25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >> ராஜபாளையம் கோதண்ட ராமசாமி கோயில்  பிரம்மோற்ஸவ கொடியேற்றம். >> புது பஸ் ஸ்டாண்டிலிருத்து  ராஜபாளையத்தில் இணைப்பு சாலை திறப்பு . >> ரோட்டின் வெள்ளைக்கோடு வெளியே வரை ,ஆக்கிரமிப்புகளால் முடங்கும் முடங்கியாறு ரோடு . >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில்பத்தாம் திருநாள் பஞ்ச மூர்த்தி புறப்பாடு. >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில் ஒன்பதாம் நாள் தேர்த்திருவிழா. >>


புத்தூர் கிராமத்தில் நடைபெற்ற மக்கள் தொடர்பு திட்ட முகாமில்   அரசின் பல்வேறு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

புத்தூர் கிராமத்தில் நடைபெற்ற மக்கள் தொடர்பு திட்ட முகாமில் அரசின் பல்வேறு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.

விருதுநகர் மாவட்டம், இராஜபாளைம் வட்டம், புத்தூர் கிராமத்தில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் சிவகாசி சார் ஆட்சியர் திருமதி ந.ப்ரியா ரவிச்சந்திரன், I A S, அவர்கள் முன்னிலையில், மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S., அவர்கள் தலைமையில்  (14.05.2025) நடைபெற்றது.


இம்முகாமில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை சார்பில் 4 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனைப்பட்டா ரூ.2,08,440/- மதிப்பிலும், 20 பயனாளிகளுக்கு பட்டா மாறுதல் உத்தரவுகளையும், 9 பயனாளிகளுக்கு இணையவழி ஆதிதிராவிடர் பட்டா ரூ.19,69,200/- மதிப்பிலும், 8 பயனாளிகளுக்கு ரூ.9,600/- சமூக பாதுகாப்புத்திட்ட உதவித்தொகைகளையும், உணவுப் பொருள் வழங்கல் துறை சார்பில் 30 பயனாளிகளுக்கு குடும்ப அட்டைகளையும், மருத்துவத்துறையின் சார்பில் 4 பயனாளிகளுக்கு ரூ.8000/- மதிப்பில் நலத்திட்டங்களையும், வேளாண்மைத்துறை சார்பில் 5 பயனாளிகளுக்கு ரூ.7,536/- மதிப்பிலும், கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் 5 பயனாளிகளுக்கு ரூ.500/- மதிப்பிலும் என மொத்தம் 95 பயனாளிகளுக்கு ரூ.22.03 இலட்சம் மதிப்பிலான அரசின் பல்வேறு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர்  அவர்கள் வழங்கினார்.
 

 ஏழை எளிய நடுத்தர மக்கள் பல்வேறு சேவைகளை அரசு மூலமாக பெறுவதற்கும், தங்கள் வாழ்வாதாரத்தை உயர்த்தி கொள்வதற்கும் புதிய தொழில்களை செய்வதற்கும், அரசினுடைய திட்டங்களை பெறுவதற்கும், இருக்கக்கூடிய வாய்ப்புகளை எல்லாம் பயன்படுத்திக்கொண்டு நீங்கள் அனைவரும் வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என தெரிவித்தார்.முன்னதாக இந்த மக்கள் தொடர்பு திட்ட முகாமில் பல்வேறு அரசு துறைகள் மூலமாக அமைக்கப்பட்ட அரசு திட்டங்கள் சார்ந்த அரங்குகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பார்வையிட்டார்.இந்நிகழ்ச்சியில், தனித்துணை ஆட்சியர்(ச.பா.தி) திரு.காளிமுத்து, இராஜபாளையம் வட்டாட்சியர் திரு.வடிவேல், பல்வேறு அரசு துறை சார்ந்த அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் உட்பட பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News