25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >> ராஜபாளையம் கோதண்ட ராமசாமி கோயில்  பிரம்மோற்ஸவ கொடியேற்றம். >> புது பஸ் ஸ்டாண்டிலிருத்து  ராஜபாளையத்தில் இணைப்பு சாலை திறப்பு . >> ரோட்டின் வெள்ளைக்கோடு வெளியே வரை ,ஆக்கிரமிப்புகளால் முடங்கும் முடங்கியாறு ரோடு . >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில்பத்தாம் திருநாள் பஞ்ச மூர்த்தி புறப்பாடு. >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில் ஒன்பதாம் நாள் தேர்த்திருவிழா. >>


வெடி விபத்தில்உயிரிழந்த மற்றும் காயமடைந்தவர்களுக்கு முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து  நிவாரணத் தொகைக்கான காசோலைகளை அமைச்சர் அவர்கள் வழங்கினார்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

வெடி விபத்தில்உயிரிழந்த மற்றும் காயமடைந்தவர்களுக்கு முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து நிவாரணத் தொகைக்கான காசோலைகளை அமைச்சர் அவர்கள் வழங்கினார்.

விருதுநகர் மாவட்டம், சாத்தூர் ஊராட்சி ஒன்றியம், இ.குமாரலிங்கபுரம் ஊராட்சியில்  (16.07.2025) மாவட்டத்தில் வெவ்வேறு வெடி விபத்துக்களில் உயிரிழந்த மற்றும் காயமடைந்தவர்களுக்கும், நீரில் மூழ்கி மரணமடைந்தவருக்கும் என மொத்தம் 18 நபர்களுக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து  ரூ.48.50 இலட்சம் நிவாரணத்தொகைக்கான காசோலைகளை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S, , அவர்கள் முன்னிலையில்,  வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் திரு.கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் அவர்கள் வழங்கினார்.தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், பட்டாசு தொழிற்சாலையில் எதிர்பாராத விதமாக ஏற்பட்ட வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கும் மற்றும் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவருக்கும்  நிவாரண நிதி வழங்க உத்தரவிட்டிருந்தார்.

அதன்படி, விருதுநகர் வட்டம், நாட்டார்மங்கலம் கிராமம், மெ/ஸ்.பொம்மி பயர் ஒர்க்ஸ் பேக்டரி என்ற பட்டாசு தொழிற்சாலையில் கடந்த 29.01.2022 அன்று ஏற்பட்ட வெடி விபத்தில் உயிரிழந்த  ஒண்டிப்புலிநாயக்கனூர் கிராமத்தை சேர்ந்த  திரு.ஆறுமுகம் என்பவரின் வாரிசுதாரரான (மனைவி) திருமதி நீதிமொழி என்பவருக்கும், நாட்டார்மங்கலம் கிராமத்தை சேர்ந்த திரு.குபேரன் என்பவரின் வாரிசுதாரரான (மனைவி) திருமதி சசிதேவி மற்றும் (தாயார்) திருமதி சரஸ்வதி என்பவருக்கும், விஸ்வநத்தம் கிராமத்தை சேர்ந்த திரு.தேவேந்திரன் என்பவரின் வாரிசுதாரரான (மனைவி) திருமதி சர்மிளாதேவி என்பவருக்கும் என உயிரிழந்த 3 நபர்களின் வாரிசுதாரர்களுக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா ரூ.3 இலட்சம் வீதம் மொத்தம் ரூ.9 இலட்சம் நிவாரணத்தொகைக்கான காசோலைகளையும், வெடிவிபத்தில் காயமடைந்த  நாட்டார்மங்கலம் கிராமத்தை  சேர்ந்த திரு.கணேஷ்பாண்டி என்பவருக்கு ரூ.1,00,000/-த்திற்கான காசோலையினையும்,விருதுநகர் வட்டம், மெட்டுக்குண்டு கிராமத்தில் இயங்கி வந்த மெ/ஸ்.சுப்ரீம் பயர் ஒர்க்ஸ் பட்டாசு தொழிற்சாலையில் கடந்த 07.06.2025 அன்று வெடிவிபத்தில் உயிரிழந்த அருப்புக்கோட்டை வட்டம் குல்லூர்சந்தையை சேர்ந்த திரு.சங்கிலி என்பவரின் (மனைவி) திருமதி முத்து என்பவருக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.4,00,000-த்திற்கான நிவாரணத்தொகைக்கான காசோலையினையும்,

