25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >>


சமையல்

Sep 20, 2025

பட்டாணி சுண்டல்

தேவையான பொருட்கள்-ஒரு கப் காய்ந்த பச்சை பட்டாணி, 1/2 ஸ்பூன் கடுகு, 1ஸ்பூன் கடலை பருப்பு,1 ஸ்பூன் உளுத்தம் பருப்பு, 3 பச்சை மிளகாய்,2 வெங்காயம்,2 ஸ்பூன் தேங்காய் துருவல்,தேவையானஅளவு உப்பு, சமையல் எண்ணெய்- தாளிக்க.செய்முறை-பச்சை பட்டாணியை நைட்டு ஊறவைத்து குக்கரில் வேகவைத்து எடுத்து வைத்துக் கொள்ளவும் .எண்ணெய் ஊற்றி கடுகு கடலை பருப்பு உளுத்தம் பருப்பு சேர்த்து நன்றாக வதக்கவும். சிவந்த பிறகு வெங்காயம், பச்சை மிளகாய் போட்டு ,தூள் உப்பு போட்டு நன்றாக வதக்கவும்.வெந்த பட்டாணியை போட்டு கிளறவும். நன்றாக தாளித்த பிறகு மேலே தேங்காய் துருவல் சேர்க்கவும். பச்சை பட்டாணி சுண்டல் ரெடி.

Sep 20, 2025

வெள்ளை கொண்டைக்கடலை சுண்டல்.

தேவையான பொருட்கள்-100 கிராம் வெள்ளை கொண்டைக்கடலை,1 வெங்காயம், 1/4 தேக்கரண்டி கடுகு, 4 காய்ந்த மிளகாய்,1/4 தேக்கரண்டி மிளகாய், 1/4 இன்ச் இஞ்சி, தேவையானஅளவு உப்பு, 2 மேஜை கரண்டி துருவிய தேங்காய்,செய்முறை -இரவு முழுக்க ஊற வைத்த சுண்டலை குக்கரில் வேகவைத்து எடுத்து தண்ணீர் வடித்து வைக்கவும்.வடசெட்டியில் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு பொடியாக நறுக்கிய இஞ்சி ,கருவேப்பிலை, காய்ந்த மிளகாய் ,சேர்த்து தாளித்து, பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து, வதக்கவும். தேவையான அளவு உப்பு சேர்த்து கிளறவும்.வேகவைத்து எடுத்த சுண்டலை சேர்க்கவும். ஒரு நிமிடம் வதக்கிய பின் தேங்காய் துருவல் சேர்த்து கிளறி இறக்கவும்.

Sep 20, 2025

வேர்க்கடலை சுண்டல்.

தேவையான பொருட்கள்-2 கப் தோலுரிக்காத வேர்க்கடலை,2மேஜை கரண்டி நல்லெண்ணை,1 தேக்கரண்டி கடுகு, சிட்டிகை பெருங்காயம்,1 மேஜை கரண்டி உளுந்து, 4வர மிளகாய்,1தேக்கரண்டி இஞ்சி, பொடியாக நறுக்கியது, 1தேக்கரண்டி பச்சை மிளகாய் பொடியாக நறுக்கியது, ½கப் கறிவேப்பிலை,1 கப் பிரஷ் தேங்காய் துருவல்,தேவையான உப்பு.செய்முறை-  கொதிக்கும் நீரில் வேர்க்கடலையை30 நிமிடம் ஊற வைக்கவும். பிரஷர் குக்கரில் வேகவைக்கவும்,. ஒரு விசில் போதும். குழைய வைக்காதீர்கள். வெந்த பின் வெளியே எடுத்து நீரை வடிக்கவும்.மிதமான நெருப்பின் மேல் வாணலியில் சூடான எண்ணையில் கடுகு சேர்த்து, உளுந்து, வர மிளகாய் சேர்க்கவும். உளுந்து, பொன் நிறமானதும் ,இஞ்சி,கறிவேப்பிலை சேர்த்து கிளற. தேங்காய் துருவல் சேர்க்கவும். நிறம் மாறும் வரை வதக்கவும்.வேகவைத்து வடித்த வேர்க்கடலை சேர்த்து,4 நிமிடங்கள் கிளற,உப்பு சேர்த்து கிளறி அடுப்பிலிருந்து இறக்கி வைக்க வேர்க்கடலைசுண்டல் தயார்.

