25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >> இராஜபாளையம் நாடார் மேல்நிலைப்பள்ளியில் மாநில வாலிபால் போட்டி >> இராஜபாளையம் சஞ்சீவி மலையில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் வனத்துறை வீரர்கள். >> ராஜபாளையத்தில் மழை பொய்த்து கடும் வெயிலால் மக்காச்சோள பயிர்கள் நாசம் >> இராஜபாளையம் ராம்கோ குருப் ராமராஜு சர்ஜிகல் காட்டன் மில்ஸ் லிட், சுதர்சனம் ஸ்பின்னிங் மில்ஸ் நூற்பாலைகளில் பணி புரியும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது >> M.B. ராதாகிருஷ்ணன் நினைவாக வாழ்நாள் சாதனையாளர் விருது >> இராஜபாளையம்  ரோட்டரி சங்கம், M.V.பீமராஜா ஜானகியம்மாள் அறக்கட்டளை மற்றும் நாற்று இலக்கிய அமைப்பு நடத்திய "யானைகள் திருவிழா" >>


சமையல் குறிப்பு

Apr 05, 2024

உடைத்த தேங்காய் கெடாமல் இருக்க

எலுமிச்சை பழம் காய்ந்து விட்டால் அதனை கொதிக்க வைத்த தண்ணீரில் போட்டு பிறகு சாறு பிழிந்தால் அதிக சாறு கிடைக்கும்.உடைத்த தேங்காய் கெடாமல் இருக்க அதில் சிறிதளவு உப்பை தடவி வைத்தால் நீண்ட நாட்களுக்கு கெடாமல் இருக்கும்.அடுப்பின் கீழ் ஒரு அகலமான தட்டை வைத்து விட்டால் அடுப்பில் பால் அல்லது சாதம் பொங்கி விழுந்தால் கிழே உள்ள தட்டில் ஊற்றி விடும். இதனை நீங்கள் ஈசியாக சுத்தம் செய்து விடலாம்.நறுக்கி வைத்த வெங்காயம் நீண்ட நேரம் பிரஷாக இருக்க, அதில் கொஞ்சம் வெண்ணெய் கலந்து வைக்க வேண்டும்.காலிஃப்ளவரை சமைக்கும்போது அதில் சிறிதளவு பால் சேர்த்து சமையுங்கள். இவ்வாறு சமைத்தால் அதில் பச்சை வாடை அடிக்காது. அதுமட்டுமில்லாமல், அதனுடைய நிறமும் மாறாமல் இருக்கும்.

Apr 03, 2024

உருளைக்கிழங்கு சேப்பங்கிழங்கு வறுவல் செய்யும்போது. ....

ரவையுடன் ஒரு பங்கு கோதுமை* மாவு, இரண்டு பங்கு அரிசி மாவையும் சேர்த்து தோசை செய்தால், ரவா தோசை நன்கு முறுகலாக இருக்கும்.கிரேவி செய்யும்போது, இறக்கி வைக்கும் முன் சிறிது சர்க்கரை சேர்த்தால் சுவை கூடும்.பஜ்ஜி செய்யும் போது, பஜ்ஜி மாவுடன் புதினா, தக்காளி இரண்டையும் அரைத்து கலந்து செய்தால் மணமும், சுவையும் கூடுதலாக இருக்கும்.சேனை கிழங்கை வேக வைக்கும் முன், வெறும் பாத்திரத்தை அடுப்பில் வைத்து, சிறிது உப்பு போட்டு வெடிக்கும் வரை வறுக்கவும். பிறகு நீர் ஊற்றி கொதி வந்ததும், கிழங்கை போடவும். விரைவில் பதமாக வெந்து, பக்குவமாகவும், சுவையாகவும் இருக்கும்.உருளைக்கிழங்கு சேப்பங்கிழங்கு வறுவல் செய்யும்போது. மேலாக சிறிது ரொட்டி துாளை துாவினால், கரகரப்பாக சுவையாக இருக்கும்.

Mar 26, 2024

மிக்சி பிளேடு' கூர்மை போய்விட்டால்.....

