25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >> பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >>


சமையல்

Oct 25, 2025

வாழைக்காய் சட்னி.

தேவையான பொருட்கள்-வாழைக்காய் -2; தேங்காய் துருவல் - கால் கப்; வரமிளகாய் - 5; புளி -தேவைக்கேற்ப; எண்ணெய் தேவையான அளவு சின்ன வெங்காயம் - 10; பூண்டு - 4 பற்கள்; சீரகம் - 1 டீஸ்பூன்; கறிவேப்பிலை -சிறிதளவு; உப்பு -தேவைக்கேற்பசெய்முறை -முதலில் வாழைக்காயின் தோலை நீக்கி நன்றாக வேகவைத்து வேண்டும்.அவற்றை சிறிய துண்டுகளாக நறுக்கிகொள்ளவும்.பின் கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் வர மிளகாய், பூண்டு, நறுக்கிய சின்ன வெங்காயம், புளி, தேங்காய் துருவல் ஆகியவற்றை தனித்தனியே வறுத்து வைத்துகொள்ளவும். மிக்ஸி ஜாரில் வறுத்த அனைத்து பொருட்களை சேர்க்க வேண்டும்.அத்துடன் சீரகம், கறிவேப்பிலை சேர்த்து நன்றாக அரைக்க வேண்டும்.இறுதியாக, தேவையான அளவு உப்பு மற்றும் வேகவைத்த வாழைக்காய் துண்டுகளை சேர்த்து அரைக்க வேண்டும்.சுவையான வாழைக்காய் சட்னி ரெடி. இதை இட்லி, தோசையுடன் சேர்த்து சாப்பிட்டால் சூப்பராக இருக்கும்.

Oct 25, 2025

கடலைப்பருப்பு கார தோசை.

தேவையான பொருட்கள்: இட்லி அரிசி - 1 கப்,கடலை பருப்பு – கால் கப்,துவரம் பருப்பு - கால் கப்,உளுந்து - 1 ஸ்பூன்,வர மிளகாய் – 5,சின்ன வெங்காயம் – 15,பூண்டு - 7 பல்,கறிவேப்பிலை – சிறிதளவு,கடுகு – அரை ஸ்பூன்,மஞ்சள் தூள் - கால் ஸ்பூன்,மிளகு - 1 ஸ்பூன்,சீரகம் - 1 ஸ்பூன்,எண்ணெய் - தேவையான அளவு,உப்பு - தேவையான அளவு ,செய்முறை: இட்லி அரிசி, கடலை பருப்பு, துவரம் பருப்பு, உளுந்து ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து குறைந்தது 1 மணி நேரம் ஊற வைக்கவும்.ஊற வைத்த அரிசி, பருப்புடன் வர மிளகாய், கறிவேப்பிலை, சின்ன வெங்காயம், பூண்டு, மஞ்சள் தூள், மிளகு, சீரகம், தேவையான அளவு உப்பு சேர்த்து, சிறிது தண்ணீர் விட்டு தோசை மாவு பதத்திற்கு அரைத்து எடுக்கவும்.அடுப்பில் தோசைக்கல்லை வைத்து சூடாக்கி, எண்ணெய் தடவவும்.அரைத்த மாவை எடுத்து தோசைக்கல்லில் பரப்பி, இருபுறமும் எண்ணெய் விட்டு பொன்னிறமாகும் வரை சுட்டு எடுக்கவும்.இதே முறையில் அனைத்து மாவையும் தோசைகளாக சுட்டு எடுக்கவும். 

Oct 25, 2025

முருங்கைப்பூ வடை. 

தேவையான பொருட்கள்:முருங்கைப்பூ- 1 கப்துவரம் பருப்பு- 50 கிராம்பெரிய வெங்காயம் - 2காய்ந்த மிளகாய் -5பூண்டு, சீரகம். கடுகு. உப்புகறிவேப்பிலை - சிறிதளவு தண்ணீர், எண்ணெய்- தேவையான அளவு.செய்முறை:முருங்கை பூவை சுத்தம் செய்து நறுக்கவும். அதனுடன் வேக வைத்த துவரம் பருப்பு, பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம், கிள்ளிய காய்ந்த மிளகாய், அரைத்த பூண்டு, சீரகம்,கடுகு, கறிவேப்பிலை, உப்பு சேர்த்து பிசைந்து வடையாக்கவும். வாணலியில் எண்ணெய் சூடானதும் வேகவைத்து எடுக்கவும்.சுவை மிக்க,'முருங்கைப்பூ வடை!' தயார். சத்துக்கள் நிறைந்தது. அனைத்து வயதினரும் விரும்பி சாப்பிடுவர்.

Oct 25, 2025

அன்னாசி பழ பாயசம்! 

தேவையான பொருட்கள்:அன்னாசிபழத்துண்டு - 1 கப்பச்சரிசி - 1 கப் பாதாம், முந்திரி,நெய் - சிறிதளவுசர்க்கரை, தண்ணீர் -  தேவையான அளவு.செய்முறை:அன்னாசி பழத்துண்டுகளை அரைத்து சாறு எடுக்கவும். பாதாம் பருப்பை நீரில் ஊற வைத்து, தோல் நீக்கி நன்றாக அரைக்கவும். பச்சரிசியை வறுத்து ரவை போல பொடியாக்கவும்.பாத்திரத்தில் தண்ணீர் கொதித்ததும், அரிசி ரவையை போட்டு கிளறவும். வெந்ததும், சர்க்கரை, நெய்யில் வறுத்த முந்திரி, பாதாம் விழுது, நெய், அன்னாசி பழச்சாறு கலந்து இறக்கவும்.புதுமையான, 'அன்னாசி பழ பாயசம்!' தயார். சுவை மிக்கது. அனைத்து வயதினரும் விரும்பி பருகுவர்.

Oct 25, 2025

காளான் கிரேவி .

தேவையானவை:நறுக்கிய பட்டன் காளான் - 200 கிராம், வறுத்து அரைக்க: கொத்தமல்லி - 1 டேபிள் ஸ்பூன், சீரகம் - ½டீஸ்பூன், சோம்பு-1 டீஸ்பூன், பிரியாணி இலை -1, மிளகு - 2 டேபிள் ஸ்பூன், வரமிளகாய் - 3, சிறு அன்னாசிப்பூ - 1, பட்டை -2, இலவங்கம், ஏலக்காய் - 4, தேங்காய்த் துருவல் - % கப், உப்பு - தேவையான அளவு, எண்ணெய் - 4 டேபிள் ஸ்பூன், நெய் - 2 டேபிள் ஸ்பூன், முந்திரி நைசாக அரைத்தது-12. மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன், கறிவேப்பிலை -சிறிதளவு, பொடியாக கட் செய்த கொத்தமல்லித் தழை, பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம் -½ கப், பொடியாக நறுக்கிய தக்காளி - 1. சோம்பு -½ தேக்கரண்டி, இஞ்சி பூண்டு விழுது - 1 டேபிள் ஸ்பூன்.செய்முறை:அரைக்க வேண்டிய பொருட்களைத் தனித்தனியாக லேசாக வறுத்து ஆறவிட்டு நைசாகப் பொடி செய்து வைக்கவும். தேங்காயையும் வறுத்துப் பொடித்த மசாலாவுடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்து நைசாக அரைத்து வைக்கவும்.. ஒரு வாணலியில் எண்ணை விட்டுக் காய்ந்ததும் சோம்பு, வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும். பின் மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும். இதில் உப்பு, இஞ்சி பூண்டு விழுது சேர்த்து1 நிமிடம் வதக்கவும். பின் இதனுடன் தக்காளி சேர்த்து மசிய வதக்கவும். பின் காளான் சேர்க்கவும். சிறிது தண்ணீர் சேர்த்து மூடி10 நிமிடங்கள் வேக வைக்கவும்.வெந்ததும் அரைத்த மசாலா சேர்த்துத் தேவையான அளவுதண்ணீர் ஊற்றிவேகவைத்து முந்திரி விழுது சேர்த்துக் கலந்து2 நிமிடம் கொதிக்க விடவும். பின் நெய் சேர்த்து மூடி, சிம்மில் வைத்து2 நிமிடம் வேக வைக்கவும். கொத்தமல்லி இலை, கறிவேப்பிலை சேர்த்து இறக்கவும். இது சாதம், சப்பாத்தி, நாண் போன்றவற்றுக்கு சூப்பராக இருக்கும்!

Oct 25, 2025

கேரட் சூப்! 

