25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >> ராஜபாளையம் கோதண்ட ராமசாமி கோயில்  பிரம்மோற்ஸவ கொடியேற்றம். >> புது பஸ் ஸ்டாண்டிலிருத்து  ராஜபாளையத்தில் இணைப்பு சாலை திறப்பு . >>


மணத்தக்காளி கீரை சட்னி.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

மணத்தக்காளி கீரை சட்னி.

தேவையான பொருட்கள் -

மணத்தக்காளி கீரை -ஒரு கைப்பிடி,சின்ன வெங்காயம்-10,

இஞ்சி- ஒரு சிறிய துண்டு,கடலைப்பருப்பு - ஒரு ஸ்பூன்,

உளுத்தம் பருப்பு - ஒரு ஸ்பூன்,கொத்தமல்லி- ஒரு ஸ்பூன்,

சீரகம்- கால் ஸ்பூன்,வரமிளகாய்-4,கருவேப்பிலை-சிறிதளவு,புளி-சிறிதளவு,

தேங்காய் துருவல்-5 ஸ்பூன்,எண்ணெய் -இரண்டு டேபிள் ஸ்பூன்

செய்முறை -

கீரையை நன்கு அலசி வைத்துக் கொள்ளவும். ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடலை பருப்பு ,உளுத்தம் பருப்பு, கொத்தமல்லி, சீரகம் சேர்த்து வறுக்கவும் .பின்பு வரமிளகாய், கருவேப்பிலை சேர்த்து வறுத்த உடன் இஞ்சி ,வெங்காயம் சேர்த்து வதக்கவும்.பின்பு மணத்தக்காளி கீரையை அதனுடன் சேர்த்து ஐந்து நிமிடம் வதக்கி கொள்ளவும்.அதன் பின் தேங்காய் துருவல் சேர்த்து சிறிது நேரம் வதக்கி, உப்பு தேவையான அளவு சேர்த்து புளி சேர்த்து அரைத்து எடுக்கவும்.மணத்தக்காளி கீரை சட்னி ரெடி.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *