25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

"நீங்களும் கலெக்டர் ஆகலாம்" என்ற தலைப்பில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் இல்லங்களில் வசிக்கும் குழந்தைகளுடன் கலந்துரையாடினார்.

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், அரசு மற்றும் அரசு உதவிபெறும், மற்றும் தன்னார்வ இல்லங்களில் வசிக்கும் குழந்தைகளுடன் "நீங்களும் கலெக்டர் ஆகலாம்" என்ற தலைப்பில் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் இன்று(07.07.2026) குழந்தைகளுக்கு ஊக்க உரையுடன் கலந்துரையாடினார்.

விருதுநகர் மாவட்டத்தில் இளைஞர்நீதி (குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு) சட்டம் 2015, இன்படி அரசு மற்றும் அரசு உதவி பெறும் இல்லங்கள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் கீழ் 8 குழந்தைகள் இல்லங்கள் செயல்பட்டு வருகிறது.இக்குழந்தைகள் இல்லங்களில் தற்போது 171 (ஆண் - 79, பெண்- 92) குழந்தைகள் தங்கி கல்வி பயின்று வருகின்றனர். மாவட்டத்தில் செயல்படும் குழந்தைகள் இல்லங்களில் தங்கியுள்ள குழந்தைகளில் ஆதார், பிறப்புச்சான்று, சாதிச்சான்று மற்றும் வங்கிக்கணக்குகள் இல்லாத குழந்தைகளுக்கு அதற்கான சான்றுகளை பெற்றுத்தருவது தொடர்பாக சிறப்பு முகாம் 07.07.2026 இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.மேலும், இம்முகாமில் கலந்து கொண்ட இல்லங்களிலுள்ள குழந்தைகள் மற்றும் இல்ல நிர்வாகிகளுக்கு அரசின் பல்வேறு நலத்திட்டங்கள் குறித்து விரிவாக எடுத்துரைக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் குழந்தைகளை தனது அலுவலக அறையில் சந்தித்து கலந்துரையாடினார். அப்போது, "நீங்களும் கலெக்டர் ஆகலாம்" என்று ஊக்கமூட்டும் வகையில் அறிவுரை வழங்கி, உயர்ந்த இலக்குகளை நிர்ணயித்து, அதனை அடைய விடாமுயற்சியுடன் கல்வி கற்று முன்னேற வேண்டும் என தெரிவித்தார். மாவட்ட ஆட்சித்தலைவரின் ஊக்கமளிக்கும் வார்த்தைகள் குழந்தைகளிடையே தன்னம்பிக்கையையும், உயர்ந்த இலட்சியங்களை நோக்கி பயணிக்கும் உற்சாகத்தையும் ஏற்படுத்தின.இந்நிகழ்ச்சியில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் திருமதி இல.மீனாட்சி, அரசு அலுவலர்கள், குழந்தைகள், பாதுகாவலர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *