தேவையான பொருட்கள்-சப்போட்டா 6, தயிர் ½ கப், சர்க்கரை3 டீஸ்பூன், உப்பு 1 சிட்டிகை, பேரீச்சம்பழம் 10, செய்முறை:-சப்போட்டாவை தோல்சீவிக் கொள்ளவும். பேரீச்சம்பழத்தில் கொட்டை நீக்கி கொள்ளவும்.சப்போட்டா, தயிர், சர்க்கரை, உப்பு, பேரீச்சம்பழம் எல்லாவற்றையும் ஒன்றாக மிக்ஸியில் அரைத்து வடிகட்டி பறிமாறவும்.இரும்பு மற்றும் கால்சியம் சத்துக்கள் கொண்டது.
தேவையான பொருட்கள்-பைனாப்பிள் ஜுஸ் 1கப், சாத்துக்குடி ஜூஸ் ½கப்,தேங்காய் பால் 1/2 கப்,சர்க்கரை தேவைக்கேற்பசெய்முறை-அனைத்தையும் மிக்ஸியில் போட்டு நன்கு அடித்துக் கொள்ளவும், நுரை பொங்க ஜூஸ் சேர்த்து அடித்து பருகலாம்.மிக்ஸியில் போடும்போது எல்லா ஜூசும் ப்ரெஷ்ஷாக இருக்க வேண்டும். அதிக நேரம் வெளியில் வைத்திருக்கக்கூடாது.இதை சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரும் விரும்புவர். வைட்டமின் சி அதிகமுள்ள பானம். எலும்பு உறுதியாகும். குடல் நோய்களுக்கு நல்லது.
தேவையான பொருட்கள்- தர்பூசணி (நறுக்கியது) 5 கப் புதினா 1/4 கப் ,உப்பு, மிளகு தூள், ஜல்ஜீரா 1/2 டீஸ்பூன், இஞ்சி 1 துண்டு, சர்க்கரை 3 டேபிள் ஸ்பூன்செய்முறை-அனைத்தையும் நன்கு அரைத்து வடிகட்டி பருகலாம்.தர்ப்பூசணி உடலுக்கு குளிர்ச்சி தரும். இஞ்சி ஜீரண சக்தியை அதிகரிக்கும். நாவறட்சியைத் தடுக்கும். இரும்புச்சத்து அதிகம் கொண்டது.
தேவையான பொருட்கள்:வழுக்கை இளநீர் -1 (இளநீரின் நீரும், சதைப்பகுதியும்)மாதுளை முத்து 1 கைப்பிடிபனங்கற்கண்டு (அ) வெள்ளை சர்க்கரை தேவையான அளவுசெய்முறை:அனைத்தையும் ஒன்றாக சேர்த்து மிக்ஸியில் அரைத்து வடிகட்டிப் பருகலாம்.வெய்யில் காலத்தில் அடிக்கடி பருகலாம். உடல் சூட்டைத் தணிக்கும். உடல் எடையைக் குறைக்கும். சிறுநீரகம் சரியாக இயங்க உதவும். உடலில் அமிலச் சத்து அதிகம் இருப்பவர்கள் இதை அதிகம் குடிக்கலாம்.
தேவையானவை: புளிக்காத புது தயிர் - ஒரு கப், வெண்டைக்காய் 100 கிராம், தேங்காய் துருவல் - ஒரு டேபிள்ஸ்பூன், பச்சை மிளகாய் 2, உப்பு -தேவைக்கு. தாளிக்க- கடுகு - அரை டீஸ்பூன், எண்ணெய் -தேவையான அளவு.செய்முறை: வெண்டைக்காயை கழுவித் துடைத்து, சிறு துண்டுகளாக நறுக்குங்கள். எண்ணெயைக் காயவைத்து, நறுக்கிய வெண்டைக்காயை அதில் போட்டு, நன்கு பொரித்தெடுங்கள். தேங்காய், பச்சை மிளகாயை அரைத்து தயிரில் சேருங்கள். கடுகையும் பொரித்து சேருங்கள். அத்துடன் உப்பையும் சேர்த்து கலந்து வையுங்கள். பரிமாறுவதற்கு சற்று முன்பு, பொரித்த வெண்டைக்காயைத் தயிர்க் கலவையில் சேர்த்து பரிமாறுங்கள். மிக ருசியான தயிர்பச்சடி இது.
தேவையானவை: புளிக்காத தயிர் - ஒரு கப், தேங்காய் துருவல் அரை கப், தக்காளி (நல்ல சிகப்பு நிறம்)-2. பச்சை மிளகாய் - 2 இஞ்சி ஒரு சிறு துண்டு. உப்பு - தேவைக்கு. தாளிக்க: கடுகு - கால் டீஸ்பூன், எண்ணெய் - ஒன்றரை டீஸ்பூன்.செய்முறை:இஞ்சி, பச்சை மிளகாய். தக்காளியை பொடியாக நறுக்கிக்கொள்ளுங்கள். இவற்றுடன் தேங்காய் துருவல், உப்பு சேர்த்து தயிருடன் ஒன்றாகக் கலந்து, எண்ணெயைக் காயவைத்து கடுகு தாளித்து சேருங்கள். விருப்பமுள்ளவர்கள், மல்லித்தழையை பொடியாக நறுக்கி சேர்க்கலாம். கோடைக்கு ஏற்ற குளுகுளு தயிர்பச்சடி இது. (தேங்காயை மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றி எடுத்தும் சேர்க்கலாம்).
தேவையான பொருட்கள் : காரட் பெரியது 1, பல்லாரி பெரியது 1, சிறிதளவு முட்டைக்கோஸ், சௌசௌ, சிறிய தக்காளி 1, மிளகாய் 1, தேவையான அளவு உப்பு தயிர், தேங்காய்ப்பூ,செய்முறை : மேற்கண்ட காய்களைப் பொடியாக நறுக்கி தயிருடன் கலந்து தேங்காய் துருவல் மற்றும்உப்பையும் சேர்த்து பச்சடியாக்கி சப்பாத்தியுடன் சாப்பிடவும்.
தேவையான பொருட்கள் - வெள்ளை முள்ளங்கி 2, புளி நெல்லிக்காய் அளவு, உப்பு ஒன்றரை டீஸ்பூன், பல்லாரி வெங்காயம்1, பச்சை மிளகாய் 4, வெல்லம் சிறிது, கடுகு 1டீஸ்பூன், எண்ணெய் 2 டீஸ்பூன்.செய்முறை - முதலில் புளியைத் தண்ணீர்விட்டு நனைய வைக்க வேண்டும். முள்ளங்கியை நறுக்கி மிருதுவாக அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். புளியைத் திட்டமாகக் கரைத்துக் கொண்டு உப்பையும், வெல்லத்தையும் போட வேண்டும். அரைத்த விழுதை புளிக்கரைசலில் போட்டு கரைத்து விட வேண்டும். பச்சை மிளகாயையும், வெங்காயத்தையும் பொடியாக நறுக்கிக் கொண்டு, வாணலியில் எண்ணெய் வைத்து, கடுகு தாளித்து உடன் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாயைப் போட்டு சிறிது வதங்கியவுடன், முள்ளங்கி, புளி கரைசலை ஊற்றி வதக்கி இறக்க வேண்டும்.
தேவையான பொருட்கள் - பேரிச்சம்பழம் 5, ஆப்பிள் பழம் அரை, ஆரஞ்சுப் பழம் உரித்தது அரை பழம், விதை நீக்கியது, திராட்சைப் பழம் 10, கொய்யாப் பழம் அரை, வாழைப்பழம் அரை, காரட் சீவியது 1கரண்டி, பெல்லாரி 1, மிளகு, பெருங்காயம் 1 சிட்டிகை, மல்லி இலை நறுக்கியது 1 ஸ்பூன், உப்பு 1 சிட்டிகை,செய்முறை - எல்லாப் பழங்களையும், பெல்லாரி, மல்லி இலை ஆகியவற்றை பொடியாக நறுக்கி, சீவிய காரட்டை அதனுடன் சேர்த்து பின்பு, உப்பு, மிளகுப் பொடியையும் சேர்த்து கலந்து வைக்கவும். இது குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமானது.
தேவையான பொருட்கள் - விளாம்பழம் சிறியது, வெல்லம் 1 சிறிய எலுமிச்சை அளவு, தயிர் 2 கரண்டி,உளுந்தம் பருப்பு கால் ஸ்பூன், கடுகு ஒரு ஸ்பூன், வத்தல் மிளகாய் 1 பெரியது.செய்முறை - முதலில் விளாம்பழத்தை தரையில் போட்டு பார்த்து, அது ஒடாமல் இருந்தால் அதுதான் நல்ல பழம், வாங்கும் போது இப்படி பார்த்தே வாங்க வேண்டும். அதன் பிறகு ஓட்டை உடைத்து உள்ளே இருக்கும் பழத்தை எடுக்க வேண்டும். அந்தப்பழத்துடன் வெல்லத்தைப் போட்டு நன்றாக மசிக்க வேண்டும். பிறகு தயிர் விட்டு, அத்துடன் ஒரு சிட்டிகை உப்பை போட்டு நன்றாக கலந்து கொள்ள வேண்டும். கலந்தவுடன் கடுகு, உளுந்தம்பருப்பு, மிளகாய் வத்தல் இவற்றை தாளித்துகொட்ட வேண்டும்.