25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


மானியத்துடன் கூடிய   தொழில் கடனுதவி பெற தொழில் முனைவோர்கள் விண்ணப்பிக்கலாம் .
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

மானியத்துடன் கூடிய தொழில் கடனுதவி பெற தொழில் முனைவோர்கள் விண்ணப்பிக்கலாம் .

தமிழக அரசு மாவட்ட தொழில் மையத்தின் மூலம் வேலைதேடும் இளைஞர்களை தொழில் முனைவோர்களாக மாற்றுவதற்காக 25 % மானியத்தில் தொழில் கடனுதவி வழங்கி வருகிறது.இத்திட்டத்தின் கீழ் கடனுதவி பெற 18 முதல் 45 வயது வரையுள்ள இளைஞர்கள் மற்றும் இளம் பெண்கள் விண்ணப்பிக்கலாம். மேலும், சிறப்பு பிரிவினரான ஆதி திராவிடர், பழங்குடியினர், பின்தங்கிய வகுப்பினர், மிகவும் பின்தங்கிய வகுப்பினர், சிறுபான்மையினர், முன்னாள் படைவீரர், மாற்றுத்திறனாளிகள் மற்றும் திருநர் ஆகியோர்கள்  55 வயது வரையில் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

கல்வித் தகுதி குறைந்தபட்சம் 8-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும். (மாற்றுத்திறனாளிகளுக்கு விலக்களிக்கப்பட்டுள்ளது). குடும்ப ஆண்டு வருமானம் ரூ.8,00,000 -க்கு மிகாமல் இருத்தல் வேண்டும். விண்ணப்பதாரர் விருதுநகர் மாவட்டத்தில் 3 ஆண்டுகளுக்கு குறையாமல் வசிப்பவராக இருத்தல் வேண்டும்.இத்திட்டத்தின் கீழ் வியாபாரத் தொழில்களுக்கு மட்டும் அதிகப்பட்ச தொகையாக ரூ.15.00 இலட்சம் வரை கடனுதவியாகப் பெறலாம். இக்கடனுக்கு 25 சதவீதம் அல்லது அதிகபட்சமாக ரூ.3.75 இலட்சம் மானியமாக பெற்று பயன்பெறலாம்.

 விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அனைத்து நகர்ப்புறம் மற்றும் கிராமப்புற பகுதிகளில் இத்திட்டத்தின் கீழ் பயனாளிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு விண்ணப்பங்கள் வங்கிக்கு பரிந்துரைக்கப்பட்டு வருவதால் ஆர்வமுள்ள இளைஞர்கள் மற்றும் பெண்கள் www.msmeonline.tn.gov.in/uyegp என்ற இணையதளம் வழியாக விண்ணப்பித்து அரசு மான்யத்தை பெற்று பயன்பெறலாம்.

மேலும், விவரங்களுக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இயங்கி வரும் மாவட்ட தொழில் மையத்தினை நேரிலோ அல்லது (04562-252739) என்ற தொலைபேசியிலோ தொடர்பு கொண்டு பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சித் தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S , அவர்கள் தெரிவித்துள்ளார்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *