தேவையான பொருட்கள்- 2 கப்பொரி1/2 கப் ரவை 1 கப்தயிர்1/2 கப்கோதுமை மாவுதேவையான அளவுஉப்புதேவையான அளவு எண்ணெய்செய்முறை -பொரியை தண்ணீரில் அலசவும். ரவையை தண்ணீரில் ஊற வைக்கவும்.மிக்சியில் பொரி ,ஊறிய ரவை, கோதுமை மாவு சேர்க்கவும்.பின்னர் அதில் தயிர் உப்பு சேர்த்து நைஸாக அரைக்கவும்.அரைத்த மாவை தோசைகளாக சுட்டெடுக்கவும்.இப்போது சுவையான பொரி தோசை ரெடி.
தேவையான பொருட்கள்-2 கப்பொரி1/2 டீஸ்பூன்சோம்பு1/2 கப் உடைத்த கடலைமாவு2 காய்ந்தமிளகாய்1வேக வைத்த உருளைக்கிழங்கு1கேரட்1டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது1/2 கப்அரிசி மாவு1/4 டீஸ்பூன்மஞ்சள் தூள்1/2 டீஸ்பூன்மிளகாய் தூள்சிறிதளவுகொத்தமல்லிதேவையான அளவுஉப்புதேவையான அளவு எண்ணெய்செய்முறை -பொரியை தண்ணீரில் அலசி ஒரு கிண்ணத்தில் போடவும்.மிக்சியில் சோம்பு உடைத்த கடலை காய்ந்த மிளகாய் போட்டு தூள் செய்யவும்.பொரியில் வேக வைத்து மதித்த உருளை கிழங்கு ,துருவிய கேரட், இஞ்சி பூண்டு விழுது சேர்க்கவும். பின்னர் அதில் சோம்பு பொடி, அரிசி மாவு ,மஞ்சள் தூள் சேர்க்கவும்.மிளகாய் தூள் ,உப்பு, கொத்தமல்லி, சேர்த்து நன்றாக பிசைந்து தட்டவும். தட்டிய மாவை பிரட் தூளில் புரட்டி எடுக்கவும். பின்னர் அதை தோசை கல்லில் எண்ணெய் ஊற்றி சுட்டெடுக்கவும்.இப்போது சுவையான பொரி கட்லெட் தயார்.
தேவையான பொருட்கள்:-பொரி - 2 கப்பொடித்த வெல்லம் - 1/2 கப்நெய் - தேவையான அளவுமுந்திரி - 2 டேபிள் ஸ்பூன்செய்முறை:-முதலில் பொரியை நீரில் போட்டு 5-10 நிமிடம் ஊற வைக்க வேண்டும். பின் பொடித்த வெல்லத்தை சிறிது நீர் ஊற்றி கரைத்து, வடிகட்டி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.அடுத்து பொரியில் உள்ள நீரை வடிகட்டி அதிகப்படியான நீரை பிழிந்துவிட்டு, மிக்சர் ஜாரில் பொரியைப் போட்டு, நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் சிறிது நெய் ஊற்றி சூடானதும், முந்திரியைப் போட்டு பொன்னிறமாக வறுக்க வேண்டும்.பிறகு அதில் கரைத்த வெல்லத்தை ஊற்றி, அதைத் தொடர்ந்து அரைத்த பொரியையும் சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.ஒரு கட்டத்தில் கலவையானது சற்று கெட்டியாகி, அல்வா பதத்திற்கு வர ஆரம்பிக்கும். அப்போது வேண்டுமானால் சிறிது நெய் ஊற்றி, ஓரளவு கெட்டியாகும் வரை நன்கு கிளறி இறக்கி, ஒரு கிண்ணத்தில் போட்டால், சுவையான பொரி அல்வா தயார்.
