தேவையானவை : கொள்ளு 1 கப்,உளுந்து அரை கப், மிளகாய் வற்றல் 25, பெருங்காயம்1 துண்டு, கொப்பரை துருவல் கால் கப், உப்பு தேவைக்கு, எண்ணெய் 1 டேபிள் ஸ்பூன்.செய்முறை: கொள்ளை சுத்தம் செய்து வெறும்வாணலியில் மொறுமொறுப்பாக வறுத்தெடுங்கள். எண்ணெயில் பெருங்காயத்தை பொரித்தெடுத்துவிட்டு, மிளகாயை நிறம் மாறாமல் வறுத்தெடுங்கள். மீதமாகும் எண்ணெயில் உளுந்தை வறுத்தெடுத்துவிட்டு, கடைசியில் தேங்காயைப் போட்டு சிவக்க வறுத்தெடுங்கள்.வறுபட்ட அனைத்தும் ஆறியதும் ஒன்றாகக் கலந்து உப்பு சேர்த்து கரகரப்பாக பொடித்தெடுங்கள்.இந்தப் பொடியுடன் நல்லெண்ணெய் கலந்து சாதம், இட்லி, தோசை வகைகளுக்குத் தொட்டுக்கொண்டால்,சுவை பிரமாதமாக இருக்கும்.
தேவையானவை :கொப்பரை துருவல்1 கப், உளுந்துஅரை கப், துவரம் பருப்பு, கடலைப் பருப்பு தலா கால் கப், பெருங்காயம் சிறு துண்டு, மிளகாய் வற்றல் 20, உப்பு தேவைக்கு, எண்ணெய்1 டேபிள் ஸ்பூன்.செய்முறை: தேங்காயை வெறும் வாணலியில் சிவக்க வறுத்தெடுங்கள். எண்ணெய் பெருங்காயத்தைப் பொரித்தெடுத்துவிட்டு மிளகாய் வற்றலை வறுத்தெடுங்கள். மீதமாகும் எண்ணெயில் பருப்பு வகைகளை ஒன்றாகப் போட்டு பொன்னிறமாக வறுத்தெடுத்து ஆறியதும் உப்பு சேர்த்து கரகரப்பாக அரைத்தெடுங்கள்.இந்த தேங்காய்ப் பொடியுடன் நெய் கலந்து சாதம்,இட்லி, தோசையோடு சேர்த்து சாப்பிட சுவையாக இருக்கும். இந்தப் பொடியை பதினைந்து நாட்கள் வரை வைத்திருக்கலாம்.
தேவையானவை : நாட்டு பூண்டு 50 பல்,உளுந்து 1 கப், துவரம் பருப்பு கால் கப், கடலைப் பருப்பு அரை கப், மிளகாய் வற்றல் 20, பெருங்காயம் 1 துண்டு, புளி சிறிய நெல்லிக்காய் அளவு, கறிவேப்பிலை 5 ஆர்க்கு, உப்பு தேவைக்கு, எண்ணெய்ஒரு டேபிள் ஸ்பூன். செய்முறை: ஒரு டேபிள் ஸ்பூன்எண்ணெயில் பெருங்காயத்தை பொரித்து, மிளகாயை வறுத்தெடுங்கள். பிறகு பருப்பு வகைகளைப் போட்டு சிவக்க வறுத்தெடுத்துவிட்டு, தோல் நீக்கிய பூண்டு சேர்த்து, சற்று நிறம் மாறும் வரை வறுத்தெடுங்கள். மீதமுள்ள எண்ணெயில் புளியை மொறுமொறுப்பாக பொரித்தெடுத்துவிட்டு கறிவேப்பிலையை வறுத்தெடுங்கள். வறுபட்ட பொருட்கள் அனைத்தும் ஆறியதும் ஒன்றாகச் சேர்த்து உப்பு கலந்து நைஸாக அரைத்தெடுங்கள்.நல்லெண்ணெய் கலந்து சாதத்தோடு சாப்பிட சூப்பர் சுவை தரும் இந்த பொடியை பதினைந்து நாட்கள் வரை வைத்திருக்கலாம்.
