25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >> இராஜபாளையம் நாடார் மேல்நிலைப்பள்ளியில் மாநில வாலிபால் போட்டி >> இராஜபாளையம் சஞ்சீவி மலையில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் வனத்துறை வீரர்கள். >> ராஜபாளையத்தில் மழை பொய்த்து கடும் வெயிலால் மக்காச்சோள பயிர்கள் நாசம் >> இராஜபாளையம் ராம்கோ குருப் ராமராஜு சர்ஜிகல் காட்டன் மில்ஸ் லிட், சுதர்சனம் ஸ்பின்னிங் மில்ஸ் நூற்பாலைகளில் பணி புரியும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது >> M.B. ராதாகிருஷ்ணன் நினைவாக வாழ்நாள் சாதனையாளர் விருது >> இராஜபாளையம்  ரோட்டரி சங்கம், M.V.பீமராஜா ஜானகியம்மாள் அறக்கட்டளை மற்றும் நாற்று இலக்கிய அமைப்பு நடத்திய "யானைகள் திருவிழா" >>


சமையல் குறிப்பு

Feb 23, 2024

முறுக்கு மொறு மொறுவென இருக்க......

தேன்குழல் முறுக்கு, சீடைக்கான மாவை வெண்ணீர் ஊற்றி பிசைந்தால் நன்கு மொறு மொறுவென இருக்கும்.முட்டைகோஸை வேக வைக்கும்போது ஒரு துண்டு இஞ்சி சேர்த்தால் கெட்ட வாடை இராது.கருணைக்கிழங்கு ஒரு தேக்கரண்டி புளித்தண்ணீர் சேர்த்து வேக வைத்தால் காரல் தன்மை இராது.அடை, பக்கோடா செய்யும்போது புதினா இலை சேர்த்து செய்தால் வாசனையாக இருக்கும். உடலுக்கும் நல்லது.குருமாவில் தேங்காயின் அளவை குறைத்து, பாதாம் சேர்த்து அரைத்து பயன்படுத்தலாம். இது கொலஸ்ட்ராலின் அளவை கட்டுப்படுத்தும். குழந்தைகளுக்கும் மூளை வளர்ச்சி அதிகரிக்கும்.

Feb 22, 2024

மோர்க்குழம்பு சுவையாக இருக்க...

மோர்க்குழம்பு செய்யும் போது நிலக்கடலையை அரைத்து கலந்தால் மோர்க்குழம்பு சுவையாக இருக்கும்.சமோசாவுக்கு மாவு பிசையும் போது மைதா மாவை சலித்து மெல்லிய துணியால் கட்டி இட்லித்தட்டின் மேல் வைத்து 5 நிமிடம் ஆவியில் வைக்கவும்.பிறகு உப்பு சீரகம், டால்டா போட்டு பிசைந்து செய்தால் மொறுமொறுப்பாக இருக்கும்சட்னி வகைகள் மீந்துவிட்டால் அவற்றுடன் புளிக்காத தயிர், பொடியாக அரிந்த வெங்காயம்(அ) காராபூந்தி சேர்த்துக் கலந்தால் சுவையான ரயத்தா தயார்..'புளி, உப்பு, வெல்லம் போன்றவற்றை பிளாஸ்டிக் டப்பாக்களில் வைப்பதை தவிர்க்கவும். இவை காற்று பட்டால் நீர்விடும் தன்மை கொண்டவை. பிளாஸ்டிக்குடன் சேர்ந்து ரசாயன மாற்றம் ஏற்பட்டு ஆரோக்கியத்துக்கும் கெடுதல் ஏற்படக்கூடும். கண்ணாடி (அ ) பீங்கான் டப்பாக்களில் வையுங்கள்.ஒரு அகன்ற பாத்திரத்தில் தண்ணீர் வைத்து, அதனுள் இரண்டு கற்பூர வில்லைகளை போட்டு, நீங்கள் படுக்கும் இடத்திற்குஅருகிலோ அல்லது கட்டிலின் அடியிலோ வைத்து விடுங்கள். கொசுவர்த்திக்கு கூட பயப்படாத கொசுக்கள் ஓடிப்போய்விடும்.

Feb 20, 2024

பிரீசரில்' ஐஸ் கட்டிகள் படிவதை தடுக்க

உளுந்து வடைக்கு அரைக்கும் மாவு நீர்த்துப் போய்விட்டால் சிறிது அவல் சேர்த்து வடை தட்டினால் சரியாகிவிடும்.வறுத்த பட்டையை பொடி செய்து நீரில் கலந்து பெண் பிள்ளைகளுக்கு கொடுத்து வந்தால் கர்ப்பப்பை பலம் பெறும்.மாவில் 4 ஸ்பூன் நல்லெண்ணெய் கலந்து வார்த்தால் தோசை சாஃப்ட்டாக. டேஸ்ட்டாக இருக்கும்.பிரிஜ்'ஜின் உள்ளே இருக்கும், 'பிரீசரில்' ஐஸ் கட்டிகள் படிவதை தடுக்க. சிறிதளவு உப்பை துாவி வைக்கலாம்கதவிடுக்குகளில் சிறிதளவு, 'டால்கம் பவுடரை துாவி வைத்தால் கதவு சத்தம் எழுப்புவதை தவிர்க்கும்

Feb 16, 2024

பால் பாயாசம்  சுவையாக இருக்க....

