.தேவையான பொருட்கள்:ஓட்ஸ் - 1 கப், சிறுபருப்பு - 1 கப், சீரகம் -1 டீஸ்பூன், மிளகு -1 டீஸ்பூன், நெய் - 1 டேபிள் ஸ்பூன்,கறிவேப்பிலை -6செய்முறை:ஒட்சை ஒரு பாத்திரத்தில் வாசனை வரும் வரை வறுக்கவும். ஒரு கப் சிறு பருப்பை 2 டம்ளர்தண்ணீர் சேர்த்து வேக வைக்கவும்.வேகவைத்த பருப்பை ஒட்சுடன் சேர்த்துக் கலந்துகொள்ள வேண்டும். இதை 3 இல் இருந்து 5நிமிடம் வரை ஓரளவு கெட்டி பதம் வரும் வரை கிளறவும்.ஒரு பாத்திரத்தில் நெய்யுடன் மிளகு, சீரகம் சேர்த்துத் தாளிக்கவும்.அதனுடன் சிறிது முந்திரிப்பருப்பு மற்றும் கறிவேப்பிலை சேர்த்து எடுத்துக்கொள்ள வேண்டும்.தாளித்த மிளகு, சீரகத்தை ஓட்சில் சேர்த்துக் கலந்துகொள்ள வேண்டும். இப்போது சுவையான,சத்தான ஓட்ஸ் பொங்கல் தயார்.
தேவையான பொருட்கள்:விதை நீக்கியபேரீச்சம் பழம்- 300 கிராம் இஞ்சி- 100 _)கிராம் சர்க்கரை- 250 கிராம் முந்திரி- 50 கிராம் ஏலக்காய்- 5நெய்- 50 கிராம் தண்ணீர்-தேவையான அளவு.செய்முறை:இஞ்சியை தோல் நீக்கி சீவி, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து, மிக்ஸியில் நைசாகஅரைத்து சாறு எடுக்கவும். அதில் அரை லிட்டர் தண்ணீர் சேர்த்து, பேரீச்சம் பழங்களைசிறிய துண்டுகளாக வெட்டிப் போட்டு, அரை மணி நேரம் ஊற விடவும். ஊறிய பிறகு அந்த கலவையை, மறுபடியும் மிக்ஸியில் நன்றாக அரைக்கவும் .வாயகன்ற கடாயை அடுப்பில் வைத்து, கலவையில் சர்க்கரை சேர்த்து மிதமானசூட்டில் கிளறவும். முக்கால் பதத்தில் இருக்கும் போது பொடித்த ஏலக்காய்,முந்திரி,நெய் சேர்த்து கிளறவும். கலவை, அல்வா பதத்திற்கு வந்ததும், தட்டில் கொட்டிஆறவிடவும். சுவையான, 'பேரீச்சம்பழ அல்வா' தயார்.
தேவையான பொருட்கள் - 2 கப் காய்ந்த மக்கா சோளம், 2கப் பச்சரிசி,1 கப் இட்லி அரிசி,1 கப் உளுந்து,2 டேபிள்ஸ்பூன் கடலை பருப்பு,1 டீஸ்பூன் வெந்தயம்,தேவைக்கு உப்பு, தேவைக்குஎண்ணெய் அல்லது நெய்.செய்முறை -முதலில் மக்காசோளத்தை2-3 முறை நன்கு கழுவி,பிறகு அதை முழுகும் அளவு தண்ணீரில்7-8மணி நேரம். ஊற விடவும். அதேபோல் இட்லி அரிசி, பச்சரிசி, உளுத்தம்பருப்பு, கடலை பருப்பு மற்றும் வெந்தயத்தை நன்றாக களைந்து தண்ணி விட்டு 4 மணி நேரம் ஊற விடவும்.மிக்ஸி அல்லது கிரைண்டரில் அரிசி மற்றும் சோளத்தை, தனி தனியாக அரைத்து எடுத்து ஒரு பாத்திரத்தில் ஊற்றி, இரண்டு மாவும் நன்கு கலந்து விட்டு தேவையான உப்பு சேர்த்து 6-8 மணி நேரம் புளிக்க வைக்கவும்..ஸ்டவ்வில் தோசை தவாவை வைத்து நன்கு சூடான பிறகு மாவை எடுத்து மெல்லிசான தோசையாக பரத்தி விடவும்.ஒரு பக்கம் வெந்த பிறகு திருப்பி விட்டு சுற்றும் எண்ணெய் அல்லது நெய் ஊற்றி பொன் நிறமானதும் எடுத்து விடவும்.. அருமையான மொறு மொறு மக்கா சோள தோசை தயார்..தோசை மிக கிறிஸ்பியா வர ஒரு பக்கம் மட்டும் போட்டு எடுக்கவும்.
