25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >> பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >>


ராஜபாளையம் நகர் மற்றும் சுற்று வட்டார கிராமங்களில் உள்ள சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

ராஜபாளையம் நகர் மற்றும் சுற்று வட்டார கிராமங்களில் உள்ள சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு

ராஜபாளையம் நகர் மற்றும் சுற்று வட்டார கிராமங்களில் உள்ள சிவன் கோவில்களில் பிரதோஷத்தை முன்னிட்டு நடைபெற்ற சிறப்பு வழிபாட்டில் சொக்கர் என்ற மீனாட்சி சுந்தரேசுவரர் கோவில், மாயூரநாத சுவாமி கோவில், கருப்பஞானியார் கோவில், அருணாச்சலேசுவரர் கோவில், அம்பலப்புளி பஜார் பகுதியில் உள்ள குருசாமி கோவில், சங்கரன்கோவில் சாலையில் அமைந்துள்ள பறவை அன்னம் காத்தருளியசாமி கோவில், மதுரை சாலையில் உள்ள தாரண்யா நந்தீஸ்வரர் கோவில் ஆகிய கோவில்களில் பிரதோஷத்தை யொட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

 நந்தீஸ்வரருக்கு மஞ்சள், தேன், இளநீர், பால், தயிர், எலுமிச்சை, கரும்புச்சாறு, பன்னீர், சந்தனம் போன்ற பல்வேறு பொருட்களால் அபிஷேகம் நடந்தது. அதேபோல சேத்தூர் திருக்கண்ணிஸ்வரர் கோவில், சொக்கநாதன்புத்தூர்,  தவநந்திகண்டீஸ்வரர் கோவில், தேவதானம் நச்சாடை தவிர்த்த ருளிய சுவாமி கோவில், வாழவந்தாள்புரம் கிராமத்தில் மன்மத ராஜலிங்கேஸ்வரர் கோவில், வடகரை கிராமத்தில் சங்கிலி சித்தன் அய்யனார் கோவிலில் உள்ள நந்தீஸ்வரர் சுவாமி. தெற்கு வெங்கநல்லூர் சிதம்பரேஸ்வரர் கோவில், சோழபுரம் விக்கிரம பாண்டீஸ்வரர் கோவில், அயன் கொல்லங்கொண்டான் வீரபாண்டீஸ்வரர் கோவில், இளந்திரை கொண்டான் காலாஹஸ்தீஸ்வரர் கோவில் உள்பட பல்வேறு சிவன் கோவில் களில் பிரதோஷம் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். 

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News