பால் பாயாசம் செய்யும் பொழுது பாதாம் பருப்பை அரைத்து சேர்த்தால் பாயாசம் சுவையாக இருக்கும்.தேங்காய் எடுக்க சிரமமாக இருந்தால், தேங்காய் தொட்டியை அடுப்பில் வைத்து லேசாக வாட்டி எடுத்தால், தேங்காய் எளிதாக எடுக்க வரும்.பருப்பு வேக வைக்கும் போது பருப்புடன் சிறிதளவு நெய் சேர்த்து வேக வைத்தால் சாம்பார் மிகவும் ருசியாக இருக்கும்.முட்டை கெட்டுப் போகாமல் இருக்க முட்டையின் மீது லேசாக எண்ணெய் தடவி வைத்தால் முட்டை விரைவில் கெட்டுப் போகாமல் இருக்கும்.சர்க்கரையில் எறும்பு வராமல் இருக்க 2 கிராம்பு அதில் போட்டு வைத்தால் எறும்பு வராது

Feb 14, 2024

இட்லிக்கு மாவு ஆட்டும்போது ஒரு வெண்டைக்காய் சேர்த்து ஆட்டினால் இட்லி பூப்போல இருக்கும்

வெந்தயக் குழம்பு கொதித்து இறக்கி வைக்கும்போது, ஒரு தேக்கரண்டி எள்ளு பொடியை போட்டால் குழம்பு மிகவும் வாசனையுடன் இருக்கும். அல்லது ஒரு தேக்கரண்டி நல்லெண்ணெய் விட்டால் ருசி கூடும்.பால் தயிர் ஆடையை தனியே எடுத்து ஃபிரிட்ஜில் வைத்து சிறிது நேரம் வைத்து கடைந்தால் வெண்ணெய் உருண்டு நன்றாக வரும்.இட்லிக்கு மாவு ஆட்டும்போது ஒரு வெண்டைக்காய் சேர்த்து ஆட்டினால் இட்லி பூப்போல இருக்கும்.பாத்ரூமில் ஏதாவது மூலையில் ஒரு துண்டு பச்சைக் கற்பூரம் வைத்தால் பாத்ரும் மணம் வீசும்.கருவேப்பிலை நீண்ட நாள் வாடாமலும், நிறம் மாறாமலும் இருக்க, கருவேப்பிலையை தண்ணீரில் அலசி உலர வைத்து, பின்னர் காற்று புகாத டப்பாவில் போட்டு பிரிட்ஜில் வைத்தால் 1 மாதம் வரை கெட்டு போகாது.

Feb 13, 2024

உருளைக்கிழங்கு அல்லது வாழைக்காய் பொடிமாஸ் செய்யும்போது சுவை கூட…..

சாம்பார் பொடி அரைக்கும்போது அதில் ஒரு கைப்பிடி அளவு கல் உப்பு சேர்த்து அரைத்தால் பூச்சிகள் வராது. சாம்பார் புளித்தால் சிறு உருண்டை வெல்லம் சேருங்கள். புளிப்பு சுவை சரியாகிவிடும்..பாயாசத்திற்கு திராட்சைக்கு பதிலாக பேரீச்சம் பழத்தை பொடியாக நறுக்கி நெய்யில் பொரித்து போட்டால் சுவை கூடும். வெங்காயத்தை சிறிது எண்ணெய் விட்டு வதக்கியபின் அரைத்தால், சட்னி கசக்காமல் ருசிக்கும்.  உருளைக்கிழங்கு அல்லது வாழைக்காய் பொடிமாஸ் செய்யும்போது கடைசியாக2 டீஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்த்தால் சுவை கூடும்.

Feb 08, 2024

இஞ்சி, பூண்டு விழுது அரைக்கும்போது,....

