25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வைப்பாறு, வைகை ஆறுகள் புத்துயிர் பெற மேற்கு தொடர்ச்சி மலையை பாதுகாக்க வேண்டும் >> இயந்திரம் மூலம் நெல் நடவு பணியை நாடும் விவசாயிகள். >> (நவ. 6) முதல் ராஜபாளையத்தில் புத்தக கண்காட்சி >> அய்யனார் கோவில் நீர்வீழ்ச்சியில் குளிப்பதற்கு தடை. ஒத்துழைக்காத பொதுமக்கள். யாருக்கு நஷ்டம்?. >> எ.கா .த .தர்மராஜா பெண்கள் கல்லூரியில் ரோட்ராக்ட் கிளப் துவக்க விழா >> 227 படுக்கைகளுடன் இராஜபாளையம் அரசு ஆஸ்பத்திரி  தரம் உயர்வு >> இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >>


சமையல்

Feb 17, 2024

வெஜிடபிள் பிரியாணி

தேவையான பொருட்கள் -  அரிசி 3 கப், காரட் அரை கப் நறுக்கியது, உருளைக்கிழங்கு அரை கப் நறுக்கியது, பச்சைப்பட்டாணி அரை கப் நறுக்கியது, பீன்ஸ் அரை கப் நறுக்கியது, காலிஃபிளவர் அரை கப் நறுக்கியது, வெங்காயம் அரை கப் நறுக்கியது, மசாலா அரை கப் நறுக்கியது, பச்சைக் கொத்தமல்லி பூண்டு 10 பல், இஞ்சி சிறிய துண்டு, பச்சை மிளகாய் 8 அல்லது 10, தேங்காய் துருவல் கால் கப், வெங்காயம் நறுக்கிய துண்டு கால் கப், பட்டை சோம்பு சிறிது, ஏலக்காய் கிராம்பு சிறிது.செய்முறை - முதலில் அரிசியை நன்றாக நெய் அல்லது டால்டா விட்டு வறுத்துக் கொள்ள வேண்டும். (வாசனை வரும் வரை) மேற்கண்ட மசாலாப் பொருட்களை பச்சையாக அரைத்து வைத்துக் கொள்ள வேண்டும். குக்கரில் சிறிது டால்டா அல்லது நெய் ஊற்றி (கால் கப்) நறுக்கிய காய்கறிகளைப் போட்டு நன்றாக வதக்கவும். அத்துடன் மசாலா கலவையையும் போட்டு மூன்று நிமிடம் வதக்கவும். பின்பு அரிசியையும் 6 கப், தண்ணீருடன் சேர்த்து நன்றாகக் கலந்து தேவையான அளவு உப்பையும். சேர்த்து அடுப்பில் குக்கரை வைத்து, ஆவி வந்த பிறகு வெயிட் போட்டு 5 நிமிடம் கழித்து இறக்கி விட வேண்டும். ஆறிய பிறகு 1 மூடி எலுமிச்சம்பழச் சாறைப் பிழிந்து கலந்து விடவும். இதனுடன் தொட்டுச் சாப்பிட வெங்காயம், தயிர் பச்சடி ஏற்றது .ரொட்டித் துண்டுகளை நெய்யில் வறுத்து வெஜிடபிள் பிரியாணியில் போட்டால் நன்றாக இருக்கும்.

Feb 17, 2024

காளான் பிரியாணி

 தேவையான பொருட்கள் - காளான் கால் கிலோ, அரிசி அரை கிலோ, பெரிய வெங்காயம் 4, ஏலக்காய் 5, பட்டை 15 கிராம், இலவங்கம் (கிராம்பு)7, எண்ணெய் 4 தேக்கரண்டி, கசகசா 2 தேக்கரண்டி,செய்முறை -  கிராம்பு, பட்டை, கசகசா, இவற்றை நன்றாக அரைத்து வைத்துக் கொள்ள வேண்டும், காளானை துண்டு துண்டாக நறுக்கி, தண்ணீரில், உப்பு போட்டு வேக வைக்கும் போது அரைத்து வைத்துள்ள மசாலாவை இத்துடன் கலக்க வேண்டும்.பிறகு எண்ணெயைச் சுடவைத்து அதில் வெங்காயத்தைப் போட்டு வலுக்க வேண்டும். இதனுடன் காளானையும் போட்டு வறுக்க வேண்டும், இப்பொழுது அரிசியை வேக வைத்து அரிசி பாதி வெந்தவுடன் வறுத்த வெங்காயம், மசாலா கலந்த காளான், ஏலக்காய் முதலியவற்றைப் போட்டுக் கிளறி அரிசி ஒன்றாக வெந்தவுடன் இறக்கி விட வேண்டும். சுடச் சுட சாப்பிட்டால் மிகவும் சுவையாக இருக்கும்.

