பிரண்டை சட்னி.
தேவையான பொருட்கள்-
பிரண்டை- ஒரு கப், வத்தல் -6,மூன்று பல்பூண்டு, ஒரு சிறிய நெல்லிக்காய் அளவு புளி,குழம்பு கடலை பருப்பு - ஒரு டீஸ்பூன்
உளுந்தம் பருப்பு - ஒரு டீஸ்பூன்,இஞ்சி - ஒரு சிறிய துண்டு,தேங்காய் துருவல்-அரைகப்
செய்முறை-
முதலில் பிரண்டையை சிறு சிறு துண்டுகளாக, நார் எடுத்து உரித்து வைத்துக் கொள்ள வேண்டும்.ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி கடலைப்பருப்பு, உளுந்தம் பருப்பை பொன்னிறமாக வறுக்கவும். பின்னர் வத்தல் சேர்த்து வறுக்கவும்.
பின்னர் கருவேப்பிலை, இஞ்சி,பூண்டு, தேங்காய் துருவல் சேர்த்து நன்கு வதக்க வேண்டும். அனைத்தையும் நன்கு5 நிமிடம் வதக்க வேண்டும். பின் பிரண்டையை நல்லெண்ணெய் ஊற்றி, நிறம் மாறும் வரை ஐந்து நிமிடம் வதக்க வேண்டும்.
பின்னர் ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு உப்பு சேர்த்து நன்கு அரைத்து எடுத்துக் கொள்ளவும். சுவையான பிரண்டைக்காய் சட்னி ரெடி.மருத்துவ குணம் நிறைந்த பிரண்டை சட்னி. நன்கு பசி எடுக்கும் .எலும்பு வலுப்படும்
0
Leave a Reply