Sep 20, 2025

சீரக சம்பா வெண் பொங்கல்.

தேவையான பொருட்கள்- 1கப் சீரக சம்பா அரிசி, அரைகப் பயத்தம்பருப்பு, 1மேஜைகரண்டி நெய்,தேவையான உப்புதாளிக்க:கால்  கப் நெய்,1 மேஜைகரண்டி இஞ்சி, பொடியாக நறுக்கியது.1 மேஜைகரண்டி மிளகு,1 மேஜைகரண்டி சீரகம், 20 முந்திரி, 1 பச்சை மிளகாய், துண்டாக்கியது,சிறுநெல்லிக்காய் அளவு கட்டி பெருங்காயம், கறிவேப்பிலை - சிறிதுசெய்முறை:-அரிசி மற்றும் பருப்பை கழுவி குறைந்தது30 நிமிடங்கள் முதல்1 மணி நேரம் வரை ஊற வைக்கவும்.பிரஷர் குக்கரில் வெண்ணெய் மற்றும் எண்ணெயை சூடாக்கி, நறுக்கிய பூண்டு, இஞ்சி, பச்சை மிளகாய்(துண்டுகளாக நறுக்கியது), சீரகம், நொறுக்கப்பட்ட மிளகு, முந்திரி மற்றும் கறிவேப்பிலை ஆகியவற்றைச் சேர்த்து தாளிக்கவும்.4 முதல்5 கப் தண்ணீர், பெருங்காயம் மற்றும் தேவையான உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.ஊறவைத்த அரிசி மற்றும் பருப்பைச் சேர்த்து நன்கு கலந்து4 முதல்5 விசில் வரை அல்லது வேகும் வரை பிரஷர் குக்கரில் வேக வைக்கவும். 2 முதல் 3 டேபிள்ஸ்பூன் நெய் சேர்த்து நன்கு கலக்கவும், சீரக சம்பா வெண் பொங்கல் தயார்.

Sep 20, 2025

ரவா கேசரி.