தேவையானவை -கேரட் - 3. பெரிய வெங்காயம் 1, இஞ்சி - சிறு துண்டு, உப்பு தேவைக்கு, ஆலிவ் அயில் அல்லது வெண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன், மிக்ஸட் ஹெர்ப்ஸ் (டிபார்ட்மெண்ட் ஸ்டோர்களின் கிடைக்கும்) - 1 டீஸ்பூன், மிளகுத்தூள் - 1 டீஸ்பூன், பாதாம் பருப்பு-3, புதினா - சிறதளவு.செய்முறை-வாணலியில் ஆலிவ் ஆயில் அல்லது வெண்ணெய் விட்டு, பொடியாக நறுக்கிய இஞ்சி சேர்த்து வாசம் வரும்வரை வதக்கவும். அத்துடன் நீளவாக்கில் நறுக்கிய பெரிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.தண்ணீர் சேர்த்து குக்கரில் வைத்து வேகவிடவும். வெந்ததும் தண்ணீரை வடித்துவிட்டு ஆறவிடவும். ஆறியதும் மிக்ஸியில் போட்டு நைஸாக அரைத்து எடுக்கவும். வாணலியை அடுப்பில் வைத்து, அரைத்த கேரட் விழுதைப் போட்டு வதக்கவும். ஏற்கனவே வடித்து வைத்திருக்கும் தண்ணீரையும் சேர்த்துக் கலந்துவிட்டு, கொதிக்கவிடவும். கெட்டியாக வரும்போது மிக்ஸட் ஹெர்ப்ஸ், மிளகுத்தூள் சேர்த்துக் கலந்து, அடுப்பை அணைக்கவும். பாதாம் பருப்புகளைத் தோல் உரித்துப் பொடியாக நறுக்கி சூப்பில் போடவும். புதினா இலைகளைப் பொடியாக நறுக்கிச் சேர்க்கவும். மிக்ஸ்டட் ஹெர் ப்ஸ் கிடைக்காவிட்டால், மிளகு தூள் மட்டும் சேர்த்துக் கலக்கலாம்.

Oct 18, 2025

கோதுமை துக்கடா.

தேவையான பொருட்கள்கோதுமை மாவு – 400 கிராம் ,மிளகாய் வற்றல் பொடி – 3 ஸ்பூன்,பெருங்காயத்தூள் – ½ ஸ்பூன்,வெள்ளைப் பூண்டு – 5 பல் (பெரியது),க‌ல் உப்பு – தேவையான அளவு,தண்ணீர் – தேவையான அளவு,எண்ணெய் – பொரிக்கத் தேவையான அளவு செய்முறைமுதலில் வெள்ளைப் பூண்டினைத் தோல் நீக்கி சுத்தம் செய்து கொள்ளவும்.பின் அதனை தண்ணீர் சேர்க்காமல் மிக்ஸியில் போட்டு மைய அரைத்துக் கொள்ளவும்.கல் உப்பில் தண்ணீர் சேர்த்துக் கரைத்துக் கொள்ளவும்.கோதுமை மாவுடன் மிளகாய் வற்றல் பொடி, பெருங்காயத்தூள், மையாக அரைத்த வெள்ளைப் பூண்டு விழுது, உப்பு கலந்த தண்ணீர் சேர்த்து பிசைந்து கொள்ளவும். சப்பாத்திக்கு திரட்டுவது போல் மாவினை ஒரு சேர உருண்டையாக பிசையவும்.பின் அதிலிருந்து எலுமிச்சை அளவு மாவினை எடுத்து சப்பாத்தி போல் திரட்டவும்.சப்பாத்தியானது மிகவும் மெல்லியதாகவோ, கடினமானதாக இருக்கக் கூடாது.பின் சப்பாத்தியைக் கத்தியால் சதுரத் துண்டுகளாக வெட்டவும்.இவ்வாறு எல்லா மாவினையும் சதுரத் துண்டுகளாக்கவும்.பின் வாணலியில் எண்ணெயை ஊற்றி காய விடவும்.எண்ணெய் காய்ந்ததும் சதுர துண்டுகளாக்கிய மாவினை போடவும்.அவ்வப்போது சதுரத்துண்டுகளைக் கிளறி விடவும். சதுரத் துண்டுகள் வெந்து எண்ணெய் குமிழி அடங்கியதும் எடுத்து விடவும். சுவையான கோதுமை துக்கடா தயார். இத்துக்கடா ஆறியதும் காற்று புகாத டப்பாவில் போட்டு ஒரு மாதம் வரை வைத்திருந்து பயன்படுத்தலாம்.

Oct 18, 2025

நெய் கடலை .

