தடைசெய்யப்பட்ட ஒருமுறை மட்டும் பயன்படுத்தப்படும் ப்ளாஸ்டிக் மற்றும் உணவு பாதுகாப்புத் துறையால் அனுமதிக்கப்படாத ப்ளாஸ்டிக் பயன்படுத்தாத உணவகங்களுக்கு தமிழ்நாடு அரசு விருது வழங்கப்படவுள்ளது.
தமிழ்நாடு அரசால் தடைசெய்யப்பட்ட ஒருமுறை மட்டும் பயன்படுத்தப்படும் ப்ளாஸ்டிக் மற்றும் உணவு பாதுகாப்புத் துறையால் அனுமதிக்கப்படாத ப்ளாஸ்டிக் ஆகியவற்றை உணவு பரிமாறவும், பார்சல் செய்யவும் பயன்படுத்தாமல் இருக்கும் பெரிய வகை உணவகங்களுக்கு தமிழ்நாடு அரசின் உணவு பாதுகாப்புத் துறையால் ரூ.1 இலட்சம் தொகையுடன் கூடிய விருதும், தெருவோர வணிகர்கள் உள்ளிட்ட சிறு வணிகர்களுக்கு ரூ.50 ஆயிரம் தொகையுடன் கூடிய விருதும் வழங்கப்படவுள்ளது என்றும், அதற்கு விருப்பமுள்ளவர்கள் ஆகஸ்ட் மாத இறுதிக்குள் விண்ணப்பம் செய்யலாம்.
“உணவு பாதுகாப்புத் துறையின் மாவட்ட அளவிலான ஆலோசனைக்குழுவின் முதலாம் காலாண்டிற்கானக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் அன்று (11.07.2025) மாலை மாவட்ட ஆட்சியரகத்தின் சிறுகூட்டரங்கில் நடைபெற்றது. உணவு பாதுகாப்புத் துறையின் செயல்திறனைக் கூராய்வு செய்த பின்னர் உரையாற்றிய மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள், உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் சட்டத்தின் நெறிமுறைகளை உணவு வணிகர்களுக்கு உரிய வாய்ப்பு வழங்கி உணவு பாதுகாப்புத் துறையின் அலுவலர்கள் அமுல்படுத்த வேண்டும் எனவும், உணவு வணிகர்களும் அச்சட்டத்தின் நெறிமுறைகளைப் பின்பற்றி நுகர்வோர்களுக்கு பாதுகாப்பான உணவை வழங்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.
மேலும், தமிழ்நாடு அரசால் தடைசெய்யப்பட்ட ஒருமுறை மட்டும் பயன்படுத்தப்படும் ப்ளாஸ்டிக் மற்றும் உணவு பாதுகாப்புத் துறையால் அனுமதிக்கப்படாத ப்ளாஸ்டிக் ஆகியவற்றை உணவு பரிமாறவும், பார்சல் செய்யவும் பயன்படுத்தாமல், மக்கும் தன்மையுள்ள பொட்டலமிடும் பொருட்களை மட்டும் உணவு விநியோகிக்கவும், பார்சல் செய்யவும் பயன்படுத்தும் மிகச்சிறந்த பெரிய வகை உணவகங்களுக்கு, அதாவது வருடாந்திர விற்றுக்கொள்முதல் ரூ.12 இலட்சத்திற்கும் மேற்பட்ட உணவு வணிகர்களுக்கு,
தமிழ்நாடு அரசின் உணவு பாதுகாப்புத் துறையால் ரூ.1 இலட்சம் தொகையுடன் கூடிய விருதும், தெருவோர வணிகர்கள் உள்ளிட்ட சிறு வணிகர்களுக்கு ரூ.50 ஆயிரத்துடன் கூடிய விருதும் வழங்கப்படவுள்ளது என்றும், அதற்கு விருப்பமுள்ளவர்கள் ஆகஸ்ட் மாத இறுதிக்குள் உணவு பாதுகாப்புத் துறை நியமன அலுவலர் அலுவலகத்தில் விண்ணப்பம் செய்யலாம் என்றும், அவ்விண்ணப்பங்கள் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களின் தலைமையிலான நியமன அலுவலர் உள்ளடக்கிய குழுவினர் பரிசீலனை செய்து, கூட்டாய்வுக்குழு சம்பந்தப்பட்ட உணவகத்தினை கள ஆய்வு செய்து, தமது பரிந்துரையை உணவு பாதுகாப்புத் துறை ஆணையருக்கு சமர்ப்பிக்கும் என்றும்,அதன் பின்னர், மாநில அளவிலான பரிசீலனைக் குழு பரிசீலித்து, மாவட்டத்திற்கு தலா ஒரு பெரிய உணவகத்தையும், சிறு உணவகத்தையும் சிறந்த உணவகங்களாகத் தேர்ந்தெடுக்கும் என்றும் பேசினார்.
