25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >> ராஜபாளையம் கோதண்ட ராமசாமி கோயில்  பிரம்மோற்ஸவ கொடியேற்றம். >> புது பஸ் ஸ்டாண்டிலிருத்து  ராஜபாளையத்தில் இணைப்பு சாலை திறப்பு . >> ரோட்டின் வெள்ளைக்கோடு வெளியே வரை ,ஆக்கிரமிப்புகளால் முடங்கும் முடங்கியாறு ரோடு . >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில்பத்தாம் திருநாள் பஞ்ச மூர்த்தி புறப்பாடு. >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில் ஒன்பதாம் நாள் தேர்த்திருவிழா. >>


உங்களுடன் ஸ்டாலின் என்ற திட்டத்தினை  அமைச்சர் அவர்கள் தொடங்கி வைத்தார்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

உங்களுடன் ஸ்டாலின் என்ற திட்டத்தினை அமைச்சர் அவர்கள் தொடங்கி வைத்தார்.

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள்  (15.07.2025) உங்களுடன் ஸ்டாலின் என்ற திட்டத்தினை கடலூர் மாவட்டம் சிதம்பரம் நகராட்சியில் தொடங்கி வைத்தார்.அதனைத்தொடர்ந்து, விருதுநகர் மாவட்டம், திருச்சுழி ஊராட்சி ஒன்றியம், ஆலடிப்பட்டி ஊராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தின் கீழ், நடைபெற்ற முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் தலைமையில், இராமநாதபுரம் பாராளுமன்ற உறுப்பினர் திரு.எஸ்.நவாஸ்கனி அவர்கள் முன்னிலையில்நிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் திரு.தங்கம் தென்னரசு அவர்கள் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்.

பேரறிஞர் அண்ணா அவர்கள் மக்கள் பிரதிநிதியாக இருக்கக்கூடியவர்கள், மக்கள் நலனில் அக்கறை கொண்டிருக்கக்கூடியவர்கள், முதலில் நீங்கள் மக்களிடத்தில் செல்லுங்கள். மக்களிடத்தில் இருந்து துவங்குங்கள். மக்கள் என்ன வைத்திருக்கிறார்களோ அவர்களிடத்தில் இருந்து உங்கள் திட்டங்களை தீட்டுங்கள். அவர்களோடு இணைந்து பயணம் செய்யுங்கள்.அவர்களுடைய குறைகளை கேளுங்கள் என்று கூறினார்கள்.அந்த வழியில், தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தலைமையிலான அரசு மக்களுடைய பிரச்சினைகளை ஒவ்வொரு ஊராட்சி மற்றும் நகராட்சி பகுதிகளிலும் இருக்கக்கூடிய கிராமங்களில் உங்களுடைய பல்வேறு கோரிக்கைகளை நேரடியாக அரசினுடைய அத்தனை துறைகளும் ஒரே இடத்திற்கு வந்து உங்கள் குறைகளை கேட்டு அவற்றை தீர்க்கக்கூடிய முகம்களை தமிழ்நாடு முழுவதும் இன்று நடத்திக் கொண்டிருக்கிறது.தமிழ்நாட்டில் இத்திட்டத்தின் கீழ், மொத்தம் 10,000 முகாம்கள் நடைபெற உள்ளது. உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தின் கீழ் விருதுநகர் மாவட்டத்தில் மொத்தம் 349 சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளது. 

