கலை, இலக்கியம், கல்வி, விளையாட்டு மற்றும் மருத்துவத் துறைகளில் அளப்பரிய சாதனை புரிந்தவர்களுக்கு “பத்ம விருது” வழங்கப்படவுள்ளது
பன்முக திறமை கொண்டவர்களுக்கு 2026-ஆம் ஆண்டு ஜனவரி -26-ஆம் தேதி குடியரசு தின விழாவில் ‘பத்ம விருது” வழங்க தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த தகுதியான நபர்கள் (ஆண்/பெண்) விண்ணப்பிக்கலாம், சமூக சேவை, கலை, இலக்கியம், கல்வி, மருத்துவம், வர்த்தகம் மற்றும் தொழில், அறிவியல் மற்றும் பொறியியல், விவசாயம், தொல்லியல், கட்டிடக்கலை, விளையாட்டு, வனவிலங்கு பாதுகாப்பு மற்றும் புதிய கண்டுபிடிப்புகள் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் மிக சிறந்து விளங்குவராக இருத்தல் வேண்டும்.
பத்ம விருது குறித்த விவரங்கள் அனைத்தும்; இணையதளத்தில் (https://awards.gov.in) 15.03.2025 முதல் வெளியிடப்பட்டுள்ளது. இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள்.31.07.2025. இணையதளம் மூலம் விண்ணப்பிக்கப்பட்ட விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும்.
இணையதளத்தில் பதிவு செய்த பிறகு அனைத்து ஆவணங்களையும் விருதுநகர் மாவட்ட சமூகநல அலுவலகத்தில், கையேடாக (Booklet) தயார் செய்து தமிழ் (ம) ஆங்கிலத்தில் தட்டச்சு செய்து தலா 3 நகல்கள் 09.06.2025-ற்குள் மாவட்ட சமூக நல அலுவலகம், மாவட்ட ஆட்சியர் வளாகம், விருதுநகர். 04562- 252701 என்ற முகவரியில் நேரில் சென்று சமர்ப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், I A S, அவர்கள் தெரிவித்துள்ளார்.
0
Leave a Reply