தேவையான பொருட்கள்கடலை பருப்பு – 200 கிராம்,வெள்ளைப் பூண்டு – 3 பற்கள் (பெரியது),கறிவேப்பிலை – 2 கொத்து, மிளகாய் பொடி – 1 ஸ்பூன்,மிளகுப் பொடி – 1 ஸ்பூன், மஞ்சள் பொடி – 3/4 ஸ்பூன் ,பெருங்காயப் பொடி – 1/2 டீஸ்பூன்,உப்பு – தேவையான அளவு,கடலை எண்ணெய் – பொரித்து எடுக்கத் தேவையான அளவுசெய்முறைகடலை பருப்பினை அலசி சுமார் 8 மணி நேரம் தண்ணீரில் ஊற வெள்ளைப் பூண்டினை தோலுடன் சேர்த்து ஒன்றிரண்டாக இடித்துக் கொள்ளவும்.வைக்கவும்.கறிவேப்பிலையை அலசி உருவி நன்கு காய வைத்துக் கொள்ளவும்.ஊறிய கடலை பருப்பினை வடிதட்டில் கொட்டி தண்ணீரை வடித்துக் கொள்ளவும்.தண்ணீர் நன்கு வடிந்ததும் உலர்ந்த துணியில் பருப்பினைக் கொட்டி விடவும். பருப்பின் மேற்புறம் ஓரளவு காய்ந்ததும் எடுத்து தனியே வைத்துக் கொள்ளவும்.வாணலியில் கடலை எண்ணெய் ஊற்றி காய விடவும். எண்ணெய் காய்ந்ததும் எடுத்து வைத்துள்ள கடலைப் பருப்பில் சிறிதளவு போடவும். கடலைப் பருப்பு எண்ணெயில் அடியில் இருக்கும்.கடலைப் பருப்பு வெந்ததும் படத்தில் உள்ளபடி எண்ணெயின் மேற்பரப்புக்கு வந்து விடும்.எண்ணெய் குமிழி அடங்கி சலசலவென வெந்ததும் கடலை பருப்பினை வெளியே எடுத்து விடவும்.வெந்த கடலை பருப்பினை வெளியே எடுக்க வலைக் கரண்டியை உபயோகிக்கவும். அப்போதுதான் வெந்த கடலைப் பருப்பினை ஒரே சீரான நிறத்துடன் கருகாமல் எடுக்க முடியும்.இவ்வாறாக எல்லா கடலைப் பருப்பினையும் வேக வைத்து எண்ணெய் வடித்து எடுத்துக் கொள்ளவும்.தட்டி வைத்துள்ள வெள்ளைப் பூண்டினை சிறிதளவு எண்ணெயில் நன்கு வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.கறிவேப்பிலையை எண்ணெயில் பொரித்து எடுத்துக் கொள்ளவும்.வாயகன்ற பாத்திரத்தில் வறுத்த கடலை பருப்பு, உப்பு, மஞ்சள் பொடி, மிளகாய் பொடி, வறுத்த வெள்ளைப் பூண்டு, கறிவேப்பிலை, மிளகுப் பொடி, பெருங்காயப் பொடி ஆகியவற்றைச் சேர்த்து நன்கு கலந்து விடவும்.சுவையான நெய் கடலை தயார்.கடலைப் பருப்பு நன்கு ஊறினால்தான் வறுத்த பின் மொறு மொறுவென்று இருக்கும்; இல்லையெனில் கடிக்கும் போது கடினமாக இருக்கும்.வெள்ளைப் பூண்டினை சேர்க்க விருப்பாதவர்கள் பூண்டினைத் தவிர்த்து விடலாம்.

Oct 18, 2025

.சீவல்.