தேவையான பொருட்கள்-பிரண்டை- ஒரு கப், வத்தல் -6,மூன்று பல்பூண்டு, ஒரு சிறிய நெல்லிக்காய் அளவு புளி,குழம்பு கடலை பருப்பு - ஒரு டீஸ்பூன்உளுந்தம் பருப்பு - ஒரு டீஸ்பூன்,இஞ்சி - ஒரு சிறிய துண்டு,தேங்காய் துருவல்-அரைகப்செய்முறை- முதலில் பிரண்டையை சிறு சிறு துண்டுகளாக, நார் எடுத்து உரித்து வைத்துக் கொள்ள வேண்டும்.ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி கடலைப்பருப்பு, உளுந்தம் பருப்பை பொன்னிறமாக வறுக்கவும். பின்னர் வத்தல் சேர்த்து வறுக்கவும்.பின்னர் கருவேப்பிலை, இஞ்சி,பூண்டு, தேங்காய் துருவல் சேர்த்து நன்கு வதக்க வேண்டும். அனைத்தையும் நன்கு5 நிமிடம் வதக்க வேண்டும். பின் பிரண்டையை நல்லெண்ணெய் ஊற்றி, நிறம் மாறும் வரை ஐந்து நிமிடம் வதக்க வேண்டும்.பின்னர் ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு உப்பு சேர்த்து நன்கு அரைத்து எடுத்துக் கொள்ளவும். சுவையான பிரண்டைக்காய் சட்னி ரெடி.மருத்துவ குணம் நிறைந்த பிரண்டை சட்னி. நன்கு பசி எடுக்கும் .எலும்பு வலுப்படும்
தேவையான பொருட்கள் -மணத்தக்காளி கீரை -ஒரு கைப்பிடி,சின்ன வெங்காயம்-10,இஞ்சி- ஒரு சிறிய துண்டு,கடலைப்பருப்பு - ஒரு ஸ்பூன்,உளுத்தம் பருப்பு - ஒரு ஸ்பூன்,கொத்தமல்லி- ஒரு ஸ்பூன்,சீரகம்- கால் ஸ்பூன்,வரமிளகாய்-4,கருவேப்பிலை-சிறிதளவு,புளி-சிறிதளவு,தேங்காய் துருவல்-5 ஸ்பூன்,எண்ணெய் -இரண்டு டேபிள் ஸ்பூன்செய்முறை -கீரையை நன்கு அலசி வைத்துக் கொள்ளவும். ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடலை பருப்பு ,உளுத்தம் பருப்பு, கொத்தமல்லி, சீரகம் சேர்த்து வறுக்கவும் .பின்பு வரமிளகாய், கருவேப்பிலை சேர்த்து வறுத்த உடன் இஞ்சி ,வெங்காயம் சேர்த்து வதக்கவும்.பின்பு மணத்தக்காளி கீரையை அதனுடன் சேர்த்து ஐந்து நிமிடம் வதக்கி கொள்ளவும்.அதன் பின் தேங்காய் துருவல் சேர்த்து சிறிது நேரம் வதக்கி, உப்பு தேவையான அளவு சேர்த்து புளி சேர்த்து அரைத்து எடுக்கவும்.மணத்தக்காளி கீரை சட்னி ரெடி.
தேவையான பொருட்கள்:-வாழைப்பூ 1,தக்காளி -2,காய்ந்த மிளகாய் -5,சின்ன வெங்காயம்- 12,பூண்டு, எள்,நல்லெண்ணை,வெள்ளை உளுந்து - தேவையான அளவு,மோர், தண்ணீர்,கடுகு,கறிவேப்பிலை,கொத்தமல்லிதழை - சிறிதளவு.செய்முறை:-வாழைப்பூவை சுத்தம் செய்து மோர் கலந்த தண்ணீரில் கழுவி வேக வைக்கவும். காய்ந்த மிளகாய், உளுந்து, பூண்டு, எள்ளை வறுக்கவும். இவற்றுடன் வெந்த வாழைப்பூ, நறுக்கிய தக்காளி, உரித்த வெங்காயம் போட்டு அரைக்கவும். வாணலியில் எண்ணெய் சூடானதும் கடுகு, கறிவேப்பிலை தாளித்து, அரைத்த விழுதை கலக்கவும். எண்ணெய் பிரிந்ததும் கொத்தமல்லிதழை தூவி இறக்கவும்.சுவையான, 'வாழைப்பூ சட்னி' தயார். இட்லி, தோசை, சப்பாத்தி சாதத்துடன் பக்க உணவாக சாப்பிடலாம்.