Feb 17, 2024

பாசிப்பயறு பிரியாணி

 தேவையான பொருட்கள் -  முளைகட்டிய பாசிப்பயறு 100 கிராம், பச்சரிசி 100 கிராம், தேங்காய் அரை மூடி, மிளகாய் 5, பூண்டு 2, இஞ்சி சிறிதளவு, பட்டை 1 துண்டு, கிராம்பு 2, ஏலக்காய் 1, பெல்லாரி 1, தக்காளி 1, ரீஃபைண்ட் ஆயில் 2 ஸ்பூன், பெருஞ்சீரகம் கசகசா 1 டீஸ்பூன், முந்திரி பருப்பு 1 ஸ்பூன், உப்பு தேவையான அளவு.செய்முறை -  குக்கரில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பட்டை, கிராம்பு, ஏலம் போடவும், பின் இஞ்சி பூண்டு, மிளகாய், பெருஞ்சீரகம், கசகசா, மல்லித்தழை முந்திரிப்பருப்பு எல்லாவற்றையும் நைஸாக அரைத்து பின் தேங்காய் பாலையும், குக்கரில் ஊற்றி வதக்கவும்,  தேங்காய்ப் பால் கொதித்ததும் தேவையான அளவு உப்பு போட்டு, அரிசி முளைப்பயிறு போட்டு குக்கரை மூடி வைக்கவும். வெந்ததும் இறக்கவும். சத்தான பிரியாணி.

Feb 17, 2024

கோதுமை பிரியாணி

 தேவையான பொருட்கள் -  உடைத்த கோதுமை 1 ஆழாக்கு, உருளைக்கிழங்கு 1, கேரட், பீன்ஸ், பச்சை பட்டாணி ஒவ்வொன்றும் 50 கிராம், வெங்காயம் 2, பச்சை மிளகாய் 4, இஞ்சி சிறிய துண்டு, பூண்டு 1, கொத்தமல்லித்தழை 1 கட்டு, புதினா 1 கட்டு, பட்டை, கிராம்பு சோம்பு வாசனைக்கு ஏற்றபடி, கடலை எண்ணெய் 1 தேக்கரண்டி.செய்முறை -  முதலில் உடைத்த கோதுமையை தேவைக்கேற்ப உப்பு சேர்த்து வேக வைத்துக் கொள்ள வேண்டும். காய்கறிகளை நறுக்கி வைத்து கொண்டு, வெங்காயம், புதினா, மல்லித்தழை ஆகியவற்றைப் பொடியாக நறுக்கி வைத்து கொள்ள வேண்டும்.பச்சைமிளகாய், பூண்டு, இஞ்சி,பட்டை, சோம்பு கிராம்பு இவற்றை நன்றாக அரைத்துக் கொள்ளவும்.வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்தவுடன் அரைத்து வைத்திருக்கும் மசாலா, வெங்காயம், புதினா, மல்லி இலை போட்டுக் கிளறவும். பிறகு நறுக்கி வைத்த காய்கறிகளைப் போட்டு தண்ணீர் விட்டு  வெந்தவுடன் வேகவைத்த கோதுமையை அதனுடன் சேர்த்து நன்கு கிளறி இறக்கவும். கோதுமை பிரியாணி தயார்.

Feb 17, 2024

அவல் பிரியாணி

 தேவையான பொருட்கள் -  அவல் கால் கிலோ, உருளைக் கிழங்கு 100 கிராம், காரட் 100 கிராம்,  பச்சைப்பட்டாணி 50 கிராம், பல்லாரி 2, தக்காளி 1, தேங்காய் 1 மூடி, இஞ்சி சிறிதளவு, பட்டை சோம்பு சிறிதளவு, உப்பு தேவையான அளவு, பச்சை மிளகாய் 5.செய்முறை -  ஒரு பாத்திரத்தில் வெந்நீர் வைத்து இறக்கி அதில் அவலைப் போடவும். உருளைக் கிழங்கு, காரட், பட்டாணி வேக வைக்கவும். தேங்காய், இஞ்சி, பச்சை மிளகாய், பட்டை, சோம்பு ஆகியவற்றைச் சேர்த்து அரைக்கவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுந்தம்பருப்பு, பல்லாரி, தக்காளி வதக்கி பின் அவலைப் போட்டு வதக்கி அரைத்த விழுதையும் போட்டுக் கிளறி உப்பு சேர்த்து கிளறி இறக்கவும்.