சிறந்த உணவகங்களுக்கான விருதில் பங்கேற்க அவசிமானத் தகுதிகள்:
1. விண்ணப்பதாரர் உணவு பாதுகாப்புத் துறையின் உரிமம்/பதிவுச் சான்றிதழ் பெற்று, அது நடப்பில் இருக்க வேண்டும்.
2. விண்ணப்பதாரரின் உணவகத்தில் குறைந்தபட்சம் ஒரு நபர் உணவு பாதுகாப்பில் பயிற்சி பெற்றவராக இருக்க வேண்டும்.
3. விண்ணப்பதாரரின் உணவகத்தில் அனைத்து பணியாளர்களுக்கும் தொற்றுநோய்த் தாக்கமற்றவர்கள் என்பதிற்கான மருத்துவச் சான்று அவசியம் இருக்க வேண்டும்.
4. விண்ணப்பதாரரின் உணவகத்தில் இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் ஆணையரகத்தினால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனம் மூலம் சுகாதாரத் தணிக்கை மேற்கொண்டு, சுகாதார மதிப்பீட்டுச் சான்று (Hygiene Rating) பெற்றிருக்க வேண்டும்.
5. விண்ணப்பதாரரின் உணவகத்தில் இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் ஆணையரகத்தினால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனம் மூலம் அதிக ஆபத்துள்ள உணவு வணிக வகை;கான தணிக்கை (High Risk Audit by Third-Part Audit Agency) மேற்கொண்டு அறிக்கை வைத்திருக்க வேண்டும்.
6. விண்ணப்பதாரர் தமது உணவகத்தை உணவகத்தில் இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் ஆணையரகத்தினால் வழங்கப்பட்டுள்ள சரிபார்ப்பு பட்டியல் மூலம் தாமே தணிக்கை மேற்கொண்டு, அதனை சமர்ப்பிக்க வேண்டும்.
எனவே, அனைத்து உணவு வணிகர்களும் தமிழ்நாடு அரசால் தடைசெய்யப்பட்ட ஒருமுறை மட்டும் பயன்படுத்தப்படும் ப்ளாஸ்டிக் மற்றும் உணவு பாதுகாப்புத் துறையால் அனுமதிக்கப்படாத ப்ளாஸ்டிக் ஆகியவற்றைத் தவிர்த்து, மக்கும் தன்மையுள்ள பொட்டலமிடும் பொருட்களைப் பயன்படுத்தி, சுற்றுப்புற சூழலை மேம்படுத்த உதவுவதுடன், தமிழ்நாடு அரசின் உணவு பாதுகாப்புத் துறையின் விருதையும் வெல்ல முயற்சி மேற்கொள்ள வேண்டும் என்றும்,
மேலும், விபரங்களுக்கு விருதுநகர் புதிய மாவட்ட ஆட்சியரகத்தின் முதல் மாடியில் அறை எண்: 116 & 118-ல் உள்ள மாவட்ட உணவு பாதுகர்ப்புத் துறை நியமன அலுவலர் அலுவலகத்தினை அணுகலாம் என்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா, I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.
0
Leave a Reply