25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >> ராஜபாளையம் கோதண்ட ராமசாமி கோயில்  பிரம்மோற்ஸவ கொடியேற்றம். >> புது பஸ் ஸ்டாண்டிலிருத்து  ராஜபாளையத்தில் இணைப்பு சாலை திறப்பு . >> ரோட்டின் வெள்ளைக்கோடு வெளியே வரை ,ஆக்கிரமிப்புகளால் முடங்கும் முடங்கியாறு ரோடு . >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில்பத்தாம் திருநாள் பஞ்ச மூர்த்தி புறப்பாடு. >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில் ஒன்பதாம் நாள் தேர்த்திருவிழா. >>


தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகம் மூலம் செயல்படுத்தப்படும் கடன்  திட்டங்களுக்கு விண்ணப்பித்து பயன்பெறலாம்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகம் மூலம் செயல்படுத்தப்படும் கடன் திட்டங்களுக்கு விண்ணப்பித்து பயன்பெறலாம்.

தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகத்தின் மூலம் சிறுபான்மையினர்களுக்கு சுயவேலைவாய்ப்பு மற்றும் வருமானம் ஈட்டுதலுக்கான செயல்பாடுகளுக்கு குறைந்த வட்டி விகிதத்தில் தனிநபர் கடன், சுய உதவி குழுக்களுக்கான சிறுதொழில் கடன், விராசாத் (கைவினை கலைஞர்களுக்கான கடன் திட்டம்) மற்றும் கல்விக்கடன் ஆகிய கடன் திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது.

 இத்திட்டத்தின் கீழ் பயன்பெற வெவ்வேறு வருமானம் சார்ந்த பயனாளிகளுக்கு  கடன் (ம) வட்டி விகிதங்களின் மாறுபட்ட அளவுடன் கூடிய திட்டம் 1-ல் பயன்பெற குடும்ப ஆண்டு வருமானம் கிராம/நகர்புறங்களில்  ரூ.3,00,000- க்கு மிகாமல் இருக்க வேண்டும் மற்றும் திட்டம்   2-ல் பயன்பெற  குடும்ப ஆண்டு வருமானம்  கிராமஃநகர்புறங்களில் ரூ.8,00,000-வரை ஆண்டு வருமானம் இருக்க வேண்டும்.  (திட்டம் 1-ன் கீழ் நன்மைகளை பெற முடியாத நபர்கள்)

 திட்டம் 1-ன் கீழ் தனிநபர் கடன் ஆண்டிற்கு 6 சதவீத  வட்டி  விகிதத்திலும் அதிகபட்ச கடனாக ரூ.20,00,000- ம் திட்டம் 2-ன் கீழ் ஆண்களுக்கு 8 சதவீத பெண்களுக்க 6 சதவீத வட்டி விகிதத்திலும் அதிகபட்ச கடனாக ரூ.30,00,000-  கடன் வழங்கப்படுகிறது.  கைவினை கலைஞர்களுக்கு ஆண்களுக்க 5 சதவீத பெண்களுக்கு  4 சதவீத வட்டி விகிதத்தில்  அதிகபட்ச கடனாக ரூ.10,00,000-  கடன் வழங்கப்படுகிறது. சுய உதவிக்குழுக் கடன் நபர் ஒருவருக்கு ரூ.1,00,000-  ஆண்டிற்கு  7 சதவீத வட்டி விகிதத்தில்  கடன் வழங்கப்படுகிறது.  திட்டம் 2-ன் கீழ் ஆண்களுக்கு 10 சதவீத, பெண்களுக்கு  8 சதவீத வட்டி விகிதத்திலும் நபர் ஒருவருக்கு ரூ.1,50,000- கடன் வழங்கப்படுகிறது.  மேலும் சிறுபான்மையின மாணவ  மாணவியர் அரசால் அங்கீகரிக்கப்பட்ட  கல்வி  நிலையங்களில் இளங்கலை / முதுநிலை தொழிற்கல்வி / தொழில்நுட்பக் கல்வி  பயில்பவர்களுக்கு  அதிகபட்சமாக  திட்டம் 1-ன் கீழ் ரூ.20,00,000- வரையில்  3 சதவீத வட்டி விகிதத்திலும் திட்டம்  2-ன் கீழ் மாணவர்களுக்கு 8 சதவீத  மாணவியர்களுக்கு 5 சதவீத வட்டி விகிதத்திலும் ரூ.30,00,000- வரையிலும்  கல்வி  கடனுதவி  வழங்கப்படுகிறது.

  மேலும், பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள சிறுபான்மையின கைவினை கலைஞர்களுக்கு தங்களின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் பொருட்டு விராசாத் கடன் (கைவினை கலைஞர் கடன் திட்டம்) கைவினை கலைஞர்களுக்கு குறைந்த வட்டி விகிதத்தில் மூலப்பொருட்களான உபகரணங்கள்/ கருவிகள்/ இயந்திரங்கள் வாங்குவதற்கு இக்கடன் வழங்கப்படுகிறது. எனவே சிறுபான்மையின மக்கள் இத்திட்டத்தை அதிக அளவில் பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

            இம்மாவட்டத்தில் வசிக்கும் கிறித்தவர்கள், இஸ்லாமியர்கள், புத்த மதத்தினர், சீக்கியர்கள், பார்சியர்கள் மற்றும் ஜெயின் ஆகிய சிறுபான்மையின மக்கள் கடன் விண்ணப்பங்களை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திலுள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலகம் / மாவட்ட சிறுபான்மையினர் அலுவலகம், மண்டல கூட்டுறவுச் சங்கங்களின் இணைப்பதிவாளர் அலுவலகம், மாவட்ட  /  மத்திய கூட்டுறவு வங்கி அல்லது அதன் கிளைகள் அல்லது நகர கூட்டுறவு வங்கி அல்லது தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி ஆகிய அலுவலங்களில் பெற்று அதனை பூர்த்தி செய்து வங்கி கோரும் உரிய ஆவணங்களுடன் சமர்ப்பிக்குமாறு  கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.கடன்  விண்ணப்பங்களுடன்  இணைத்து  சமர்ப்பிக்கப்பட வேண்டிய  போதிய  ஆவணங்கள் தனிநபர் கடன் திடடம், சுய உதவி குழுக் கடன், விராசத் (கைவினை கலைஞர் கடன் திட்டம்)

சிறுபான்மையினர் மதச்சான்றிதழ், சாதி சான்றிதழ், வருமான சான்றிதழ், உணவு பங்கீடு அட்டை அல்லது இருப்பிட சான்றிதழ், ஆதார் அட்டை, திட்ட அறிக்கை, வங்கிகள் கோரும் தேவையான ஆவணங்கள் கல்விக்கடன் பெறுவதற்கு சிறுபான்மையினர் மதச்சான்றிதழ்/ சாதிச்சான்றிதழ் /  வருமான சான்றிதழ் நகல்/இருப்பிட சான்றிதழ் நகல், குடும்ப அட்டை /  வாழ்விட சான்று Smart Card),  ஆதார் நகல், பள்ளி மாற்று சான்றிதழ் நகல், உண்மைச் சான்றிதழ் (Bonafide Certificate)  அசல் கல்விக் கட்டணங்கள் செலுத்திய இரசீது அசல் (Original) மதிப்பெண் சான்றிதழ்கள், வங்கி கோரும் இதர ஆவணங்களின் ஒளிப்பட நகல்களையும் சமர்ப்பிக்க வேண்டுமென மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S, அவர்கள் தெரிவித்துள்ளார்.  

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News