Feb 17, 2024

சேமியா பிரியாணி

தேவையான பொருட்கள் -  ஆட்டுக்கறி 200 கிராம், சேமியா 200 கிராம், டால்டா 100 கிராம், தக்காளி 250 கிராம், பெரிய வெங்காயம் 3, பச்சை மிளகாய் 4, மிளகாய்த்தூள் 1 தேக்கரண்டி, கொத்தமல்லித்தூள் 2, இஞ்சி 1 துண்டு, பூண்டு 10 பல், பட்டை கிராம்பு சிறிது, ஏலக்காய் 5, உப்பு தேவையான அளவுசெய்முறை  - முதலில் கறியை சிறுசிறு துண்டுகளாக நறுக்கி கழுவி வைக்கவும். இஞ்சி, பூண்டு, பட்டை, கிராம்பு, ஏலக்காய், ஆகியவற்றை அம்மியில் விழுதாக அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.வெங்காயம், பச்சை மிளகாய், தக்காளிப்பழம், ஆகியவற்றை சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். வாணலியில் டால்டாவை ஊற்றி அடுப்பில் வைக்கவும். டால்டா காய்ந்ததும் அதில் வெங்காயம், பச்சை மிளகாய் போட்டு வதக்கிக் கொண்டு பின் தக்காளி துண்டுகளைப் போட்டு வதக்க வேண்டும்.நன்றாக வதக்கி நறுக்கி வைத்துள்ள கறியைப் போட்டு கிளறி, அதனுடன் அரைத்த இஞ்சியை போட்டு கிளறி வதக்கவும். மிளகாய்த்தூள், கொத்தமல்லித் தூள், மஞ்சள்தூள், உப்பு இவைகளைப் போட்டு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி வேக விட வேண்டும். கறி நன்றாக வெந்ததும் சேமியாவைப் போட்டு கிளறி மூடி வைக்கவும். சேமியா வெந்து,வற்றி வருகையில் இறக்கி வைக்க வேண்டும். இதுவே சேமியா பிரியாணி. இது சாப்பிட சுவையாக இருக்கும்.

Feb 10, 2024

பீட்ரூட்  கொழுக்கட்டை ( மோதகம் )

தேவையான பொருட்கள்- பச்சரிசி மாவு- 2 கப் ,பீட்ரூட்- 1, வெல்லம்- கால் கிலோ ,கடலைப்பருப்பு- ஒரு கப் தேங்காய் துருவல், 1 கப் ஏலக்காய்- ஒரு ஸ்பூன் செய்முறை: முதலில் பீட்ருட்டை தோலை நீக்கி விட்டு கழுவி ஒரு மிக்சி ஜாரில் போட்டு அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். அரைத்து வைத்துள்ள பீட்ருட் விழுதை வடிகட்டி எடுக்க வேண்டும். வடிகட்டிய பீட்ருட் சாறை தனியாக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். அதன்பிறகு அடுப்பில் ஒரு குக்கரை வைத்து கடலைப்பருப்பை கழுவி விட்டு குக்கரில் போட்டு வேக வைக்க வேண்டும்.கடலைப்பருப்பு வேகும் நேரத்திற்குள் அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து வடிகட்டி எடுத்து வைத்துள்ள பீட்ருட் சாரை சேர்த்து கொதிக்க விட வேண்டும்.பீட்ருட் சாறு கொதித்து வரும் பொழுது அதில் எடுத்து வைத்துள்ள பச்சரிசி மாவை சேர்த்து நன்றாக கைவிடாமல் கலந்து விட வேண்டும்.மாவு நன்றாக கெட்டி பதத்திற்கு வந்த பிறகு அதை ஒரு பாத்திரத்திற்கு மாற்றிக் கொள்ள வேண்டும். அதன்பிறகு அடுப்பில்வேறொரு பாத்திரத்தை வைத்து அதில் வெல்லம், சிறிதளவு தண்ணீர் சேர்த்து தெளித்து நன்றாக கிளறி விட வேண்டும். வெல்லம் பாகு பதத்திற்கு வந்த பிறகு அதில் தேங்காய் துருவல் சேர்த்து நன்றாக கலந்து விட வேண்டும்.பின்னர் அதில் பொடித்து வைத்துள்ள ஏலக்காய் தூள் சேர்த்து கிளறி விட வேண்டும்.குக்கரில் வேகவைத்த கடலைப்பருப்பு நன்றாக மசியும் படி வெந்த பிறகு அதை தேங்காய் துருவல் கலந்த பாகில் சேர்த்து நன்றாக கலந்து விட வேண்டும்பூரணம் நன்றாக கெட்டியாக வந்த பிறகு அடுப்பை அணைத்து விட வேண்டும். பிறகு மோதக அச்சில் பீட்ருட் கலந்த மாவை சேர்த்து நன்றாக மோதகம் போல் செய்து அதற்குள்இந்த கடலைப்பருப்பு தேங்காய் பூரணத்தை வைத்து மூட வேண்டும். கொழுக்கட்டை செய்தபிறகு இட்லி பாத்திரத்தில் ஆவியில் வேக வைத்து எடுத்தால் சுவையான ஆரோக்கியமான பீட்ருட் கொழுக்கட்டை மோதகம் தயார்.