நமர்த்த பிஸ்கட்டை ஒன்றிரண்டாக பொடித்து, பழங்களுடன் கலந்து ஃப்ரூட் சாலட் செய்தால் ருசியர்க இருக்கும்.உருளைக்கிழங்கு, சேப்பங்கிழங்கு வறுவல் செய்யும்போது மேலாக சிறிது ரொட்டித்தூளை தூவினால் கரகரப்பாகவும், சுவையாகவும் இருக்கும்.பருப்பு சாதத்திற்கு. பருப்பை வேக வைக்கும்போதே, முருங்கை காயின் நடுவில் உள்ள சதை பகுதியையும் எடுத்து வேக வைத்து, சாதத்துடன் சேர்த்தால் சுவையாக இருக்கும்.இஞ்சி, பூண்டு விழுது அரைக்கும்போது, அதனுடன், உப்பு துாள் ஒரு தேக்கரண்டி, சூடான எண்ணெய்யும் கலந்து வைத்தால், நீண்ட நாட்களுக்கு, 'ப்ரெஷ்' ஆக இருக்கும்.துவரம்பருப்பை வேக வைக்கும் போது சிறிது தேங்காய் துண்டை நறுக்கி போட்டால் பருப்பு விரைவில் வெந்து பக்குவமாக இருக்கும்.

Feb 07, 2024

பஜ்ஜி உப்பி வர....

கடலை மாவு, அரிசி மாவு, பொட்டுக்கடலை மாலை2:1:1 என்ற விகிதத்தில் கலந்து பஜ்ஜி செய்தால், சோடா மாவு சேர்க்காமலே பஜ்ஜி உப்பி வரும்.ஒரு கப் கெட்டி அவல்,2 கிண்ணம் பச்சரிசி, சிறிது உளுந்தம் பருப்பு ஆகியவற்றை ஊற வைத்து அரைத்து ஊற்றினால் சுவையான தோசை தயார்.மோரில் ஊறவைத்த  வாழைப்பூவை சிறிது நெய்யில் வதக்கி, துவையல் செய்தால் ருசியாக இருக்கும்.வெங்காய பஜ்ஜிக்கான வெங்காயத்தை தோலை உரிக்காமல் வட்டமாக வெட்டிவிட்டு, பிறகு தோலை உரித்தால் வெங்காயம் தனித்தனியாக பிரியாமல் வட்டமாக இருக்கும்.முருங்கைக்கீரையை சமைக்கும்போது சிறிதளவு,சர்க்கரையை கலந்து சமைத்தால் ,ஒன்றோடு ஒன்று ஒட்டாமல் உதிரியாக இருக்கும்

Feb 05, 2024

பித்தளை செம்பு பாத்திரங்கள் பளபளக்க......

தயிர், மோர் வைக்கும் பாத்திரங்களை சுத்தம் செய்ததும் வெயிலில் காய வைத்தால் அதில் உள்ள வாடையும் போய்விடும். கிருமிகளும் அண்டாது.பித்தளை செம்பு பாத்திரங்களை வெந்நீரில் சோப்பு போட்டு கரைத்த. கரைசலில் கழுவி பின்பு வினிகரில் உப்பைக் கலந்து நன்றாக தேய்த்தால் பாத்திரங்கள் பளபளக்கும்.வாணலியில் கறை போக சமையல் உப்பை போட்டு சூடு படுத்திவிட்டு பேப்பரால் துடைத்தால் பளபளப்பாக இருக்கும்.பொரித்த அப்பளம் நமத்து விட்டால் கூட்டு செய்யும்போது நமத்த அப்பளத்தை சிறு துண்டுகளாக பிய்த்து போட்டு பாட்டு கலந்துவிடவும். கல இந்த அப்பளக்கூட்டு சுவையாக இருக்கும்.பருப்பு சாதத்திற்கு, பருப்பை வேக வைக்கும்போதே. முருங்கை காயின் நடுவில் உள்ள சதை பகுதியையும் எடுத்து வேக வைத்து, சாதத்துடன் சேர்த்தால் சுவையாக இருக்கும்.

Feb 02, 2024

வாழைப்பூ சுத்தம் செய்யும் போது கையில் எண்ணெய் தடவி கொண்டால் கையில் கரை ஒட்டாது.

முருங்கைக்காய் நீண்ட நாள் வாடாமல் இருக்க, சாம்பாரில் சேர்க்கும் அளவு துண்டுகளாக நறுக்கி கற்று புகாத கவர் அல்லது டப்பாவில் போட்டு வைத்தால் நீண்ட நாட்கள் வாடாமல் அப்படியே இருக்கும்.வாழைப்பூ சுத்தம் செய்யும் போது கையில் எண்ணெய் தடவி கொண்டால் கையில் கரை ஒட்டாது.குழம்பில் காரம் அதிகமானால் சிறிது வெல்லம் சேர்த்தால் காரம் குறைந்துவிடும்.ஏலக்காயை பொடியாக அரைக்க ஏலக்காயுடன் சிறிதளவு சர்க்கரை சேர்த்து பொடி செய்தால் ஏலக்காய் பொடியாக அரைத்து விடும். கீரை கடையல் செய்யும் போது கீரையின் கலர் மாறாமல் இருக்க சிறிதளவு எண்ணெய் சேர்த்து வேக வைத்தால் கீரையின் நிறம் மாறாது.

1 2 3 4 5 6 7 8 9 10 ... 21 22

AD's



More News