தேவையான பொருட்கள்:மாதுளம் பூ -- 2 கப் ,தேங்காய் துருவல் - 1 கப்,கறுப்பு உளுந்து - 2 தேக்கரண்டி, மிளகு, சீரகம்,இஞ்சி, பூண்டு,பச்சை மிளகாய்- தேவையான அளவு ,நல்லெண்ணெய்,உப்பு, தண்ணீர் - சிறிதளவு செய்முறை:வாணலியில், நல்லெண்ணெய் சூடானதும், மிளகு, சீரகம், நறுக்கிய இஞ்சி, பூண்டு போட்டு வதக்கவும். பின், கறுப்பு உளுந்து, தேங்காய் துருவல், துண்டாக்கியபச்சை மிளகாய், மாதுளம் பூவை சேர்த்து மேலும் வதக்கவும். ஆறியதும், உப்பு, தண்ணீர் சேர்த்து அரைக்கவும்.சத்துக்கள் நிறைந்த,'மாதுளம் பூ துவையல்' தயார்இட்லி, தோசைக்கு பக்க உணவாக தொட்டுக் கொள்ளலாம். சுடுசாதத்தில் பிசைந்து சாப்பிடலாம். அனைத்து வயதினரும் விரும்புவர்.
தேவையானவை:முழு நெல்லிக்காய் –ஐந்து,காய்ந்த மிளகாய் பச்ச மிளகாய் - தலா 2, பெருங்காயத்தூள் கால் டீஸ்பூன்,தேங்காய் துருவல் எலுமிச்சைச் சாறு - தலா ஒரு டீஸ்பூன், உப்பு-தேவையான அளவுசெய்முறை:நெல்லிக்காயை கடாயில் லேசாக வேக வைத்து கொட்டையை நீக்கி வைத்துக் கொள்ளவும்.காய்ந்த மிளகாய், பச்சை மிளகாய், பெருங்காயத்தூள், தேங்காய் துருவல் ,எலுமிச்சைச் சாறு, சேர்த்து மிக்ஸியில் அரைத்து, கடைசியாக நெல்லிக்காய், உப்பு சேர்த்து ஒரு சுற்று சுற்றி எடுத்தால் நெல்லிக்காய் துவையல் ரெடி..
தேவையானவை:தூதுவளை இலை - 2 கப்,புதினா -1 கப்,பூண்டு -4,இஞ்சி -1/2 இஞ்ச் ,சிறிய வெங்காயம் -10,சிவப்பு மிளகாய்-6,எண்ணெய் 2 டீஸ்பூன்,கடுகு-சிறிது,உளுத்தம் பருப்பு சிறிது,பெருங்காயம் சிறிது,புளி சிறிது,தேங்காய்-2 ஸ்பூன் துருவியது,உப்பு - தேவையான அளவு செய்முறை:ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் ,அதில் கடுகு, உளுத்தம் பருப்பு, பெருங்காயம் போட்டு தாளித்து பின் காய்ந்த மிளகாய் போட்டு சிவந்ததும்,சிறிய வெங்காயம், பூண்டு, இஞ்சி போட்டு வதக்கி பின் தேங்காய் பூவையும் போட்டு வதக்கவும். பிறகு கடைசியாக தூதுவளை இலை ,புதினா இலை போட்டு வதக்கவும். ஆறிய பின் மிக்ஸியில் போட்டு கெட்டியாக அரைத்தால் தூதுவளை துவையல் தயார்.
