25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >> ராஜபாளையம் கோதண்ட ராமசாமி கோயில்  பிரம்மோற்ஸவ கொடியேற்றம். >> புது பஸ் ஸ்டாண்டிலிருத்து  ராஜபாளையத்தில் இணைப்பு சாலை திறப்பு . >> ரோட்டின் வெள்ளைக்கோடு வெளியே வரை ,ஆக்கிரமிப்புகளால் முடங்கும் முடங்கியாறு ரோடு . >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில்பத்தாம் திருநாள் பஞ்ச மூர்த்தி புறப்பாடு. >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில் ஒன்பதாம் நாள் தேர்த்திருவிழா. >>


தமிழ்நாட்டைச் சேர்ந்த   புத்த மதத்தினர், சமண மதத்தினர்  மற்றும் சீக்கிய மதத்தினர்  புனித பயணம் மேற்கொள்ள விண்ணப்பிக்கலாம்
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

தமிழ்நாட்டைச் சேர்ந்த  புத்த மதத்தினர், சமண மதத்தினர் மற்றும் சீக்கிய மதத்தினர் புனித பயணம் மேற்கொள்ள விண்ணப்பிக்கலாம்

  தமிழ்நாட்டைச் சேர்ந்த 50 புத்த மதத்தினர், 50 சமண மதத்தினர் மற்றும் 20 சீக்கிய மதத்தினர் இந்தியாவில் உள்ள அவரவர் மதங்களுக்கான புனித தலங்களுக்கு புனித பயணம் மேற்கொண்டவர்களுக்காக தமிழக அரசால் ஆண்டுதோறும் நபர் ஒருவருக்கு ரூ. 10,000/-வீதம் 120 நபர்களுக்கு ரூபாய் 12 இலட்சம் நிதி உதவி வழங்கும் திட்டத்தின் கீழ் பயணம் மேற்கொண்டு பயன்பெற விரும்பும் புத்த, சமண மற்றும் சீக்கியர்களிடமிருந்துவிண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

 இப்புனித பயணம் புத்த மத தொடர்புடைய 1. பீகாரில் உள்ள புத்த கயா, 2. உத்திரபிரதேசத்தில் உள்ள குசிநகர், 3. வாரணாசியில்உள்ள சாரநாத் கோவில், 4. பீகாரில் உள்ள ராஜ்கிர், வைஷாலி, 5. நேபாளத்தில் உள்ள லும்பினிபோன்ற புனித தலங்களையும்,
 சமண மத தொடர்புடைய 1. இராஜஸ்தானில்உள்ள தில்வாரா கோவில், ரணக்பூர் சமண கோவில், ஜெய்சால்மர் சமண கோவில், 2. ஜார்கண்டில் உள்ள சிக்கர்ஜி 3. குஜராத்தில் உள்ள பாலிடனா. 4. பீகாரில் உள்ள பவபுரி சமண கோவில் போன்ற இடங்கள்.  5. கர்நாடகாவில் சரவணபெலகோலா போன்ற புனித தலங்களையும்மற்றும் சீக்கிய மத தொடர்புடைய  1. பஞ்சாப்பில் உள்ள அமிர்தசரஸ், தக்ட் ஸ்ரீகேசகர்சாகிப், தக்ட் ஸ்ரீடாம்டமா சாகிப், 2 பீகாரில் உள்ள தக்ட் ஸ்ரீ ஹர்மந்திர் சாகிப்(குரு கோவிந்த் சிங்), தக்ட் ஸ்ரீ ஹசூர் சாகிப் (மஹாராஷ்டிரா) போன்ற இடங்கள், 3. பாகிஸ்தானிலுள்ள குருத்வாரா ஸ்ரீ நான்காணா சாகிப், குருத்வாரா ஸ்ரீ சச்சா சௌதா, மண்டி சுகர்கானா, குருத்வாராஸ்ரீ பஞ்ச சாகிப், ஹசன் அப்தல், குருத்வாரா ஸ்ரீ தெஹ்ரா சாகிப் போன்ற புனித தலங்களையும்உள்ளடக்கியது.

இத்திட்டத்தின் கீழ் 01.07.2025க்குபிறகு புனித பயணம் மேற்கொள்பவர்களுக்கு ECS முறையில் நேரடியாக மானியம் வழங்கப்படும்.  இதற்கான விண்ணப்ப படிவங்கள் மாவட்டஆட்சியர் அலுவலகங்களில் இயங்கும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர்நல அலுவலகம் / சிறுபான்மையினர் நல அலுவலகங்களிலிருந்து கட்டணமின்றி பெறலாம்.

மேலும் www.bcmbcmw.tn.gov.in என்ற இணைய தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்திசெய்யப்பட்ட விண்ணப்பத்தை 30.11.2025க்குள் உரிய ஆவணங்களுடன் அனுப்ப வேண்டிய முகவரிஆணையர், சிறுபான்மையினர் நலத்துறை, கலசமஹால் பாரம்பரிய கட்டடம், முதல் தளம், சேப்பாக்கம்,சென்னை-600 005 என்ற முகவரியினை தொடர்பு கொண்டு பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர்மரு.என்.ஓ.சுகபுத்ரா, I A S., அவர்கள்  தெரிவித்துள்ளார்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News