ஒற்றைத் தலைவலியைவிரட்ட.......
'மைக்ரேன்' எனப்படும் ஒற் றைத் தலைவலியானது இளவய தினருக்கு வரும் நோய். இதன் தாக்கத்தை குறைக்க யோகா பயிற்சி செய்யலாம். விகிதாச்சார கணக்கு படி மாத்திரைகளால் வரும் பயனை விட யோகாவினால் வரும் பயன் அதிகமென்பது ஆராய்ச்சிகளால் நிரூபிக்கப்பட்டுள்ளது. தியானப்பயிற்சியும் பயன்தரும் ஒருமுறை. சரியான நேரத்தில் உணவும் உறக்கமும் தேவை. தினமும் ஏதாவது ஒரு வகையில் உடற்பயிற்சி செய்ய லாம். தண்ணீர் போதுமான அளவு குடிக்க வேண்டும். அதிகமாக கவலைப்படுவதையும் மன உளைச்சலையும் தவிர்க்க வேண்டும்.
பதப்படுத்தப்பட்ட பொருட் களை தவிர்க்க வேண்டும். பாட் டிலில் அடைத்து விற்கப்படும் பழபானங்கள், துரிதஉணவுகள், இறைச்சி வகைகள் நீண்ட நாட் கள் கெடாமல் இருக்கும் வகை யில் செயற்கை'ப்ரிசர்வேடிவ்' சேர்க்கப்படுவதால் இவற்றை தவிர்க்க வேண்டும். இவை ஒற் றைத் தலைவலியை அதிகரிக்கும் தன்மையுடையது. தலைவலி அதி கமாக இருந்தால் சில நாட்களுக்கு சாக்லெட், ஐஸ்கிரீமை தவிர்ப்பது நல்லது.
0
Leave a Reply