25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >> ராஜபாளையம் கோதண்ட ராமசாமி கோயில்  பிரம்மோற்ஸவ கொடியேற்றம். >> புது பஸ் ஸ்டாண்டிலிருத்து  ராஜபாளையத்தில் இணைப்பு சாலை திறப்பு . >> ரோட்டின் வெள்ளைக்கோடு வெளியே வரை ,ஆக்கிரமிப்புகளால் முடங்கும் முடங்கியாறு ரோடு . >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில்பத்தாம் திருநாள் பஞ்ச மூர்த்தி புறப்பாடு. >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில் ஒன்பதாம் நாள் தேர்த்திருவிழா. >>


மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின், தன்னார்வ பயிலும் வட்டம் வாயிலாக மாநில அளவிலான மாதிரி தேர்வுகள் 13.09.2025 மற்றும் 20.09.2025 ஆகிய நாட்களில் இந்து நாடார் செந்திகுமார் நாடார் கல்லூரியில் நடைபெற உள்ளது.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின், தன்னார்வ பயிலும் வட்டம் வாயிலாக மாநில அளவிலான மாதிரி தேர்வுகள் 13.09.2025 மற்றும் 20.09.2025 ஆகிய நாட்களில் இந்து நாடார் செந்திகுமார் நாடார் கல்லூரியில் நடைபெற உள்ளது.

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தால் 645 காலிபணியிடங்களுக்கு  அறிவிக்கப்பட்டுள்ள ஒருங்கிணைந்த குடிமை பணிகள் தேர்வு தொகுதி - II/IIA  (குரூப் II/IIA) தேர்வு வரும் 28.09.2025 அன்று நடைபெற உள்ளது.இத்தேர்வுக்கு விண்ணப்பித்துள்ள விருதுநகர் மாவட்ட தேர்வர்கள் பயன்பெறும் பொருட்டு விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின், தன்னார்வ பயிலும் வட்டம் வாயிலாக மாநில அளவிலான மாதிரி தேர்வுகள் 13.09.2025, 20.09.2025 ஆகிய நாட்களில் விருதுநகர் இந்து நாடார் செந்திகுமார நாடார் கல்லூரியில் நடைபெற உள்ளது.  

இந்த மாதிரித் தேர்வில் கலந்துகொள்ள விருப்பம் உடையவர்கள் நேரடியாக மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து கொள்ளலாம் அல்லது ஆன்லைன் வாயிலாக https://forms.gle/Hh95p3dpncM6artk7 என்ற GOOGLE   FORM -ஐ பூர்த்தி செய்து , தேர்வு நடைபெறும் நாட்களில் காலை 10  மணிக்கு விருதுநகர் இந்து நாடார் செந்திகுமார நாடார் கல்லூரிக்கு நேரில் வருகை புரிந்து மாதிரித் தேர்வினை எழுதி பயன்பெறுமாறு  கேட்டுக்கொள்ளப்படுகிறது.  

மேலும், இது தொடர்பான விபரங்களுக்கு விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக மின்னஞ்சல் முகவரியான studycirclevnr@gmail.com அல்லது நேரிலோ தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News