மக்களால் அறியப்படாத அல்லது பாராட்டப்படாத புனித்ராஜ்,45 பள்ளிகள், 26 அனாதை இல்லங்கள், 16 முதியோர் இல்லங்கள், 19 பசு காப்பகங்கள் 1800 பெண் குழந்தைகளுக்கு கல்வி கற்பித்தல், கண் தானம் செய்தல் போன்ற சிறந்த சேவைகளைச் செய்துமக்களால் அறியப்படாத அல்லது பாராட்டப்படாத நடிகர் புனித்ராஜ்.
'லவ் டுடே ' படத்தை தானே இயக்கி, நடித்து ,'கோமாளி' படத்தில் இயக்குனராக அறிமுகமாகி, பிரபலமடைந்தவர் பிரதீப் ரங்கநாதன். இப்படம் ரூ.5 கோடி பட்ஜெட்டில் உரு வாகி 100 கோடிக்கு மேல் வசூலித்தது. அடுத்து அஸ்வத் மாரிமுத்து இயக்கிய 'டிராகன்' படத்தில் நாயகனாக நடித்தார். அப்படமும் 100 கோடி வசூலை தாண்டியது. தற்போது 'லவ் இன்சூரன்ஸ் கம்பெனி, டியூட்' படங்களில் நடித்து வருகிறார். அடுத்ததாக 'லவ் டுடே, டிராகன்' படங் களை தயாரித்த நிறுவனத் திற்கு புதிதாக ஒரு படத்தை இயக்கி, நடிக்க உள்ளார். இது சூப்பர் ஹீரோ கதைக்களத்தில் உருவாகிறது.
விவேக் ஆதிரேயா இயக்கத்தில் 'ஹிட் 3' படத்திற்கு அடுத்து ,'தி பாரடைஸ்' படத்தில் நடிக்கிறார் நடிகர் நானி. ஒரு புரட்சிகரமான தலைவர் கதாபாத்திரத்தில் நடிக்கி றார். படம் அடுத்தாண்டு மார்ச் 27ல் ரிலீசாகும் என ஏற்கனவே அறிவித்த நிலையில், படத்திற்கான அரங்குகள் அமைக்கும் பணிகள் முடியாததால், படப்பிடிப்பு தாமதமாகிறது. இதனால் பட வெளியீடு தள்ளிப்போகலாம் என் கின்றனர். அதே நாளில் ராம்சரணின் 'பெத்தி' படம் வெளியாகிறது.
விஜய் நடித்து வரும் கடைசி படம் 'ஜனநாயகன். வினோத் இயக்கத்தில் ஜன. 9 ரிலீசாகிறது. விஜயின் பிறந்தநானை முன்னிட்டு படத்தின் டீசர் வீடியோவை அதிகாலை 12:00 மணிக்கு படக்குழு வெளியிட்டது. இதில் போலீஸ் அதிகாரியாக' விஜய் வருகிறார். 'என் நெஞ்சில் குடியிருக்கும் என்ற விஜயின் பின்னணி குரலுடன், ஒரு உண்மை யான தலைவர் அதிகாரத்திற்காக எழுவதில்லை. ஆனால் மக்களுக்காக என்ற வாசகத்துடன் டீசர் துவங்குகிறது. இதனை வைத்து இப்படம் அரசியல் பேசப்போகிறது என்பது உறுதியாகியுள்ளது.
சுனில் தெலுங்கில் காமெடி நடிகராக இருந்து ,ஒரு கட்டத்தில் ஹீரோவாக நடித்தார். இப்போதுகுணச்சித்ரவேடங்களில் நடிக்கிறார். தமிழிலும் நடித்து வருகிறார். மாவீரன், மார்க் ஆண்டனி, குட் பேட் அக்லி படங்களை அடுத்து விஜய் மில்டன் தமிழ், தெலுங்கில் இயக்கும் ஒரு படத்தில் சுனில் முக்கியமான வேடத்தில் நடிக்கிறார். ஜூன் 15ல் பட தலைப்பு வெளியாகிறது.இதில் தெலுங்கு நடிகர் ராஜ் தருண், ஆரி, பரத் ஆகியோரும் நடிக்கிறார்கள். தற்போது நடிகர் பரத் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாக தெரிவித்தனர். இது கோலி சோடா படங்களின் தொடர்ச்சி என்கின்றனர்.'கோலி சோடா, கடுகு' போன்ற படங்களை இயக் கிய விஜய் மில்டன், அடுத்ததாக தெலுங்கு சினி மாவின் இளம் நடிகர் ராஜ் தருண் நடிக்கும் படத்தை இயக்கவுள்ளார். தெலுங்கில் தமிழ், தயாராகும் இப்படத்தில் பாடகர் பால் டப்பா, நடிகர் ஆரி ஆகியோர் நடிப்பதாக ஏற்கனவே அறிவித்தனர்.