தேவையானவை:வாழைப்பூ - ஒரு கப்,உளுத்தம்பருப்பு - அரை கப்,காய்ந்த மிளகாய் -4,புளி - 50 கிராம்,தேங்காய் துருவல் -1 ஸ்பூன்,மிளகு - ஒரு ஸ்பூன்,சீரகம் -அரைஸ்பூன்,பெருங்காயத்தூள் - கால் ஸ்பூன்,உப்பு-- தேவையான அளவு,எண்ணெய் - 2 ஸ்பூன்செய்முறை:கடாயில் 1 ஸ்பூன் எண்ணெய் விட்டு உளுத்தம்பருப்பு, மிளகு, பெருங்காயத்தூள், காய்ந்த மிளகாய், சீரகம் தேங்காய் துருவல், வாழைப்பூ ஆகியவற்றைப்போட்டு சிறிது பச்சை வாசனை போகும் வரை வதக்கி கொள்ளவும்.பின்னர் ஆற வைத்து புளி, தேவையான அளவு உப்பு சேர்த்து மிக்ஸியில் போட்டு கெட்டியாக அரைக்க வேண்டும். வாழைப்பூ துவையல் சாப்பிட சுவையாக இருக்கும்
.தேவையான பொருட்கள்:1 முள்ளங்கி,1012 சின்னவெங்காயம்,3ஸ்பூன்தேங்காய்துருவல்,4பச்சைமிளகாய்,புளிசிறிதளவு ,பூண்டுபல் – 2,இஞ்சி- 1 இன்ச் ,சிறிதுமல்லி கருவேப்பிலை,3 ஸ்பூன் உளுந்து,3 ஸ்பூன் கடலை பருப்பு,ஆயில் - 2 ஸ்பூன்,உப்பு தேவைக்கு ஏற்ப. செய்முறை -ஆயில் ஊற்றிக் காய்ந்ததும் 3 ஸ்பூன் உளுந்து,3 ஸ்பூன்கடலை பருப்பு சேர்த்து வறுக்கவும்.பிறகு முள்ளங்கி மற்றும் வைத்து உள்ள அனைத்து பொருட்களையும் சேர்த்து வதக்கவும்.ஆறிய பிறகு அரைத்து கொள்ளவும். வேண்டுமானால் தாளித்து கொள்ளலாம்.
தேவையானபொருட்கள்:1/2 சுரைக்காய்,2பச்சைமிளகாய்,சிறிதளவுகறிவேப்பிலை, சிறிதளவுமல்லித்தழை,உப்புதேவைக்கு ஏற்ப ,புளி சிறிதளவு,ஒரு சிட்டிகை மஞ்சள் தூள்,1ஸ்பூன் கடுகு உளுந்து,1 ஸ்பூன் எண்ணெய். செய்முறை -கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுந்து, கருவேப்பிலை ,பச்சை மிளகாய் ,போட்டு தாளிக்கவும்.தோலை நீக்கி நறுக்கி வைத்திருக்கும் சுரைக்காயை சேர்த்து உப்பு, மஞ்சள் தூள், சேர்த்து சிறிது நேரம் நன்றாக வதக்கவும். சிறிது நேரம் கழித்து அடுப்பை அணைக்கவும்.நன்றாக ஆறிய பின்பு மிக்ஸியில் அரைத்து எடுக்கவும். தோசை இட்லியுடன் பரிமாறவும்.மிகவும் சுலபமான ருசியான சுரைக்காய் துவையல் எல்லாருக்கும் ரொம்ப பிடிக்கும்.
தேவையான பொருட்கள் - பொடியாக நறுக்கிய சேனைத் துண்டுகள் – 2 கப்,தேங்காய் துருவல் – 1 கப்,மிளகாய் தூள் – 1 டீஸ்பூன்,மஞ்சள் தூள் – 1 டீஸ்பூன்,சீரகம் – 1 டீஸ்பூன்,பூண்டு – 3 பற்கள்,உப்பு, கறிவேப்பிலை, எண்ணெய், கடுகு- தேவையான அளவு செய்முறை - முதலில் சேனைக் கிழங்கு, கறிவேப்பிலை உள்ளிட்ட பொருட்களை நறுக்கி வைத்து கொள்ளவும். அடுத்து அடுப்பில் பாத்திரம் வைத்து தண்ணீர் சேர்த்து சேனைத் துண்டுகள் சேர்த்துசிறிதளவு உப்பு சேர்த்து வேகவைத்து எடுத்துக் கொள்ளவும். அடுத்து கடாயில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் கடுகு சேர்த்து பொரிந்ததும் வேகவைத்த சேனைக்கிழங்கு, உப்பு, கறிவேப்பிலை சேர்க்கவும். தேங்காய் துருவல், மஞ்சள் தூள், மிளகாய் தூள், பூண்டு, சீரகம் சேர்த்து மிக்சியில் போட்டு அரைத்து கலவையை அதனுடன் சேர்க்கவும். இப்போது எல்லாவற்றையும் கிளறி, ஒரு ஸ்பூன் எண்ணெய் சேர்த்து மீண்டும் கிளறி இறக்கினால் சுவையான சேனைக் கிழங்கு பொரியல் ரெடி.