25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இசை விழாவில் 'நித்யாஞ்சலி' மாணவர்களின் நடன நாடகம் 'காலத்தின் மகத்துவத்தை' உணர்த்தியது. >> மாவட்ட சமூகநலத்துறை மற்றும் இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் இணைந்து நடத்திய இரண்டு நாள் டிஜிட்டல் மற்றும் நிதிக்கல்வித்திட்டம் பற்றிய விழிப்புணர்வு முகாம். >> மதுரையில் நடைபெற்ற சிறப்பாக வணிகம் புரிந்த முன்னணி முகவர்கள் கூட்டத்தில் திரு வெங்கட் நாராயண ராஜா அவர்களை எல்ஐசி சேர்மன் அவர்கள் கௌரவித்தார். >> ராஜபாளையத்தில் பெண்களுக்கான நீண்ட தூர நடை போட்டி. >> 56 மி.மீ. மழை ராஜபாளையத்தில் பதிவு! >> 12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >>


புற்றுநோயை வெல்ல  எளிய வழிகள்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

புற்றுநோயை வெல்ல  எளிய வழிகள்.

 வானவில் உணவு (Eat the Rainbow) உங்கள் தட்டில் எப்போதும் பச்சை, சிவப்பு, மஞ்சள் என பல வண்ணக் காய்கறிகள் இருக்கட்டும். டிப்ஸ்: கீரைகள், கேரட், மற்றும் பழங்கள் புற்றுநோய் செல்களை எதிர்க்கும் வல்லமை கொண்டவை.

 

 'வேண்டாம்' என்று சொல்லுங்கள்,புகையிலை மற்றும் மதுப்பழக்கம் புற்றுநோய்க்கு சிவப்புக் கம்பளம் விரிப்பது போன்றது. டிப்ஸ்: புகைப்பிடித்தலைத் தவிர்ப்பது உங்கள் நுரையீரலுக்கு நீங்கள் தரும் ஆகச்சிறந்த பரிசு.

 

உடலைச் செதுக்குங்கள் (Stay Active) அதிக உடல் எடை ஈஸ்ட்ரோஜன் போன்ற ஹார்மோன் மாற்றங்களை உண்டாக்கி புற்றுநோய் அபாயத்தை அதிகரிக்கும்.

டிப்ஸ்: தினமும் 30 நிமிடம் நடைப்பயிற்சி அல்லது யோகா செய்யுங்கள்.

 

வெள்ளை அரக்கர்களைத் தவிர்க்கவும் .அதிகப்படியான சர்க்கரை, உப்பு மற்றும் மைதா ஆகியவற்றை உணவில் குறைத்துக் கொள்ளுங்கள்.

டிப்ஸ்: பதப்படுத்தப்பட்ட உணவுகளை (Processed foods) தவிர்த்து, இயற்கையான உணவுகளைத் தேர்ந்தெடுங்கள்.

 

கதிர்வீச்சு பாதுகாப்பு நண்பகல் நேரக் கடும் வெயிலில் நீண்ட நேரம் இருப்பதைத் தவிர்க்கவும்.

டிப்ஸ்: வெளியே செல்லும்போது குடை அல்லது சன்ஸ்கிரீன் பயன்படுத்துவது தோல் புற்றுநோயைத் தடுக்கும்.

 

முக்கிய குறிப்பு: 'வருடம் ஒருமுறை முழு உடல் பரிசோதனை (Master Health Checkup) செய்வது, வரும்முன் காக்க உதவும் மிகச்சிறந்த வழி!"

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News