தேவையான பொருட்கள்:ராகி, கம்பு, கோதுமை,வரகு, கறுப்பு உளுந்து - தலா 100 கிராம் கொள்ளு, கருப்பு கொண்டைக்கடலை - தலா 50 கிராம் வெந்தயம் -1 teaspoonஉப்பு, எண்ணெய், தண்ணீர்- தேவையான அளவு.செய்முறை:கருப்பு கொண்டைக்கடலை, ராகி, கம்பு, கோதுமை, வரகு, கொள்ளு, உளுந்து, வெந்தயத்தை தண்ணீரில் நன்கு ஊற வைக்கவும். பின் தோசை மாவு பதத்திற்கு அரைக்கவும். உப்பு சேர்த்து மூன்று மணி நேரம் புளிக்க விடவும். தோசைக்கல் சூடானதும் எண்ணெய் தடவி, மாவை ஊற்றி தோசையாக்கவும்., 'தானிய தோசை!' தயார். சட்னியுடன் சாப்பிடலாம்.காலை உணவுக்கு ஏற்றது.
தேவையான பொருட்கள்:அரிசி - இரண்டரை கப்,உளுந்தம் பருப்பு -1 கப்,அவல் - கால் கப்,சீரகம் - 2 தேக்கரண்டி,உப்பு, எண்ணெய் தேவையான அளவு.செய்முறை:அரிசி, உளுந்தம் பருப்பை ஐந்து மணி நேரமும், அவலை45 நிமிடமும், தனித்தனியாக ஊற வைக்கவும். இரவே அனைத்தையும், தோசை ஊற்றும் பதத்திற்கு மாவாக அரைத்து, எட்டு மணி நேரம் புளிக்க வைக்கவும்.பிறகு, மாவில் உப்பு சேர்த்து, தோசை ஊற்றி, கார சட்னியுடன் சாப்பிட சுவையாக இருக்கும். குழந்தைகள் விரும்பி உண்பர்.
