பொரி கட்லெட்.
தேவையான பொருட்கள்-
2 கப்பொரி
1/2 டீஸ்பூன்சோம்பு
1/2 கப் உடைத்த கடலைமாவு
2 காய்ந்தமிளகாய்
1வேக வைத்த உருளைக்கிழங்கு
1கேரட்
1டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
1/2 கப்அரிசி மாவு
1/4 டீஸ்பூன்மஞ்சள் தூள்
1/2 டீஸ்பூன்மிளகாய் தூள்
சிறிதளவுகொத்தமல்லி
தேவையான அளவுஉப்பு
தேவையான அளவு எண்ணெய்
செய்முறை -
பொரியை தண்ணீரில் அலசி ஒரு கிண்ணத்தில் போடவும்.
மிக்சியில் சோம்பு உடைத்த கடலை காய்ந்த மிளகாய் போட்டு தூள் செய்யவும்.பொரியில் வேக வைத்து மதித்த உருளை கிழங்கு ,துருவிய கேரட், இஞ்சி பூண்டு விழுது சேர்க்கவும். பின்னர் அதில் சோம்பு பொடி, அரிசி மாவு ,மஞ்சள் தூள் சேர்க்கவும்.
மிளகாய் தூள் ,உப்பு, கொத்தமல்லி, சேர்த்து நன்றாக பிசைந்து தட்டவும். தட்டிய மாவை பிரட் தூளில் புரட்டி எடுக்கவும். பின்னர் அதை தோசை கல்லில் எண்ணெய் ஊற்றி சுட்டெடுக்கவும்.இப்போது சுவையான பொரி கட்லெட் தயார்.
0
Leave a Reply