.

Jul 15, 2024

நெய் நல்ல மணமாக இருக்க.... 

வெண்ணெயை காய்ச்சி இறக்கும்போது கடைசியில் ஒரு ஸ்பூன் வெந்தயம் போட்டுவிடுங்கள். நெய் நல்ல மணமாகவும் இருக்கும் கசக்கவும் செய்யாது.வெங்காயத்தைத் தோலோடு குளிர்ந்த நீரில் போட்டு பின்னர் நறுக்கினால் கண்களில் கண்ணீர் வராது.பச்சை மிளகாய் ஒரு மாத காலத்திற்கு மேலாக கெடாமல் இருக்க ஒரு காகித கவரில் சிறிய துளையிட்டு, பச்சை மிளகாய்களை அதில் போட்டு ஃபிரிட்ஜில் வைக்கவும்.தோசைக்கு ஊற வைக்கும்போது1 கிலோவிற்கு50 கிராம் வேர்க்கடலை,50 கிராம் பட்டாணி சேர்த்து ஊற வைத்து அரைத்து மாவுடன் கலந்து தோசை வார்த்தால் நிறமான.  சுவை அதிகமான சத்து நிறைந்த தோசை ரெடி .தயிர் பச்சடி, சாலட் என்று எது செய்தாலும். தேங்காய் எண்ணெயில் கடுகு கறிவேப்பிலை தாளித்துக் கொட்டினால் வாசனை  தூக்கலாக இருக்கும்.

Jul 09, 2024

டீ போடும்போது, முதலில் தண்ணீருடன் தேவையான சர்க்கரையை சேர்த்துக் கொதிக்கவிடுங்கள்

தேங்காய் முடியை தண்ணீரில் வைத்தால் அல்லது முடியில் சிறிது உப்பை தடவி வைத்தால் கெடாமல் இருக்கும்.டீ போடும்போது, முதலில் தண்ணீருடன் தேவையான சர்க்கரையை சேர்த்துக் கொதிக்கவிடுங்கள், பின்னர், டீ த்தூள் போட்டு வடிகட்டி சூடான பால் சேர்த்தால். திக்காகவும் சுவையாகவும் இருப்பதோடு பாத்திரமும் கருக்காது..டீ த்தூள் வைத்திருக்கும் பாட்டிலில் உபயோகித்த ஏலக்காய் தோல்களைப் போட்டு வைத்திருந்தால் டீ ஏலக்காய் மணத்தோடு சுவையாக இருக்கும்.குக்கரில் பருப்பை சமைக்கும்போது ஒரு டீஸ்பூன் மஞ்சள் தூளையும், ஒரு தேக்கரண்டி நெய்யையும் அதற்குள் சேர்த்துவிடுங்கள். அதிலிருந்து வரும் மணத்திற்கே அனைவரும் ஒரு பிடி பிடித்துவிடுவார்கள்.முட்டைக்கோஸை சமைக்கும் போது ஒரு துண்டு இஞ்சியையும் சேர்த்து சமைத்தால் அதன் மணம் மாறாமல் இருக்கும்.

Jun 20, 2024

தேங்காயை சரிபாதியாக உடைக்க தண்ணீரில் நனைத்து பின்னர் உடைக்க வேண்டும்.

முள்ளங்கி சமைக்கும் போது லேசாக வதக்கி சமைத்தால், எளிதில் சளி பிடிக்காது.பழம், ஃப்ரூட் சாலட், ஜூஸ் ஆகியவற்றின் சுவையை அதிகரிக்க சிறிதளவு தேன் சேர்க்கலாம்தேங்காயை சரிபாதியாக உடைக்க தண்ணீரில் நனைத்து பின்னர் உடைக்க வேண்டும்.இனிப்புகள் தயாரிக்கும்போது சர்க்கரைக்குப் பதில் வெல்லம் அல்லது தேன் ஏதாவது ஒன்றைப் பயன்படுத்தினால் சுவை கூடுதலாக இருக்கும்.எலுமிச்சம்பழம் உலர்ந்துவிட்டால் கொதிநீரில் ஐந்து நிமிடம் போட்டு பிறகு சாறு பிழிந்தால் நிறையச் சாறு கிடைக்கும்.

Jun 17, 2024

புளி காய்ச்சலுக்கு, புளியை கெட்டியாக கரைக்க வேண்டும்.

புளி காய்ச்சலுக்கு, புளியை கெட்டியாக கரைக்க வேண்டும். குருமாவை இறக்கும் போது, கரம் மசாலாவை சேர்க்க வேண்டும். பச்சை கற்பூரம் டப்பாவில், நான்கு மிளகை போட்டு வைக்க வேண்டும்.இட்லி மாவில் ஆரம்பித்து பஜ்ஜி மாவு, வடைமாவு என அனைத்துமே கடைசி ஸ்பூன்வரை வீணாகாமல் இருக்க குழிவான அல்லது அடிவளைவான பாத்திரத்தில்வைத்து விட்டால் போதும், கடைசி கரண்டி வரை எளிதாக எடுத்து உபயோகிக்கலாம்..பால் காய்ச்சிய பாத்திரத்தில்சப்பாத்தி மாவு பிசைந்தால் சப்பாத்தி மிருதுவாகவும் சுவையாகவும் இருக்கும். எண்ணெய் சேர்க்க வேண்டிய அவசியமும் இல்லை!

Jun 12, 2024

பாகற்காயில் உள்ள கசப்பு தன்மை குறைய.....

பாகற்காயில் உள்ள கசப்புபோக சிறிது உப்பு சேர்த்து பிசைந்து5 நிமிடம் வைத்துவிட்டு பிறகு கழுவி விட்டு சமைத்தால் கசப்பு தன்மை குறைவாக இருக்கும்.அரைத்த மாவில் காய்ந்த' மிளகாயை போட வேண்டும். காய்ந்த மிளகாயின் காம்புகளை மாவில் படும்படி2 அல்லது3 மிளகாயை போட்டு மூட வேண்டும்.1 மணி நேரம் கழித்து பார்த்தால் மாவு' புளித்திருக்கும். ஒரு பாத்திரத்தில் சுடு தண்ணீர் வைக்க வேண்டும் அந்த சூடு தண்ணீரில் மாவு பாத்திரத்தை மேல் வைக்கவும்.1 மணி நேரம் கழித்து பார்த்தால் மாவு’ புளித்திருக்கும்.பூக்களை கவரில் வைப்பதை விட ஒரு டைட் டப்பாவில் போட்டு வைக்கலாம். வேலைக்கு செல்லும் பெண்களுக்கு காலையில் நேரம் கிடைப்பதில்லை, இதனால் கிழங்கு போன்றவற்றை முதல் நாள் இரவே வேகவைத்து கொள்ளலாம்.

1 2 3 4 5 6 7 8 9 10 ... 21 22

AD's



More News