தேவையானவை - முட்டைக் கோஸ் கால் கிலோ, பெரிய வெங்காயம் 2, தக்காளி 2,பச்சை மிளகாய் 3, இஞ்சி 1 துண்டு, தேங்காய்த் துருவல் 2 டேபிள் ஸ்பூன், மிளகாய் வற்றல்3, புளி சிறிதளவு, கடுகு அரை டீஸ்பூன், உளுந்து2 டீஸ்பூன், பெருங்காயம் அரை டீஸ்பூன், உப்பு தேவைக்கு, எண்ணெய் 2 டேபிள் ஸ்பூன்.செய்முறை:-கோஸ், வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், இஞ்சி ஆகியவற்றைக் கழுவி பொடியாக நறுக்குங்கள். வாணலியில் எண்ணெயைக் காயவைத்து கடுகு, உளுந்து, மிளகாய் வற்றல், பெருங்காயம் ஆகியவற்றை ஒன்றன்பின் ஒன்றாகத் தாளித்துப் பிறகு வெங்காயம் சேர்த்து வதக்குங்கள். வெங்காயம் சிறிது வதங்கியதும் பச்சை மிளகாய், இஞ்சி, கோஸ் சேர்த்து வதக்குங்கள். கோஸ் பச்சை வாடை போக வதங்கியதும் தேங்காய், தக்காளி, புளி, உப்பு சேர்த்து ஐந்து நிமிடம் வதக்கி இறக்குங்கள். ஆறியதும் நைஸாக அரைத்தெடுங்கள். கோஸ் சட்னி இட்லி, தோசைக்கு நல்ல காம்பினேஷன்
தேவையானவை -சௌசௌ - 1,உளுந்து - 2 ஸ்பூன்,கடலைப்பருப்பு - 1 ஸ்பூன்,பெரிய வெங்காயம் - 1தக்காளி - 2,காய்ந்த மிளகாய் - 5,பூண்டு - 6 பல்,புளி - சிறிதளவு (ஒரு கொட்டை அளவு),எண்ணெய் - 3 ஸ்பூன்கடுகு - சிறிதளவு,பெருங்காயம் - சிறிது,உப்பு - தேவையான அளவு,கறிவேப்பிலை - சிறிது,செய்முறைமுதலில் சௌசௌ காயை,தோல்சீவிவிட்டு, நன்கு கழுவி சுத்தம்செய்துகொள்ளுங்கள்.அதிலுள்ளவிதைகளைநீக்கிவிட்டு பொடிப் பொடியாக நறுக்கிவைத்துக்கொள்ளுங்கள்.ஒருகடாயில்இரண்டுஸ்பூன்எண்ணெய்ஊற்றிகாய்ந்ததும் உளுந்தம் பருப்பை சேர்த்துவறுக்கவும். அடுத்ததாக அதில்5 காய்ந்தமிளகாய்சேர்த்துவறுத்தபின், பொடியாகநறுக்கியவெங்காயத்தையும் சேர்த்து வதக்கவேண்டும்.வெங்காயம் ஓரளவு வதங்கியதும் தக்காளியை சேர்த்து நன்கு வதக்கிஎடுத்துவைத்துக்கொள்ளவேண்டும்.அடுத்ததாக மீண்டும் கடாயில் சிறிதுஎண்ணெய்சேர்த்துஅதில்சௌசௌவைசேர்த்துநன்குவதக்கிஎடுக்கவேண்டும்.இவைஎல்லாம்நன்குஆறியதும்அதோடுபுளிமற்றும்உப்புசேர்த்துநன்குநைசாகஅரைத்துஎடுத்துக் கொள்ளுங்கள்.பின் கடாயில் எண்ணெய், கடுகு, கறிவேப்பிலை, பெருங்காயம் தாளித்து கொட்டினால் சுவையானசௌசௌசட்னிதயார். இதுஇட்லி, தோசைக்குமிகவும்சுவையாகஇருக்கும்.