சாத்தூர் வட்டம், சின்னகாமன்பட்டி கிராமத்தில் இயங்கி வந்த மெ/ஸ்.கோகுலேஸ் பயர் ஒர்க்ஸ் பட்டாசு தொழிற்சாலையில் 01.07.2025 அன்று வெடி விபத்தில் உயிரிழந்த சிவகாசி வட்டம் மீனம்பட்டி கிராமத்தை சேர்ந்த திரு.மகாலிங்கம் என்பவரின் வாரிசுதாரரான (மனைவி) திருமதி மகாலெட்சுமி என்பவருக்கும், அருப்புக்கோட்டை வட்டம், சூலக்கரையை சேர்ந்த திரு.வைரமணி என்பவரின் வாரிசுதாரரான (மனைவி) முனிஸ்வரி என்பவருக்கும், சிவகாசி வட்டம், மத்தியசேனை கிராமத்தை சேர்ந்த திருமதி லட்சுமி என்பவரின் வாரிசுதாரரான (கணவர்) திரு.கருப்பசாமி என்பவருக்கும், சிவகாசி வட்டம், அனுப்பங்குளம் கிராமத்தை  சேர்ந்த திரு.செல்லப்பாண்டி என்பவரின் வாரிசுதாரரான (மனைவி) திருமதி வேல்மணி என்பவருக்கும், ஓ.கோவில்பட்டியை சேர்ந்த திரு.ராமமூர்த்தி என்பவரின் வாரிசுதாரரான (மனைவி) திருமதி கலா என்பவருக்கும், சிவகாசி வட்டம், சேர்வைகாரன்பட்டி கிராமத்தை  சேர்ந்த திரு.ராமஜெயம் என்பவரின் வாரிசுதாரரான (தாயார்) திருமதி மகாலட்சுமி என்;பவருக்கும், சேர்வைகாரன்பட்டி கிராமத்தை சேர்ந்த திரு.நாகபாண்டி என்பவரின் வாரிசுதாரரான (மனைவி) திருமதி அழகு சித்ரா என்பவருக்கும்,  விருதுநகர் வட்டத்தை சேர்ந்த திரு.புண்ணியமூர்;த்தி என்பவரின் வாரிசுதாரரான (மனைவி) திருமதி காளீஸ்வரி என்பவருக்கும் என 8 நபர்களின் வாரிசுதாரர்களுக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா ரூ.4 இலட்சம் வீதம் மொத்தம் ரூ.32 இலட்சம் நிவாரணத்தொகைக்கான காசோலைகளையும்,

வெடி விபத்தில் காயமடைந்த சிவகாசி வட்டம், மத்திய சேனை கிராமத்தை சேர்ந்த திரு.கருப்பசாமி என்பவருக்கும், விருதுநகர் வட்டம், கன்னிசேரி கிராமத்தை சேர்ந்த திரு.மணிகண்டன் என்பவருக்கும், சூலக்கரை கிராமத்தை சேர்ந்த திருமதி முருகலட்சுமி என்பவருக்கும் என 3 நபர்களுக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா ரூ.50,000 /-வீதம் மொத்தம் ரூ.1.50 இலட்சம் நிவாரணத்தொகைக்கான காசோலைகளையும் என மூன்று வெவ்வேறு இடங்களில் ஏற்பட்ட வெடி விபத்துகளில் உயிரிழந்த மற்றும் காயமடைந்தவர்களுக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து மொத்தம் ரூ.47.50 இலட்சம் நிவாரணத்தொகைக்கான காசோலைகளை வழங்கினார்.

மேலும், திருவில்லிபுத்தூர் வட்டம், அச்சம்தவிழ்ந்தான் கிராமத்தில் வசிக்கும் திரு.சிவஞானபாண்டியன் என்பவரின் மகன் செல்வன்.விஜயகுமார் (வயது -15) என்பவர் கடந்த 31.03.2024 அன்று நீரில் மூழ்கி இறந்ததற்கு அவரின் வாரிசுதாரரான தந்தைக்கு  முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.1,00,000/-த்திற்கான காசோலையினையும்,என ஆக மொத்தம் 18 நபர்களுக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து  ரூ.48.50 இலட்சத்திற்கான நிவாரணத் தொகைக்கான காசோலைகளை வருவாய் மற்றும் பேரிடர்  மேலாண்மைத்துறை அமைச்சர் திரு.கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் அவர்கள் வழங்கினார்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News