25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >> பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >>


பூசணிக்காய் சட்னி (பரங்கிக்காய் ).
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

பூசணிக்காய் சட்னி (பரங்கிக்காய் ).

 தேவையான பொருட்கள்:-

பூசணிக்காய் (பரங்கிக்காய்) - 1 கப் (துண்டுகளாக்கப்பட்டது)

தேங்காய் துருவல் - 1/4 கப்,புளி – சிறிதளவு,கொத்தமல்லி தழை – சிறிதளவு,

பச்சை மிளகாய் - 2-3,உளுத்தம் பருப்பு - 1 ஸ்பூன்,கடலைப்பருப்பு - 1 ஸ்பூன்,

காய்ந்த மிளகாய் - 2-3,சீரகம் - 1/2 டீஸ்பூன்,மிளகு - 1/2 டீஸ்பூன்,உப்பு - தேவையான அளவு,

எண்ணெய் - வதக்குவதற்கு தேவையான அளவு .

செய்முறை:-

ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி, கடலைப்பருப்பு, உளுத்தம் பருப்பு, காய்ந்த மிளகாய், சீரகம், மிளகு, கொத்தமல்லி ஆகியவற்றை போட்டு பொன்னிறமாக வதக்கவும்.

அதனுடன் பொடியாக நறுக்கிய பரங்கிக்காயை சேர்த்து நன்கு வதக்கவும்.

பரங்கிக்காய் நன்கு வெந்ததும், அதில் புளி, தேங்காய் துருவல், மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து, சிறிது நேரம் வதக்கவும்.

வதக்கிய கலவையை ஆறவிட்டு, தேவையான அளவு உப்பு சேர்த்து மிக்ஸியில் சேர்த்து நைஸாக அரைத்து எடுக்கவும்.

சுவையான மற்றும் ஆரோக்கியமான பரங்கிக்காய் சட்னி தயார். இதை இட்லி, தோசை, பொங்கல் போன்றவற்றுடன் சேர்த்து பரிமாறலாம். 

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News