இம்முகாம்கள் கிராமப்பகுதியான 11 ஊராட்சி ஒன்றிய பகுதியில் 229 முகாம்களும், நகரப் பகுதிகளான சிவகாசி மாநகராட்சி, 5 நகராட்சிகள் மற்றும் 9 பேரூராட்சி பகுதிகளில் 120 முகாம்கள் என மொத்தம் 349 முகாம்கள் நடைபெற உள்ளது.இம்முகாம்களில் நகரப்பகுதிகளில் 13 துறைகள் மூலம் 43 சேவைகளும் ஊரகப்பகுதிகளில் 15 துறைகள் மூலம் 46 சேவைகளும் அளிக்கப்படுகிறது.
 நம்முடைய முதலமைச்சர் அவர்கள் மக்களின் கருத்துக்களை எல்லாம் உள்வாங்கி கொண்டு, அவர்களின் குறைகளை எல்லாம் நிவர்த்தி செய்து, தமிழ்நாடு முழுவதும் ஏறத்தாழ ஒரு லட்சம் தன்னார்வலர்கள் நியமிக்கப்பட்டு, அவர்கள் முகாம் நடைபெறும் பகுதிகளில் தன்னார்வலர்கள் மூலம் துண்டுப்பிரசுரம் (Pயஅphடநவள) மற்றும் விண்ணப்பங்கள் பொதுமக்களுக்கு அளிக்கப்பட்டு, பொதுமக்களிடம் கலந்துரையாடி, அவர்களுக்கு தேவையான மற்றும் தேவைப்படும் திட்டங்கள் குறித்து எடுத்துரைத்து முகாமில் கலந்து கொண்டு பயனடைய உரிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.ஆலடிப்பட்டியை சுற்றியுள்ள ஊர்கள்  அனைத்தும் சேர்ந்து சுமார் ஏறத்தாழ 1500 குடும்பங்கள் இருக்கின்றன. இந்த குடும்பங்கள் எல்லாம் அவர்களுடைய கோரிக்கையை ஒரே இடத்தில் தருவதற்காக தான் இந்த முகாம் நடைபெறுகிறது.

மேலும், கலைஞர் மகளிர் உரிமைத்தொகை பெற தகுதியுள்ள விடுபட்ட மகளிர்கள் இம்முகாமிற்கு சென்று விண்ணப்பங்கள் அளித்தால் அவர்களுடைய தகுதியின் அடிப்படையில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
இம்முகாமில் பெறப்படும் மனுக்களுக்கு 45-நாட்களுக்குள் உரிய தீர்வு காணப்படும். மேலும், மக்கள் அனைவரும் தங்களுடைய குறைகளை இந்த முகாமில் தெரிவித்து பயன்பெறலாம். இந்த முகாமில் நீங்கள் நன்றாக உபயோகப்படுத்தும்படி நிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் அவர்கள் தெரிவித்தார்.தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் உங்களுடன் ஸ்டாலின் என்ற சிறப்பு முகாமானது இன்று கடலூர் மாவட்டத்தில்  உள்ள சிதம்பரம் நகராட்சியில் துவக்கி வைக்கப்பட்டுள்ளது.இந்த மகத்தான திட்டத்தின் முன்னாடியாக மக்களுடன் முதல்வர் முகாம் செயல்படுத்தப்பட்டு வந்தது. அதில் உள்ள குறைகளை நிவர்த்தி செய்து,  மக்கள் இருக்கும் இடத்திற்கு சென்று குறைகளை கேட்டறிந்து அதனை சரிசெய்யும் அளவிற்கான சிறப்பான திட்டமாக உள்ளது.

அந்த வகையில் விருதுநகர் மாவட்டத்தில்,  உங்களுடன் ஸ்டாலின் என்ற  சிறப்பு முகாம்கள் ஜீலை 15 ஆம் தேதி முதல் துவங்கி நவம்பர் 7 ஆம் தேதி வரை 349 முகாம் நடைபெற உள்ளது.  இம்முகாமில் வரும் விண்ணப்பங்களை சரியான முறையில் விசாரணை செய்து தீர்வுகாண உள்ளனர். இதில் முக்கிய சிறப்பு என்னவென்றால் தன்னார்வலர்கள் இந்த உங்களுடன் ஸ்டாலின் முகாம் பற்றிய கருத்துக்களையும், முகாமில் மக்களுக்கு கிடைக்கும் நன்மைகளை முகாம் நடைபெறுவருதற்கு முன்பாகவே வீடு, வீடாக சென்று மக்களின் குறைகளை கேட்டறிந்து விண்ணப்பங்களை கொடுத்துள்ளார்கள். மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் பெண்கள் விண்ணப்பங்களை அளித்து பயன்பெற வேண்டும் எனவும்,இம்முகாமில் பெறப்படும் மனுக்களுக்கு 45-நாட்களுக்குள் உரிய தீர்வு காணப்படும். எனவே, விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பொதுமக்கள் உங்கள் வீட்டின் அருகிலுள்ள  முகாம்களுக்கு சென்று மனுவை அளித்து  தங்களின் குறைகளுக்கு தீர்வு காண இந்த வாய்ப்பினை பயன்படுத்தி கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர்  அவர்கள் தெரிவித்தார்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News