25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >> பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >>


வத்திராயிருப்பு பகுதிகளில் அரசின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு திட்ட பணிகள் மற்றும் சேவைகளின் செயல்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர்  அவர்கள்  ஆய்வு மேற்கொண்டார்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

வத்திராயிருப்பு பகுதிகளில் அரசின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு திட்ட பணிகள் மற்றும் சேவைகளின் செயல்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் ஆய்வு மேற்கொண்டார்.

விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு பேரூராட்சி பகுதிகளில் அரசின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு திட்ட பணிகள் மற்றும் சேவைகளின் செயல்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S ., அவர்கள் (07.07.2026) பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

இந்த ஆய்வின் போது, வத்திராயிருப்பில் நெடுஞ்சாலைத்துறை(கட்டுமானம் மற்றும் பராமரிப்பு) சார்பில் ரூ.45 கோடி மதிப்பீட்டில் புதிய புறவழிச்சாலை அமைக்கும் பணியினையும், சமூக நீதி விடுதியில்  மாணவர்களின் தங்குமிடம், கழிவறை வசதிகள், விடுதி வளாகத்தின் தூய்மை, வழங்கப்படும் உணவின் தரம், தங்குமிடம் மற்றும் பிற அடிப்படை வசதிகள் குறித்தும், வத்திராயிருப்பு பேரூராட்சி, 12 ஆவது பகுதியில் திடக்கழிவு மேலாண்மை பணிகளையும், பண்டாரக்குடி தெரு, 1 வது பகுதியில் பொதுமக்களுக்கு  விநியோகிக்கப்படும் தண்ணீரில் குளோரின் அளவு குறித்தும், இந்து தொடக்கப்பள்ளியில் முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தின் செயல்பாடுகளையும், மாணவர்களுடன் அமர்ந்து காலை உணவு உட்கொண்டும் ஆய்வு செய்தார்.

பின்னர், வத்திராயிருப்பு வட்டாட்சியர் அலுவலகத்திலும், இ-சேவை மையத்திலும், மக்கள் தொகை கணக்கெடுப்பு-2027 பணிகள் தொடர்பாக நடைபெற்ற கணக்கெடுப்பாளர்கள் மற்றும் மேற்பார்வையாளர்களுக்கான பயிற்சி வகுப்பினையும் ஆய்வு செய்து ஆலோசனைகளை வழங்கினார்.

பேரூராட்சிப் பகுதிகளில் திடக்கழிவு மேலாண்மையின் கீழ் ஈரமான திடக்கழிவு, உலர்ந்த திடக்கழிவு, சுகாதார திடக்கழிவு, சிறப்பு கவனம் செலுத்த வேண்டிய திடக்கழிவு என நான்கு வகையாக தரம் பிரித்து பெற வேண்டும் எனவும், இது தொடர்பாக பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் எனவும், முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தின் கீழ் பள்ளி குழந்தைகளுக்கு வழங்கப்படும் உணவுகள் சுகாதாரமானதாகவும், சுவையாகவும் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் எனவும், அனைத்து பகுதிகளுக்கும் குடிநீரை தட்டுப்பாடின்றி வழங்கிட வேண்டும் எனவும், அரசு அலுவலகங்களில் நிலுவையில் உள்ள மனுக்கள் மற்றும் பொதுமக்களிடமிருந்து பெறப்படும் மனுக்களை விரைந்து பரிசீலனை செய்து தீர்வு வழங்க வேண்டும் எனவும்,

இ-சேவை மையங்களில் விண்ணப்பங்கள் உரிய காலக் கெடுவுக்குள் பரிசீலித்து, சான்றிதழ்கள் தாமதமின்றி வழங்கிட வேண்டும் எனவும், மேலும், இப்பகுதிகளில் மேற்கொள்ளப்படும் திட்டப்பணிகள் மற்றும் சேவைகள் பொதுமக்களுக்கு முறையாக சென்றடைவதை தொடர்புடைய அரசு அலுவலர்கள் உறுதி செய்ய வேண்டும் எனவும் துறை அலுவலர்களுக்கு அறிவுரை மற்றும் ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளன என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.இந்த ஆய்வின் போது வட்டாட்சியர், பேரூராட்சி செயல் அலுவலர், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் இருந்தனர்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News