தேவையான பொருட்கள்-இட்லி அரிசி – 400 கிராம்,பொரிகடலை – 200 கிராம்,மிளகாய் வற்றல் – 8 எண்ணம்,வெள்ளைப் பூண்டு – 3 பல் (பெரியது),பெருங்காயத்தூள் – ½ டீஸ்பூன்,வெண்ணெய் – 25 கிராம்,உப்பு – தேவையான அளவு,எண்ணெய் – பொரிக்கத் தேவையான அளவுசெய்முறை-இட்லி அரிசியை சுமார் நான்கு மணி நேரம் ஊற வைக்கவும். இட்லி அரிசியை கிரைண்டரில் போட்டு ஆட்டவும்.அரிசியை கிரைண்டரில் போட்டு பத்து நிமிடங்கள் கழித்து மிளகாய் வற்றலை சிறிது சிறிதுதாகக் கிள்ளி அரிசியில் சேர்த்து ஆட்டவும்.பின் வெள்ளைப் பூண்டு, தேவையான அளவு உப்பு ஆகியவற்றை அரிசியில் சேர்த்து ஆட்டவும்.அரிசி மாவுக் கலவையினை மையாகவும், கெட்டியாகவும் அரைத்துக் கொள்ளவும்.பொரிகடலையை மிக்ஸியில் போட்டு நைஸாக அரைக்கவும். பின் சல்லடையில் சலித்துக் கொள்ளவும்.சலித்த பொரிகடலை மாவு, வெண்ணெய், பெருங்காயத்தூள் ஆகியவற்றை அரிசி மாவுடன் கலந்து சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசையவும்.முறுக்கு உழக்கில் சீவலிற்கான‌ அச்சினைப் போட்டு மாவினை அடைத்துக் கொள்ளவும். பின் வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காயவிடவும்.எண்ணெய் காய்ந்ததும் மாவினை சீவல்களாகப் பிழிந்து விடவும். ஒரு புறம் வெந்தவுடன் மறுபுறம் திருப்பி விடவும்.சீவலில் எண்ணெய் குமிழி அடங்கியதும் சீவலை எடுத்து விடவும். சுவையான சீவல் தயார்.நன்கு ஆறியதும் காற்றுப் புகாத டப்பாக்களில் அடைத்து வைக்கவும். இதனை ஒரு மாதம் வரை உபயோகிக்கலாம். இச்சிற்றுண்டியை சிறுவர் முதல் பெரியவர் வரை அனைவரும் ரசித்து உண்பர்.வாணலியில் எண்ணெய் காய்ந்து வரும்போது சிறிதளவு புளியைச் சேர்க்கவும். இதனால் எண்ணெய் பொங்குவது தவிர்க்கப்படும்.

Oct 18, 2025

ரசகுல்லா.

தேவையான பொருட்கள் -1 லிட்டர்.பால்,150 கிராம் சர்க்கரை,1 எலுமிச்சை பழம்செய்முறை-ஒரு பாத்திரத்தில் பாலை ஊற்றி காய்ச்சிக் பொங்கிவரும் போது குறைவான தீயில் வைத்துக் கொள்ளவும்இதனுடன் எலுமிச்சை சாற்றை ஊற்றி கிளறிக் கொண்டே இருந்தால் பால் திரிந்து தண்ணீர் மற்றும் பனீர் தனியாக பிரிந்து வரும் பொழுது அடுப்பை அணைத்து விடவும்.இதனை ஒரு வெள்ளைத் துணியில் போட்டு1 டம்ப்ளர் தண்ணீர் ஊற்றி அலசி நன்கு வடிகட்டி எடுத்து கொள்ளவும்.இதனை ஒரு தட்டில் போட்டு உதிர்த்துவிட்டு8 முதல்10 எடுத்து நிமிடங்கள் பிசைந்து கொண்டால் பனீர் மிருதுவாக இருக்கும் இந்த பனீரை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி வைத்துக் கொள்ளவும்.ஒரு அகலமான பாத்திரத்தில் சர்க்கரை மற்றும் அவை மூழ்கும் அளவு தண்ணீர் சேர்த்து நன்கு கொதிக்க விட்டு பின் மிதமான தீயில் வைத்து கொள்ளவும் அதனுடன் பனீர் உருண்டைகளை சேர்த்து கொள்ளவும்.இதனை10 நிமிடங்கள் மூடி மிதமான தீயில் வைத்து வேக விடவும் இப்போது பனீர் நன்கு வெந்து பனீர் உருண்டைகள் இருமடங்காக பெரிதாக இருக்கும். இப்போது அடுப்பை அணைத்து விட்டால் ரசகுல்லா சுவைக்க தயார். இதனை ஆற வைத்து பின் பிரிட்ஜில் வைத்து குளிர்ந்த ரசகுல்லா வாகும் பரிமாறலாம்.இந்த ரசகுல்லா பாலில் இருந்து பனீர் எடுத்து செய்வதால் உடலுக்கு மிகவும் நல்லது.பாலில் எலுமிச்சைச் சாற்றை ஊற்றி திரித்து விட்டிலேயே தயாரிக்கலாம்.

1 2 ... 22 23 24 25 26 27 28 ... 70 71

AD's