மிக்சி பிளேடு' கூர்மை போய்விட்டால், அதில் சிறிதளவு கல் உப்பை போட்டு ஓடவிட்டால் கூர்மையாகிவிடும். காய்கறிகளை வேகவைத்த பின் உப்பு போட்டால், காய்கறிகளில் உள்ள இரும்பு சத்து வீணாகாது. இடியாப்ப மாவு பிசையும்போது கொதிக்கும் பாலை கொஞ்சம் ஊற்றி கிளறினால் இடியாப்பம் வெண்மையாகவும் மென்மையாகவும் சுவையாகவும். இருக்கும். கோழி முட்டைகளை அதிக வெப்பம் உள்ள இடத்தில் வைத்தால் விரைவில் கெட்டுவிடும். ஒரு பாத்திரத்தில் சில வேப்பிலைகளை போட்டு அதில் முட்டைகளை வைத்தால் அதிக நாள் கெடாமல் இருக்கும். இட்லி சாம்பாரில் கடைசியாக மிளகு மிளகாய். கொத்தமல்லி  வறுத்து விட்டு ,மிக்ஸியில் அரைத்து ,சாம்பாரில் போட்டால் கூடுதல் சுவையாக இருக்கும்

Mar 22, 2024

வாழைக்காயை துணி பையில் போட்டு வைத்திருந்தால்

உப்பு, மஞ்சள்,எலுமிச்சை சாறு,  வெல்லம் சேர்த்து 30நிமிடம் ஊறவைத்தால் பாகற்காய் கசக்காது 'புளித்த மோரில் வெள்ளிப் பாத்திரங்களையோ, வெள்ளி நகைகளையோ அரை மணி நேரம் ஊறப்போட்டு பின் துலக்கினால் அவை புதியவை போல இருக்கும்.வாழைக்காயை துணி பையில் போட்டு வைத்திருந்தால் ஒரு வாரம் வரை கெடாமல் இருக்கும்.தக்காளி, எலுமிச்சை, புளி சாதம் செய்கையில் சாதத்தை நல்லெண்ணெய் விட்டு கிளரி பின் செய்தால் சாதம் உதிரி உதிரியாய் இருக்கும்காப்பர் பாட்டம் பாத்திரம் மங்காமல் இருப்பதற்காக சிறிது உப்பையும், வினிகரையும் பாத்திரத்தின் மேல் பூசி துணியால் அழுத்தி தேய்த்தால் பாத்திரம் பளிச்சென்று இருக்கும்.

Mar 14, 2024

முள்ளங்கி. காலிஃபிளவர் போன்றவற்றின்இலைகளை பொடியாக நறுக்கி பருப்பு சேர்த்து கூட்டு சமைத்து சாப்பிட நன்றாக இருக்கும் 

முள்ளங்கி. காலிஃபிளவர் போன்றவற்றின்இலைகளை பொடியாக நறுக்கி பருப்பு சேர்த்து கூட்டு சமைத்து சாப்பிட நன்றாக இருக்கும்  அல்லது சூப்தயாரித்து சாப்பிடலாம் காப்பர் பாட்டம் பாத்திரம் மங்காமல் இருப்பதற்காக சிறிது உப்பையும், வினிகரையும் பாத்திரத்தின் மேல் பூசி துணியால் அழுத்தி தேய்த்தால் பாத்திரம் பளிச்சென்று இருக்கும்.பூரி மாவில் தண்ணீருக்கு பதில் பால் சேர்த்து ஊறவைத்தால் சுவையாக இருக்கும்.மிக்ஸி ஜாடியில் உள்ள பிளேடை கழற்ற இயலாமல் இருந்தால். அதை கழற்றுவதற்கு ஜாடியில் பிளேடு மூழ்கும் வரை வெந்நீர் ஊற்றி சிறிது நேரம் வரை வைக்கவும். பின்பு நீரை கீழே ஊற்றி விட்டு பிளேடு சுழற்றினால் எளிதில் கழற்றலாம்.தக்காளி, எலுமிச்சை, புளி சாதம் செய்கையில் சாதத்தை நல்லெண்ணெய் விட்டு கிளறி பின் செய்தால் சாதம் உதிரி உதிரியாய் இருக்கும்

Mar 12, 2024

ஆப்பம் அதிக மென்மையாக  இருக்க....