தேவையான பொருட்கள்:-பூசணிக்காய் (பரங்கிக்காய்) - 1 கப் (துண்டுகளாக்கப்பட்டது)தேங்காய் துருவல் - 1/4 கப்,புளி – சிறிதளவு,கொத்தமல்லி தழை – சிறிதளவு,பச்சை மிளகாய் - 2-3,உளுத்தம் பருப்பு - 1 ஸ்பூன்,கடலைப்பருப்பு - 1 ஸ்பூன்,காய்ந்த மிளகாய் - 2-3,சீரகம் - 1/2 டீஸ்பூன்,மிளகு - 1/2 டீஸ்பூன்,உப்பு - தேவையான அளவு,எண்ணெய் - வதக்குவதற்கு தேவையான அளவு .செய்முறை:-ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி, கடலைப்பருப்பு, உளுத்தம் பருப்பு, காய்ந்த மிளகாய், சீரகம், மிளகு, கொத்தமல்லி ஆகியவற்றை போட்டு பொன்னிறமாக வதக்கவும்.அதனுடன் பொடியாக நறுக்கிய பரங்கிக்காயை சேர்த்து நன்கு வதக்கவும்.பரங்கிக்காய் நன்கு வெந்ததும், அதில் புளி, தேங்காய் துருவல், மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து, சிறிது நேரம் வதக்கவும்.வதக்கிய கலவையை ஆறவிட்டு, தேவையான அளவு உப்பு சேர்த்து மிக்ஸியில் சேர்த்து நைஸாக அரைத்து எடுக்கவும்.சுவையான மற்றும் ஆரோக்கியமான பரங்கிக்காய் சட்னி தயார். இதை இட்லி, தோசை, பொங்கல் போன்றவற்றுடன் சேர்த்து பரிமாறலாம்.
தேவையான பொருட்கள்-பச்சைபயறு- 2 கப்,தேங்காய்துருவல் -அரைகப்,கடுகு- கால்ஸ்பூன்,உளுந்தம்பருப்பு- அரைஸ்பூன்,பெரியவெங்காயம்-1,வரமிளகாய் -2,கருவேப்பிலை - 1கொத்து,உப்புத்தூள் தேவைக்கு,சமையல் எண்ணெய்- தாளிக்க.செய்முறை -முதலில்பச்சை பயறை சுத்தம் பண்ணி வேகவைத்துக்கொள்ளவும். வடிகட்டி உப்புத்தூள் சேர்த்துக் கொள்ளவும். வெங்காயத்தை கட் பண்ணிக் கொள்ளவும்.ஒரு வாணலியில் தாளிக்கிற அளவுக்கு எண்ணெய் ஊற்றி கடுகு, உளுந்தம்பருப்பு, வரமிளகாய், கருவேப்பிலை, கட்பண்ணிய வெங்காயம், சேர்த்து நன்கு வதக்கிக்கொள்ளவும்.அதிலேயே தேங்காய் துருவல் சேர்த்து வதக்கிக்கொள்ளவும். உப்பு சேர்த்த பச்சைப்பயறையும் சேர்த்து நன்குஎல்லாம் கலக்கும்படி கலந்துவிடவும்.பச்சை பயறு சுண்டல் ரெடி.தாளிக்கும் போது தேங்காய் துருவலையும் நன்கு வதக்கிச் சேர்த்தால் மாலைவரை கெட்டு போகாது.