25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >> ராஜபாளையம் கோதண்ட ராமசாமி கோயில்  பிரம்மோற்ஸவ கொடியேற்றம். >> புது பஸ் ஸ்டாண்டிலிருத்து  ராஜபாளையத்தில் இணைப்பு சாலை திறப்பு . >> ரோட்டின் வெள்ளைக்கோடு வெளியே வரை ,ஆக்கிரமிப்புகளால் முடங்கும் முடங்கியாறு ரோடு . >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில்பத்தாம் திருநாள் பஞ்ச மூர்த்தி புறப்பாடு. >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில் ஒன்பதாம் நாள் தேர்த்திருவிழா. >>


தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் மூலம்  மின்நிலையம் அமைக்கும் பணிகள்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் மூலம் மின்நிலையம் அமைக்கும் பணிகள்.

விருதுநகர் மாவட்டம், சாத்தூர் வட்டம், கோட்டூர் கிராமத்தில்  தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் மூலம்  745 /400 கிலோ வாட் புதிய துணை மின்நிலையம் அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு, தற்போது முழுமை பெற்றதை தொடர்ந்து, அதனை பயன்பாட்டுக்கு கொண்டு வருவது குறித்து, மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் முன்னிலையில், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் டாக்டர்.ஜெ.இராதாகிருஷ்ணன்,I A S., அவர்கள்  (06.09.2025) நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

தமிழ்நாட்டில் தொழிற்துறை, விவசாயம், நகர்புற மற்றும் ஊரக மேம்பாடு ஆகியவற்றின் வளர்ச்சியின் காரணமாக அதிகரித்து வரும் மின்தேவைக்கு ஏற்றவாறு மக்களுக்கு தடையின்றி மின்சாரம் கிடைக்க செய்யும்  நோக்குடன், தேவைக்கேற்ப புதிய மற்றும் தரம் உயர்த்தப்பட்ட துணை மின் நிலையங்கள் அமைத்தல், இயக்கத்தில் உள்ள துணை மின் நிலையங்களின் திறனை மேம்படுத்தும் விதமாக கூடுதல் மின் மாற்றிகள் அமைத்தல், சரியான மின் அழுத்தத்துடன் கூடிய சீரான மின்சாரம் வழங்குதல் போன்ற பணிகளை, தமிழ்நாடு மின் தொடரமைப்பு கழகம் மற்றும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் வாயிலாக அரசு செயல்படுத்தி வருகிறது.

அந்த வகையில், சாத்தூர் வட்டம், கோட்டூர் கிராமத்தில்  தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் மூலம்  745 /400 கிலோ வாட் புதிய துணை மின்நிலையம் அமைக்கும் பணிகள் நடைபெற்று முடிவடையும் தருவாயில் உள்ளது.இந்த துணை மின் நிலையத்தை முழுமையாக செயல்படுத்தும் வகையிலும், அதன் கட்டமைப்பை மேம்படுத்துவது குறித்தும் தமிழ்நாடு கூடுதல் தலைமை செயலாளர்/தமிழ்நாடு மின் வாரிய நிறுவன தலைவர் அவர்கள் ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வில்,  திருநெல்வேலி மின் பகிர்மான மண்டல தலைமை பொறியாளர் திருமதி சந்திரா, மேற்பார்வை பொறியாளர் (பாதுகாப்பு மற்றும் தொலை தொடர்பு, மதுரை) திரு.சந்திரசேகர், மேற்பார்வை பொறியாளர்(பொது பகிர்மான வட்டம், மதுரை) திருமதி பிரேமலதா, மேற்பார்வை பொறியாளர் (விருதுநகர் மின் பகிர்மான வட்டம்) திருமதி லதா, மேற்பார்வை பொறியாளர்(இயக்கம், திருநெல்வேலி) திருமதி ஷீபாரெஜி, மேற்பார்வை பொறியாளர்(மரபு சாரா எரிசக்தி, திருநெல்வேலி(பொ)) திரு.ராஜசேகர் மற்றும் மின்வாரிய பொறியாளர்கள், அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News