மொத்த மக்கள் தொகையுடன் ஒப்பிடும் போது,உலகி லேயே ஜப்பானில்தான் முதியோர் எண்ணிக்கை அதிகம்.
மொத்த மக்கள் தொகையுடன் ஒப்பிடும் போது,உலகி லேயே ஜப்பானில்தான் முதியோர் எண்ணிக்கை அதிகம். இந்த ஆண்டின் நிலவரப்படி அந்த நாட்டின் மக்கள் தொகை 12 கோடியே 31 லட்சம்,
அங்கு 65 வயதுக்கு மேற்பட்டோர் மூத்த குடிமக்களாக கருதப்படுகிறார்கள். அதன்படி பார்த்தால் அந்த நாட்டில் தற்போது மொத்த மக்கள் தொகையில் 30 சதவீதம் பேர், அதாவது 3 கோடியே 70 லட்சம் பேர் முதியோர் ஆவார்கள். கிட்டத்தட்ட மூன்று பேரில் ஒருவர் 65 வயதை கடந்தவராக இருக்கிறார். முதியவர்களில் சுமார் 96 ஆயிரம் பேர் நூறு வயதை தாண்டியவர்கள். தலைநகர் டோக்கியோவில் மட் டும் 80 லட்சத்து 70 ஆயிரம் முதியோர்கள் வசிக்கிறார்கள்.
ஜப்பானில் குழந்தைகள் பிறப்பு வெகுவாக குறைந்து வருவது முதியோர் எண்ணிக்கை அதிகரிப்பதற்கான முக்கியமான காரணங்களில் ஒன்றாகும்.ஜப்பானில் முதியோர் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருவது ,அந்த நாட்டு அரசை கவலைகொள்ளச் செய்திருக்கிறது. முதியோருக்கான ஓய்வூதியம், சுகாதாரம் போன்ற சமூக பாதுகாப்பு திட்டங்களுக்காக பெரும் தொகையை செலவிட வேண்டி இருப்பது அரசுக்கு பெரும் சவாலாக உள்ளது.
0
Leave a Reply