Feb 10, 2024

ஓட்ஸ் அம்மிணிக்கொழுக்கட்டை

செய்முறை:ஓட்ஸ்- 1 கப்பச்சரிசிமாவு- 1 கப்தேங்காய்த்துருவல்- 1/4 கப்உப்பு- தேவையான அளவுகாயம்- சிறிதளவுதாளிக்க:எண்ணெய்- 1 தேக்கரண்டிகடுகு- 1 தேக்கரண்டிகடலைப்பருப்பு- 1/2 தேக்கரண்டிவெள்ளை உளுத்தம்பருப்பு- 1/2 தேக்கரண்டிகறிவேப்பிலை- 1 இணுக்குதூவ:மிளகாய்த்தூள்- சிறிதளவுமிளகுத்தூள்- சிறிதளவுஇட்லி மிளகாய்ப்பொடி- 1/2 தேக்கரண்டிசெய்முறை:1.மின்னரைப்பானில் ஓட்ஸைத் திரித்துக் கொள்ளவும்.2. திரித்த ஓட்ஸ், அரிசிமாவைப் பச்சை வாடைப் போக வதக்கிக் கொண்டு உப்பு, காயம் சேர்க்கவும்.3. வழக்கமாகக் கொழுக்கட்டைக்குச் செய்வது போல சுடுதண்ணீரைச் சேர்த்துக் கொழுக்கட்டை மாவு பதத்திற்கு ஆக்கவும்.4. தேங்காய்த்துருவலைச் சேர்க்கவும்.5. அடுப்பை அணைத்து விட்டு சூடு லேசாக ஆறியதும் உருண்டைகள் ஆக்கவும்.6. இட்லிப்பானையில் தட்டுக்களில் எண்ணெய் தடவிக் கொழுக்கட்டைகளை அடுக்கவும்.7. ஆவியில் வேக விடவும்.8. அவை வெந்து கொண்டிருக்கும் போது இன்னொரு வாணலியில் தாளிசப்பொருட்களைத் தாளித்துக் கொள்ளவும்.9. கொழுக்கட்டை தயாரானதும் ஓரிரு நிமிடங்கள் வெளியே வைத்து சூடு ஆற விடவும்.10. தாளித்தப் பொருட்களுடன் கொழுக்கட்டைகளைப் பிரட்டி எடுக்கவும்.11. அப்போது முப்பொடிகளைத்(மிளகாய்த்தூள், மிளகுத்தூள், இட்லி மிளகாய்ப்பொடி) தூவிப் பிரட்டவும்.12. மிகவும் ருசியாக இருக்கும் ஓட்ஸ் காரக்கொழுக்கட்டை. அம்மிணிக்கொழுக்கட்டையின் பாணியில் செய்வதால் ஓட்ஸ் அம்மிணிக்கொழுக்கட்டை.