தேவையான பொருட்கள்- அடை மாவு செய்ய 2 கப் முளைகட்டிய பயறு வகைகள் ,1 கப் இட்லி அரிசி,1கப்பச்சரிசி,3/4 கப் உளுந்து,சிறிதுகறிவேப்பிலை,4 வரமிளகாய்,10 பல் பூண்டு,2 ஸ்பூன் சீரகம்,1 ஸ்பூன் சோம்பு,2 துண்டு இஞ்சி,1 மூடி தேங்காய் துருவல்,தேவையான அளவுகல் உப்பு.அடை வார்க்க:4 பெரிய வெங்காயம் பொடியாக நறுக்கவும். 2 பச்சை மிளகாய்,சிறிது கொத்தமல்லி தழை,2 கேரட் துருவியது, சிறிது எண்ணெய்.செய்முறை - பச்சை பயறு,வெள்ளை தட்டபயறு,சிகப்பு தட்டப்பயறு, கொள்ளு,கருப்பு சுண்டல், மொச்சை பருப்பு, சிவப்பு ராஜ்மா ஆகியவற்றை ஒரே அளவாக எடுத்து எட்டு மணி நேரம் வரை ஊறவிடவும் .பின் கழுவி தண்ணீரை வடிகட்டி சுத்தமான மஸ்லின் துணியில் கட்டி வெயில் படுமாறு வைக்கவும். 12 மணி நேரம் கழித்து பார்த்தால் முளைத்து இருக்கும். இதை பிரிட்ஜில் ஸ்டோர் செய்து கொள்ளவும். அரிசி உளுந்து ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து மூன்று மணி நேரம் வரை ஊறவிடவும் .பின் கழுவி கூட முளைகட்டிய பயறு வகைகள் சேர்த்து கிரைண்டரில் போட்டு அரைக்கவும்.அடை மாவு பாதி அரைப் பட்டதும் ,சோம்பு, சீரகம் ,வரமிளகாய், கறிவேப்பிலை ,பூண்டு ,இஞ்சி சேர்த்து(தேங்காய் தவிர) அரைக்கவும். பின் ஓரளவிற்கு நைசானதும் தேங்காய் துருவல் சேர்த்து கல் உப்பு சேர்த்து ஒரு முறை அரைத்து எடுக்கவும் .பின் வெங்காயம் பச்சை மிளகாயை துருவிய கேரட் ஐ சிறிது எண்ணெய் விட்டு வதக்கி இதனுடன் சேர்த்து கொள்ளவும்.இந்த மாவை அரை மணி நேரம் வரை ஊறவிடவும். பின் சிறிது தண்ணீர் சேர்த்து கலந்து சூடான தோசைக்கல்லில் எண்ணெய் விட்டு மாவை ஊற்றவும் .மிகவும் லேசாக தேய்க்க கூடாது. மெல்லிய தீயில் வைத்து இரண்டு புறமும் எண்ணெய் விட்டு நன்றாக வேகவைத்து எடுக்கவும். சுவையான ஆரோக்கியமான முளைகட்டிய பயறு அடை ரெடி.
தேவையான பொருட்கள்-50 கிராம்சோளம்,50 கிராம்கம்பு, 50 கிராம்கவுனி அரிசி, 50 கிராம் கோதுமை,50 கிராம் கேழ்வரகு,50 கிராம்திணை,50 கிராம்வரகு,50 கிராம் சாமை,50 கிராம் குதிரைவாலி,100 கிராம்உளுந்து,25 கிராம்குழம்பு கடலை பருப்பு,தேவையான அளவுஉப்பு.செய்முறை - ஒரு பாத்திரத்தில் உளுந்தை நான்கு மணி நேரம் ஊற வைத்துக் கொள்ளவும்.பின்னர் மற்றொரு பாத்திரத்தில் சிறு தானியங்கள் அனைத்தையும் நான்கு மணி நேரம் ஊற வைத்துக் கொள்ளவும்.உளுந்தையும் சிறு தானியத்தையும் கிரைண்டரில் போட்டு அரைத்து எடுத்துக் கொள்ளவும் அதை 8 மணிநேரம் உப்பு சேர்த்து கரைத்து ஊறவைத்துக் கொள்ளவும்.பின்னர் தோசைக்கல்லில் குழந்தைகளுக்கு விரும்பிய வடிவத்தில் வார்த்துக் கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள் சுவையான சத்தான சிறுதானிய பருப்பு அடை ரெடி.குழந்தைகளுக்கு மிகவும் சத்தான உணவாக அமைந்துள்ளது.சிறுதானியம் சாப்பிடுங்கள் உடல் எடையை குறைக்கலாம் .விரைவில் பசி எடுக்காது.உடலில் உள்ள கொலஸ்ட்ரால் அளவு குறையும். ரத்த சிவப்பணுக்களின் உற்பத்தி அதிகரிக்கும்.