தேவையான பொருட்கள்-1 கப் ரவை,1 கப் சர்க்கரை,1/4 கப் முந்திரி,1/4 கப் உலர் திராட்சை,சன் பிளவர் ஆயில் தேவையான அளவு,2 சிட்டிகை ஆரஞ்சு ஃபுட் கலர்,1/4 மேஜைக்கரண்டி ஏலக்காய் தூள்,துருவிய பிஸ்தா தேவையான அளவு,நெய் தேவையான அளவுசெய்முறை:-முதலில் ஒரு pan ஜ மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் ஒரு மேஜைக்கரண்டி அளவு நெய் சேர்த்து உருக்கிக் கொள்ளவும்.நெய் உருகியதும் அதில் முந்திரியைப் போட்டு முந்திரி சிறிது நிறம் மாறும் வரை வறுக்கவும்.பின்பு அதில் உலர் திராட்சையை சேர்த்து திராட்சை நன்கு ஊதும் வரை வறுத்து ஒரு தட்டில் எடுத்து வைத்துக் கொள்ளவும்.அடுத்து அதே pan ல் ஒரு மேஜைக்கரண்டி அளவு நெய் சேர்த்து ,நெய் உருகிய பின் அதில் ரவையை போட்டு ,சுமார் 6 இலிருந்து 7 நிமிடம் வரை வறுக்கவும். (ரவை கலர் மாறாமல் பார்த்துக் கொள்வது அவசியம்.)ரவை வறுபட்டதும் அதை எடுத்து வேறு ஒரு தட்டில் போட்டு பரப்பி ஆற விடவும்.இப்பொழுது அதே pan ல் 3 கப் தண்ணீர் சேர்த்து அதில் 5 மேஜைக்கரண்டி சன் பிளவர் ஆயில், 3 மேஜைக்கரண்டி நெய், மற்றும் 2 சிட்டிகை ஆரஞ்சு ஃபுட் கலர் சேர்த்து தண்ணீரை கொதிக்க விடவும். (கேசரி திகட்டாமல் இருப்பதற்காகவே நெய் பாதி அளவு மற்றும் எண்ணெய் பாதி அளவு சேர்த்துக் கொள்கிறோம்.)தண்ணீர் கொதித்ததும் வறுத்து எடுத்து வைத்துள்ள ரவையை அதில் போட்டு கட்டி தட்டாமல் கிளறி ஒரு மூடி போட்டு சுமார் 2 லிருந்து 3 நிமிடம் வரை வேக விடவும்.2 நிமிடத்திற்கு பிறகு மூடியைத் திறந்து ஒரு கப் அளவு சர்க்கரை அதில் சிறிது சிறிதாக தூவி நன்கு கிளறி விடவும். பின்பு அதில் ஒரு மேஜைக்கரண்டி நெய் சேர்த்து கிளறிய பின் மீண்டும் ஒரு மேஜைக்கரண்டி நெய் சேர்த்துக் கிளறிவிடவும்.அடுத்து அதில் கால் மேஜைக்கரண்டி ஏலக்காய் தூள் போட்டு ,கிளறி வறுத்து எடுத்து வைத்திருக்கும் முந்திரி மற்றும் உலர் திராட்சையை அதில் சேர்த்து கிளறவும்.பின்பு இதை ஒரு தட்டிலோ அல்லது கிண்ணத்தில்லோ எடுத்து வைத்து அதன் மேலே துருவிய பிஸ்தா தூவி பரிமாறவும்.சூடான, சுவையான மற்றும் இனிப்பான ரவா கேசரி தயார்.

Sep 20, 2025

தேங்காய் சாதம் .

 தேவையான பொருட்கள்: -சாதம் - 1 கப் , துருவிய தேங்காய் - 1/4 கப்,உப்பு - சுவைக்கேற்ப ,தாளிப்பதற்கு.- தேங்காய் எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்,கடுகு - 1/2 டீஸ்பூன் , உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன் , சீரகம் - 1/2 டீஸ்பூன் , பச்சை மிளகாய் - 1 , வரமிளகாய் - 1 , கறிவேப்பிலை - சிறிது , முந்திரி - 1 டேபிள் ஸ்பூன். செய்முறை:  -முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு சேர்த்து தாளிக்க வேண்டும்.பின் அதில் கறிவேப்பிலை, பச்சை மிளகாய், வரமிளகாய் சேர்த்து 2 நிமிடம் வதக்க வேண்டும்.  பின்பு அதில் முந்திரியை சேர்த்து பொன்னிறமாக வறுத்து, துருவிய தேங்காயை சேர்த்து2 நிமிடம் குறைவான தீயில் வறுக்க வேண்டும்.பிறகு அதில் சாதத்தை சேர்த்து, சுவைக்கேற்ப உப்பு தூவி, நன்கு கிளறி இறக்கினால், சுவையான தேங்காய் சாதம் தயார்.

Sep 20, 2025

கற்கண்டு சாதம்.