Feb 10, 2024

அவல் கொழுக்கட்டை

தேவையானவை:வெள்ளை அவல் அல்லது சிவப்பு அவல்- 2 டம்ளர்தேங்காய்த்துருவல்- 3 தேக்கரண்டிஉப்பு- தேவையான அளவுதண்ணீர்- சிறிதளவுதாளிக்க:நல்லெண்ணெய்- 1 தேக்கரண்டிகடலைப்பருப்பு- 1 தேக்கரண்டிவெள்ளை உளுத்தம்பருப்பு- 1 தேக்கரண்டிபச்சைமிளகாய்- 2காயம்- சிறிதளவுகறிவேப்பிலை- 1/2 இணுக்குசெய்முறை:1. அவலைத் தண்ணீர் விட்டு 15 நிமிடங்கள் ஊற விடவும்.2. ஊறிய அவலைக் கைகளால் நன்றாக மசித்துக் கொள்ளவும். உப்பு சேர்த்துப் பிசையவும்3. அடுப்பை ஏற்றி வாணலியில் தாளிசப் பொருட்களைத் தாளித்துக் கொண்டு மசித்த அவலைப் போட்டு ஒரு பிரட்டு பிரட்டவும்4. தேங்காய்த்துருவலைப் போட்டு இறக்கி ஆற விட்டு உருண்டைகள் பிடித்து இட்லி குக்கரில் வேக விடவும்(மற்ற கொழுக்கட்டைகள், இட்லி போல அதிக நேரங்கள் வேக விடத் தேவையில்லை, ஐந்தே நிமிடங்கள் போதுமானது)5. கொழுக்கட்டைகள் வெந்ததும் தக்காளிச்சட்னி அல்லது புதினாச்சட்னியுடன் பரிமாறவும். மிளகாய்ப்பொடி கூட அருமையான இணை.6. வெங்காயம், கேரட் துருவிப் போட்டும் செய்யலாம்.7. வெறும் தண்ணீரில் ஊற வைக்காமல் புளித்தண்ணீரில் ஊற வைத்தால் புளி அவல் கொழுக்கட்டை, புளி நீரில்லாமல் மோரில் ஊற வைத்துச் செய்தால் மோர் அவல் கொழுக்கட்டை.

Feb 10, 2024

காரக்கொழுக்கட்டை

தேவையான பொருட்கள்:பச்சரிசி மாவு- ஒரு கிண்ணம்காரப்பொடி- 1 தேக்கரண்டிதேங்காய்- 1/4 கிண்ணம்எண்ணெய்- 2 தேக்கரண்டிகடுகு- 1 டீஸ்பூன்வெள்ளை உளுத்தம்பருப்பு- 2 டீஸ்பூன்கறிவெப்பிலை- 1 இணுக்குகாயம்- 1/2 டீஸ்பூன்உப்பு- தேவையான அளவுசெய்முறை:1. பச்சரிசி மாவை ஒரு வாணலியில் பச்சை வாடை போக சிறிது வறுத்துக் கொள்ளவும்.2. வறுத்த மாவுடன் உப்பு, காயம், காரப்பொடி போட்டு கலந்து மிதமான தீயில் வதக்கவும்.3. 3/4 டம்ளர் நீரைச் சுட வைக்கவும்4. எண்ணெயில் கடுகு, வெள்ளை உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை தாளித்து சுடு நீருடன் சேர்க்கவும்.5. சுடு தண்ணீரை மாவுடன் சிறிது சிறிதாகக் கலக்கவும். துருவின தேங்காயைச் சேர்த்து நன்றாக மாவைக் கிளறவும்.6. மாவை உருண்டைகளாக உருட்டி இட்லி குக்கரில் தட்டில் வேக வைத்து எடுக்கவும்.7. மாலை நேரத்து சுவை மிகுந்த சிற்றுண்டி இது.சூடான சுவையான இவ்வகை காரக்கொழுக்கட்டைகள் எனக்கு உனக்கு என்று போட்டி போட்டபடியே வியாபாரம் ஆகும்.கூடுதல் கவனத்திற்கு:1. அதிகத் தண்ணீர் விட்டால் மாவு உருண்டைகள் பிடிக்க வராது.2. காரப்பொடியைப் பார்த்து அளவாகப் பயன்படுத்த வேண்டும்.3. தேங்காய் போட்டால் சீக்கிரம் கெட்டு விடும். பண்ணின சில மணி நேரங்களிலேயே சாப்பிட்டு விட வேண்டும்.

1 2 ... 15 16 17 18 19 20 21 22 23 24

AD's



More News