சத்து நிறைந்த ரொட்டி.
பழங்காலத்தில் இருந்தே ரொட்டி பல்வேறு நாடுகளில் ஒரு முக்கிய உணவாக இருந்து வருகிறது. பொதுவாக ரொட்டி வகை உடல் ஆரோக்கியத்துக்கு நல்லது என்று கருதப்படு கிறது. உடல் நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருப்பவர்க ளுக்கு ரொட்டி மற்றும் வாழைப்பழம் தரும் வழக்கம் இருந்தது.
உலக நாடுகளில் பல்வேறு வகையான ரொட்டிகள் இருந்தாலும், சவுர்டாப் ரொட்டி சத்து நிறைந்த மற்றும் உடலில் சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவும் ரொட்டி என்று ஆய்வுகளில் தெரியவந்துள்ளது.
இது கோதுமை மாவு, தண்ணீர் கலந்து இயற்கை நொதித்தல் முறையில் தயாரிக்கப்படுகிறது. சிறிது புளிப்பு சுவை கொண்ட ரொட்டி வகை ஆகும். இதனால், தனித்துவமான மென்மையான ஒரு தன்மையை கொண்டுள்ளது. மேலும் நார்ச்சத்து நிறைந்தது என்பதால், சர்க்கரை அளவை உடனடியாக அதிகரிக்காமல், சாப்பிட்ட பிறகு ரத்தத்தில் சர்க்கரை மிக மெதுவாக ஏறுகிறது. இதனால், ரத்த சர்க்கரை ஏற்ற, இறக்கம் குறைவாக நீடித்து உடலுக்கு ஆற்றல் கிடைக்கிறது.
குடல் நுண்ணுயிரிகளை பெருக்கி குடலில் கால்சியம், இரும்பு, மெக்னீசியம் போன்ற தாதுக்கள் உடலால் எளிதாக உறிஞ்ச உதவுகிறது என்றும் கூறப்படுகிறது. இந்த ரொட்டியில் பல நன்மைகள் இருந்தாலும் வயிறு தொடர்பான பாதிப்புகள் இருந்தால், டாக்டர்களிடம் ஆலோசனை பெற்று குறிப்பிட்ட அளவு தினமும் உட்கொள்வது நல்லது என்று கூறுகின்றனர்.
0
Leave a Reply