தேவையான பொருட்கள்- பச்சரிசி – ஒரு கப் ,கற்கண்டு – ஒரு கப், பால் – ஒரு கப், தண்ணீர் – 2 கப், குங்குமப்பூ – ஒரு சிட்டிகை ,உப்பு – ஒரு  சிட்டிகை, நெய்  – 3 டேபிள் ஸ்பூன், முந்திரி – 10 ,திராட்சை – 10, ஏலக்காய் தூள் – 1/4 ஸ்பூன், செய்முறை- முதலில் அரிசியை ஒரு பாத்திரத்தில் போட்டு தண்ணீர் ஊற்றி நன்றாக கழுவி சுத்தம் செய்த பிறகு அரை மணி நேரம் ஊற வைத்துக் கொள்ளுங்கள். அதேபோல் கற்கண்டையும் அடுப்பில் சிறிதளவு மட்டும் தண்ணீர் ஊற்றி கற்கண்டு போட்டு பாதி அளவு கரைந்ததும் அடுப்பை அணைத்து விடுங்கள். மீதம் இருக்கும் கற்கண்டு அந்த சூட்டிலேயே கரைந்து விடும். இப்பொழுது அடுப்பை குக்கரை வைத்து அதில் பால், ஊற வைத்திருக்கும் அரிசி, தண்ணீர், குங்குமப்பூ, உப்பு இவை அனைத்தையும் சேர்த்து நன்றாக கலந்து விட்டு, குக்கரை மூடி மூன்று விசில் வரும் அளவிற்கு விட வேண்டும். மூன்று விசில் வந்த பிறகு, குறைந்த தீயில் வைத்து இரண்டு நிமிடம் அடுப்பில் வைத்திருக்க வேண்டும். பிறகு அடுப்பை அணைத்து விட வேண்டும்.குக்கரின் விசில் நன்றாக போனபிறகு அதைத் திறந்து கரண்டியை வைத்து நன்றாக அந்த சாதத்தை மசித்து எடுத்துக் கொள்ளுங்கள். பிறகு கரைத்து வைத்திருக்கும்,கற்கண்டு தண்ணீரையும் அதில் ஊற்றி நன்றாக கலந்து அடுப்பில் வைத்து கிண்ட வேண்டும்.  ஒரு தாலிக்கும் கரண்டியை எடுத்து அதில் மூன்று டேபிள் ஸ்பூன் நெய் ஊற்றி, நெய் உருகியதும் அதில் முந்திரிப் பருப்பு விருப்பம் இருப்பவர்கள், உலர் திராட்சை போன்றவற்றை சேர்த்து நன்றாக வறுத்து, அதை கற்கண்டு பொங்கலில் சேர்க்க வேண்டும். பிறகு அதனுடன் ஏலக்காய் பொடியை சேர்த்து நன்றாக கிளறி விட வேண்டும். அவ்வளவுதான் சுவையான கற்கண்டு சாதம் தயாராகிவிட்டது.

Sep 20, 2025

சக்கரைப் பொங்கல்.

தேவையான பொருட்கள் -பச்சை அரிசி - 1 கப்,பாசிப்பருப்பு - 2 முதல் 4 டீஸ்பூன் ,வெல்லம் - 1 & ½ கப் முதல் 2 கப் ,நெய் - ¼ கப் (விருப்பத்திற்குஏற்ப ),ஏலக்காய் - 5அரிசி சமைக்க தண்ணீர் - 6 கப்,பால் -1 கப்,வெல்லம் சிரப் செய்ய தண்ணீர் - ½ கப்உண்ணக்கூடிய கற்பூரம் - கடுகு விதை அளவுஉப்பு - ஒரு சிட்டிகை (விருப்பப்பட்டால்)முந்திரி, திராட்சை - தலா 1 டேபிள் ஸ்பூன்செய்முறை- முதலில் பிரஷர் குக்கர்/பானை எடுத்து, ¼ டீஸ்பூன் நெய் சேர்த்து, பாசிப்பருப்பை வறுக்கவும்.தண்ணீரில் கழுவிய அரிசி மற்றும் ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து,4 விசில் வரும் வரை பிரஷர் குக் செய்யவும். வெந்தவுடன் மசிக்கவும்.இதற்கிடையில், வெல்லத்தைப் பொடி செய்து, தண்ணீரில் மூழ்கும் வரை சூடாக்கி, கொதிக்க வைக்கவும். வெல்லம் முழுவதுமாகக் கரையட்டும்.ஒரு தனி வாணலியில், ஒரு டீஸ்பூன் நெய்யை சூடாக்கி, முந்திரி பருப்பை பொன்னிறமாக வறுக்கவும். அதன் பிறகு, அதில் திராட்சையைச் சேர்க்கவும். அது நன்றாக வதங்கியதும், அதை மாற்றி தனியாக வைக்கவும்.ஏலக்காயை எடுத்து பொடி செய்து, பொடித்த ஏலக்காய், உண்ணக்கூடிய கற்பூரம், பொங்கலில் சேர்க்கவும்.நன்றாகக் கலந்து, மிதமான தீயில் 5 நிமிடங்கள் சமைக்கவும். ¼ கப் தண்ணீர் அல்லது பால் சேர்க்கவும். சிறிது சிறிதாக நெய் சேர்க்கவும். கடைசியாக வறுத்த முந்திரி மற்றும் திராட்சையைச் சேர்க்கவும். சுவையான பொங்கல் தயார். 

