கோதுமை கொழுக்கட்டை சுவையாக இருக்க...
முந்திரி, பாதாம் சிக்கிகளை மிக்ஸியில் ஒன்றிரண்டாகப் பொடித்து வைத்துக்கொண்டு, அந்தத் தூளை பாயசம், ஃப்ரூட் சாலட், ஐஸ்கிரீம் ஆகியவற்றின் மேலே தூவிப் பரிமாறினால், சுவை சூப்பராக இருக்கும்.
முருங்கைக்காய் அதிகமாக இருந்தால் அதை அப்படியே பிரிட்ஜில் வைத்து காயவிடாதீர்கள்.முருங்கையை தோலெடுத்து ஒரு விரல் நீளத்துக்கு அரிந்து ஒரு கவரில் போட்டு ஃபிரீசரில் வையுங்கள். சமைக்கும் போது எடுத்து கழுவி சேர்த்து கொள்ளலாம்.
குருமாவில் சிறிது பாதம் அரைத்து ஊற்றலாம். இது கொழுப்பை கட்டுபடுத்தும் குழந்தைகளின் மூளை வளர்ச்சிக்கும் உதவும்.
தேங்காய் சேர்த்து குருமா வைக்கும் போது ,ஒரு சிலருக்கு சேராது.மற்ற பொருட்களை மட்டும் வதக்கி அரைத்த பிறகு கடைசியாக தேங்காய் பால் சேர்த்து குருமா வைக்கலாம்.கொஞ்சம் தண்ணியாக இருந்தாலும் ருசியில் எந்த விதமான மாற்றமும் இருக்காது.
கோதுமை இரண்டு கப் எடுத்து துணியில் கட்டி வேகவைத்து எடுத்து, பின் தட்டில் ஆறவிட்டு, வாணலியில் நெய் விட்டு தேங்காய் துருவல் சேர்த்து வதக்கி, நாட்டு சர்க்கரை, ஏலக்காய் தூள் சேர்த்து கிளறி மாவை கொழுக்கட்டையாக உருட்டி, வேக வைத்து எடுத்தால், கோதுமை கொழுக்கட்டை சாப்பிட சுவையாக இருக்கும்.
0
Leave a Reply