வேல் இயக்கி உள்ளபுதுமுகங்கள் கணேஷ் கோபிநாத், நடிப்பில் படம் 'ஹும்'. இயக் குனர் கூறுகையில் "நான் பாரிடமும் உதவி இயக்குனராக பணியாற்றியது இல்லை. யாருடைய முகத்தையும் காட்டாமல் ஓரு படத்தை இயக்க வேண்டும் என்ற ஆவலில் இந்த படத்தின் கதையை எழுதி வித்யாசமான முயற்சியாக இதை எடுத்துள்ளோம். பெண்கள் பாதுகாப்பு குறித்த ஒரு விழிப்புணர்வு படமாக இருக்கும்" என்றார்.
.ஜூன் 20ல் தனுஷ், நாகார்ஜுனா ராஷ்மிகா நடித்துள்ள 'குபேரா' படமும், அதர்வா, நிமிஷா சஜ யன் நடிப் பில் 'டிஎன்ஏ' படமும், வைபவ், அதுல்யா ரவி நடித்துள்ள 'சென்னை சிட்டி கேங்ஸ்டர்ஸ்' படமும் வெளியாகின்றன. இவற்றில் தனுஷின் குபேரா படத்திற்கு எதிர்பார்ப்பு உள்ளது. இதை தேசிய விருது பெற்ற தெலுங்கு இயக்குனர் சேகர் கம்முலா இயக்கி உள்ளா ர். தமிழ் சினிமாவில் இதுவரை 100க்கும் மேற்பட்ட படங்கள் வெளியாகி உள்ளன.இரண்டரை மணிநேரத்திற்கு மேல் இருந்தாலே ரசிகர்க ளுக்கு ஒருவித அயற்சியை தருகிறது. இதற்கு முன் தமிழில் அதிக நேரம் ஓடும் படங்களாக 2005ல் 'தவமாய் தவமிருந்து' (3:34 மணிநேரம்), 2000ல் 'ஹே ராம்' (3:30 மணிநேரம்), 2021ல் 'நண்பன்' (3:08 மணிநேரம்), 2022ல் 'கோப்ரா' (3:03 மணி நேரம்) ஆகியவை இருந்தன. இதற்கு அடுத்து 3 மணி நேரம் 2 நிமிடங்களுடன் தனுஷின் 'குபேரா' 5வது இடத்தை பிடித்துள்ளது. இப்படம் 3 மணி நேரம் 15 நிமிடங்கள் இருந்த நிலையில் சென்சார் வாங்கி, பின்னர் 13 நிமிடங்களைக் குறைத்துள்ளனர்..
கார் ரேஸில் முழு கவனம் செலுத்தி வரும் நடிகர் அஜித், சமீபத்தில் அளித்த பேட்டி நான் நடிக்க வந்தபோது தமிழ் சரியாக பேசவில்லை; உச்சரிப்பில் ஆங்கில சாயல் இருந்தது. இதற்கு எழுந்த விமர்சனத்திற்கு பிறகு பலவீனங்களை சரி செய்தேன். தற்போது நான் அடைந்திருக்கும் நிலை அனைவருக்கும் தெரியும். அதுபோல கார் ரேஸிலும் காயங்கள் உண்டாகும். பயிற்சி எடுத்து கற்றுக்கொள்வேன். மற்றவர்களின் விமர்சனங்களால் என்னை நானே மதிப்பிட்டுக் கொள்ள மாட்டேன். நான் வெற்றியாளராக இருக்க விரும்புகிறேன் என்று கூறினார்.
நடிகை பிரியம்வதா கிருஷ் ணன்,மலையாளத்தில் 'ரோஷாக், சம்ஷயம்' படங்களில் நடித்திருந்த , சமீபத்தில் 'நரிவேட்ட' படத் தில் நடித்திருந்தார். இவரது நடிப்பு பேசப்படவே,பிரியம்வதாவை தமிழ் படங்களில் நடிக்க வைக்க சில தமிழ் இயக்குனர்கள் முயற்சித்து வருகின்றனர். விரைவில் அவர் நடிக்கும் தமிழ் படம் பற்றிய அறிவிப்பு வெளியாகும்.
தெலுங்கில் பாலகிருஷ்ணா நடித்துள்ள 'அகண்டா 2' படத் தில் ஆதி, வில்லனாக நடித்துள்ளார். சமீபத்தில் வெளியான இப்படத்தின் டீசர் 24 மணிநேரத்தில் 22.3 மில்லியன் பார்வை களை பெற்று அதிகப் பார்வைகளைப் பெற்ற தெலுங்கு பட டீசர்களில் 5வது இடத்தைப் பிடித் துள்ளது. தமிழில் நாய கனாகவும். தெலுங்கில் நாயகன், வில்லன், குணச்சித்தி ரக் கதாபாத் திரங்களிலும் நடித்து வருபவர் ஆதி. தமிழில் கடை சியாக 'சப்தம்' படத்தில் நாயகனாக நடித்திருந்தார்.