Sep 13, 2025

பூசணி துவையல்

தேவையான பொருட்கள்:பூசணிக்காய் - 1 துண்டுகடலைபருப்பு - 1 டேபிள் ஸ்பூன்துவரம்பருப்பு - 1 டேபிள் ஸ்பூன்சிவப்பு மிளகாய் - 4புளி - நெல்லிக்காய் அளவுதேங்காய் - அரை மூடிஎண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்உப்பு - சுவைக்கேற்பமஞ்சள் தூள் - ஒரு சிட்டிகை தாளிக்க - கடுகு, உளுந்தம்பருப்பு - தலா அரை டீஸ்பூன்,கறிவேப்பிலை - ஒரு இணுக்கு செய்முறை:பூசணிக்காயை தோல் சீவி காரட் துருவியில் துருவிக் கொள்ளுங்கள். தேங்காயை பூப்போல துருவி வைக்கவும். பின் துருவிய பூசணி துருவலில் உப்பு சேர்த்து பிசறி ஒரு தட்டில் அமுக்கி தட்டை சாய்த்தார் போல் வைத்தால் நீரெல்லாம் வடிந்துவிடும். இப்படி செய்து சமைப்பதால் சளி பிடிக்காது. (பூசணியில் இருந்து வரும் நீரில் மிளகுதூள் சேர்த்து பழச்சாறாகக் குடிக்கலாம்) வாணலியை சூடாக்கி, எண்ணெய் விட்டு, கடுகு, உளுந்தம்பருப்பு, கறிவேப்பிலை தாளித்து பின் அதில் கடலைபருப்பு, துவரம்பருப்பு இரண்டையும் மணம் வர வறுத்து, பின் பூசணி துருவல், சிவப்பு மிளகாய், புளி அனைத்தையும் சேர்த்து வதக்கவும். ஆறியதும் துருவிய தேங்காய், உப்பு சேர்த்து அனைத்தையும் ஒன்றாகநைசாக அரைக்கவும். பூசணி துவையல் தயார். மணமும் ருசியும் சத்தும் உள்ளது.நல்லெண்ணெய் ஊற்றி சாதத்தில் கலந்து சாப்பிடலாம். சாம்பார் சாதம், ரசம் சாதத்திற்கும் அருமையான சைட் டிஷ். 

Sep 13, 2025

பலா விதை துவையல்.

தேவையான பொருட்கள்:பலா விதை -250 கிராம்காய்ந்த மிளகாய் - 6பச்சை மிளகாய்-2பெருங்காயம்,தேங்காய், உப்பு, புளி, தண்ணீர் தேவையான அளவு.செய்முறை:கடாயில் எண்ணெய் சூடானதும் தோல் நீக்கிய பலாவிதைகளை போட்டு நன்கு வறுக்கவும். பின், காய்ந்த மிளகாய், பெருங்காயம், துண்டாக்கிய பச்சை மிளகாயை போட்டு வதக்கவும்.இந்த கலவை ஆறியதும் உப்பு, புளி, துருவிய தேங்காய், தண்ணீர் சேர்த்து கொரகொரப்பாக அரைக்கவும்.வித்தியாசமான சுவையுள்ள, 'பலா விதை துவையல்!' தயார். சாதத்துடன் பிசைந்து சாப்பிடலாம். சத்துகள் நிறைந்தது.

1 2 ... 21 22 23 24 25 26 27 ... 66 67

AD's



More News