ஆப்பத்திற்கு மாவு அரைக்கும்போது அதில் சிறிதளவு குளிர்ந்த பால் சேர்த்தால் ஆப்பம் அதிக மென்மையாக இருக்கும்அரிசியை காற்று புகாத பாத்திரங்களில் கொட்டி வைத்தால் நீண்ட காலம் கெடாமல் பாதுகாக்கலாம். இந்த பாத்திரங்களில்4 அல்லது5 வேப்பிலைகளுடன் சிறிது காய்ந்த மிளகாயை போட்டு வைத்தால் அரிசியில் பூச்சிகள் வராது. பூஞ்சைகள்உருவாவதையும்  தடுக்கலாம். ரவா லட்டு செய்யும்போது அத்துடன் அவலையும் மிக்ஸியில் ரவை போல் பொடித்து,நெய்யில் வறுத்து சேர்த்து, 4 டீஸ்பூன் பால் பவுடரையும் கலந்து ,சுவையான ல ட்டு. உருவாக்கலாம்துவையல் அரைக்கும்போது, மிளகாயை தவிர்த்து மிளகு சேர்த்து அரைக்கலாம். மிளகு கொழுப்பை நீக்கும் தன்மை கொண்டது.துவரம்பருப்பை வேக வைக்கும்போது ,ஒரு தேக்கரண்டி வெந்தயத்தையும் சேர்த்தால், சாம்பார் இரவு வரை கெடாமல் இருக்கும்.

Mar 05, 2024

பச்சை பட்டாணி நிறம் மாறாமல் இருக்க....

எந்த கிழங்கை வேக வைத்தாலும்10நிமிடம் உப்பு கலந்த நீரில் போட்டு வைத்து, பின் வேகவைத்தால் வேகமாக வெந்துவிடும்.சுண்டல் செய்யும் போது சீரகம், ஓமம், மிளகு ஆகியவற்றை வறுத்து பின் பெருங்காயம், சுக்கு சேர்த்து பொடி செய்யவும். எந்த சுண்டல் செய்தாலும் இறக்குவதற்கு முன் இந்த பொடியை தூவிக் கிளறினால், வாயுக்கோளாறு, வயிறு உப்புசம் ஏற்படாமல் நீங்கும்ரசம் செய்து இறக்கி வைக்கும்போதுதான் கொத்தமல்லி இலை சேர்க்க வேண்டும் தவிர ரசத்தில் தாளிக்க நெய் பயன்படுத்தினால் ரசம் வாசனையாக இருக்கும்.பச்சை பட்டாணிகளை வேக வைக்கும் போது சிறிதளவு வினிகர் சேர்த்தால் நிறம் மாறாமல் இருக்கும்.காய்கறிகள் சமைக்கும்போது பார்லி பவுடரை சிறிதளவு சேர்த்தால் சுவையாக இருக்கும்.

Mar 01, 2024

உப்பு ஜாடியில் தண்ணீர் வடிவதை தடுக்க....

வற்றல் குழம்பு கொதித்த பின், நெல்லிக்காய் அளவு வெல்லம் சேர்த்தால் சுவையாக இருக்கும்.உப்பு ஜாடியில் தண்ணீர் வடிவதை தடுக்க சிறிது புளித்துண்டை ஜாடியில் போட்டு வைத்தால் நீரத்தன்மையை புளிஎடுத்துவிடும்.காய்கறிகள் வறுவல் செய்யும்போது எண்ணெய் சூடாகும் சமயத்தில் ,சிறிது சர்க்கரை சேர்த்து வறுவல் செய்தால் சுவையாக இருக்கும். சாம்பார், குழம்பு ரசம் இவற்றுக்கான மசாலா கலவையில் ஒரு சின்ன வெங்காயத்தையும் சேர்த்தால் மணமும், சுவையும் கூடும்.கூட்டு, குழம்பு ஆகியவற்றுக்கு அரிசி மாவை கரைத்து விடுவதற்கு பதில் பொட்டுக்கடலை மாவை சேர்த்தால் சுவையாகவும் இருக்கும்.சீக்கிரம் ஊசியும் போகாது.