தேவையான பொருட்கள்:வெந்தயக்கீரை - 1கட்டுபாசிப்பருப்பு- அரை கப்சிறிய வெங்காயம்- கால் கப்காய்ந்த மிளகாய்- 2கறிவேப்பிலை -சிறிதளவுஉப்பு, எண்ணெய் - தேவையான அளவு.செய்முறை:பாசிப்பருப்பை ஒரு மணி நேரம் ஊற வைக்கவும். மிக்சியில் பாசிப்பருப்பு, காய்ந்த மிளகாய், உப்பு சேர்த்து அரைக்கவும். அதில், வெந்தயக்கீரை, வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து, திடமான மாவு தயாரிக்கவும்.தோசைக்கல்லில் தேவையான எண்ணெயை தடவி, மாவை ஊற்றி மூடி வேக விடவும். சுவையான, வெந்தயக்கீரை பாசிப்பருப்பு அடை தயார். உடல் ஆரோக்கியத்திற்கு உகந்த இந்த தோசையை, குழந்தைகள் மட்டுமின்றி, பெரியவர்களும் விரும்பி உண்பர்.
தேவையான பொருட்கள் -1 கப் திணை அரிசி,1/4 கப் உளுந்து,தேவையானஅளவு உப்பு,தேவையானஅளவுஎண்ணெய்.தாளிப்பதற்கு -1 பெரிய வெங்காயம்,1/4 தேக்கரண்டி கடுகு,1மேஜைக் கரண்டிகடலை பருப்பு,3 காய்ந்த மிளகாய்,2மேஜைக் கரண்டி எண்ணெய்,1/2 தேக்கரண்டி சீரகம்,கருவேப்பிலை,செய்முறை - திணை அரிசி மற்றும் உளுந்தை 3 மணி நேரம் ஊற வைத்து மிக்ஸியில் இட்லி மாவு பதத்திற்கு அரைத்துக் கொள்ளவும்.ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து கடுகு, சீரகம், கடலைப்பருப்பு, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை ,நறுக்கிய வெங்காயம் சேர்த்து தாளித்து வெங்காயம் கண்ணாடி பதத்திற்கு வந்ததும், தயார் செய்துள்ள மாவில் சேர்த்து கலக்கவும்.மாவிற்கு தேவையான அளவு உப்பு சேர்த்து தண்ணீர் தேவைப்பட்டால் சேர்த்து குழி பணியாரம் மாவு பதத்திற்கு தயார் செய்யவும்.குழிப் பணியாரச் சட்டியை அடுப்பில் வைத்து சூடானதும் எண்ணெய் சேர்த்து மாவை ஊற்றி இரண்டு பக்கமும் திருப்பிப் போட்டு முறுகலாக சுட்டு எடுக்கவும்.மிகவும் ஆரோக்கியமான திணை அரிசி குழிப்பணியாரம் சூடாக சாப்பிட சுவையாக இருக்கும்.
தேவையான பொருட்கள்-1 கப்அவல்,1/2.கப்ரவை,1/4 கப்தயிர்,2வெங்காயம்,2 பச்சை மிளகாய்,1/4 டீஸ்பூன்சோடா உப்பு,தேவையான அளவுஉப்பு,தேவையான அளவுஎண்ணெய்,சிறிதளவு கறிவேப்பிலை, சிறிதளவு கொத்தமல்லி .செய்முறை -அவலை அலசி வடிகட்டி வைக்கவும். மிக்சியில் அவல் ,ரவை, தயிர் சேர்க்கவும்.பின்னர் அதில் உப்பு சேர்த்து அரைக்கவும். அரைத்த மாவில் சோடா உப்பு வெங்காயம் சேர்த்து கலக்கவும்.பின்னர் அதில் பச்சை மிளகாய் கறிவேப்பிலை கொத்தமல்லி சேர்த்து இட்லி மாவு பதத்தில் கலக்கவும்.பின்னர் பணியார சட்டியில் எண்ணெய் ஊற்றி சுட்டெடுக்கவும். இப்போது சுவையான அவல் குழி பணியாரம் தயார்.