Feb 29, 2024

சமைக்கும்போது, கத்திரிக்காயின் நிறம் மாறாமல் இருக்க.....

சமைக்கும்போது, கத்திரிக்காயின் நிறம் மாறாமல் இருந்தால் எத்தனை அழகாக இருக்கும் அந்த சமையல்! அதற்கு, கத்திரிக்காயை வேக வைக்கும்போது. அதனுடன் ஒரு தேக்கரண்டி தயிரை சேர்த்துக் கொண்டால். கத்திரிக்காயின் நிறம் மாறாமல் இருக்கும்.நெல்லிக்காயை மிக்ஸியில் அரைத்து வடிகட்டி, ஒன்றரை லிட்டர் தண்ணீரில் கலந்து வைத்துக்கொண்டு. சம்மரில் தாகம் எடுக்கும்போது குடித்தால் உடல் அசதி நீங்கும்.தயிர் உறை ஊற்ற போகிறீர்கள் என்றால் பாலை5 நிமிடம் நன்கு கொதிக்க வைத்து கொண்டால் தான் தயிர் கடையில் கிடைப்பது போல ரொம்பவும் திக்காக கிடைக்கும் இல்லை என்றால் நீங்கள் என்னதான் செய்தாலும் தயிர் கெட்டியாக உங்களுக்கு கிடைக்காது. எனவேஇந்த தவறை  செய்யாதீர்கள், பாலை நன்கு கொதிக்க வைத்ததும், ஒரு கப்  பாலுக்கு,ஒரு ஸ்பூன் அளவு தயிர் சேர்த்து எவர்சில்வர் பாத்திரம் அல்லது மண் அல்லது பீங்கான் பாத்திரத்தில் போட்டு குறைந்தது 8 மணி நேரம் அப்படியே வெளியில் வைத்து விடுங்கள் பிறகு திக்கான தயிர் ரெடி.வெந்தய குழம்பு செய்யும்போது நல்லெண்ணெய்யில் தாளித்து அதிலேயே மிளகாய் பொடி, காய்கறிகளை வதக்கி. பிறகு புளி, உப்பு சேர்த்து குழம்பு செய்தால் வாசனை பிரமாதமாக இருக்கும்.

Feb 27, 2024

இனிப்பு வகையை செய்ய சர்க்கரையை விட கற்கண்டை பொடியாக்கி போட்டால் அதன் சுவை கூடும்.

காரக்குழம்பு செய்யும் போது காரம் அதிகமாகி விட்டால் சிறிது தேங்காய்பால் விட்டு கொதிக்க வைத்து இறக்கினால் காரம் குறைவதுடன் சுவையும் கூடும்.ரசத்தில் எலுமிச்சை சாறு சேர்க்கலாம். உடலுக்கும் நல்லது. புளி அதிகம் சேர்ப்பது ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும்.தோசை மாவிற்கு அரிசியுடன் ஜவ்வரிசி சேர்த்து ஊறவைத்தால் தோசை மொறுமொறுப்பாக இருக்கும்.எண்ணை பிசுக்கு நீங்க கேஸ் ஸ்டவ்வை கடைசியாக டிஷூவால் துடையுங்கள்.எந்த இரு இனிப்பு வகையை செய்தாலும் சர்க்கரையின் அளவை குறைத்துக் கொண்டு கற்கண்டை பொடியாக்கி போட்டால் அதன் சுவை கூடும்.குருமாவுக்கு காலிஃப்ளவரை வாங்கும் போது பூக்களுக்கு இடையே இடைவெளி இல்லாம வாங்க வேண்டும் இதில் தான் காம்புகள் தடிமனாக இருக்காது.

1 2 3 4 5 6 7 8 9 10 ... 21 22

AD's



More News