தனுஷ் உடன் நடித்துள்ள குபேரா படம் ஜூன் 20ல் ரிலீஸாகிறது. நடிகை ராஷ்மிகா கைவசம் 'குபேரா,தி கேர்ள் பிரண்ட், 'தாமா' போன்ற படங்கள் உள்ளன.ரோஜா பூவுடன் இருக்கும் போட்டோக்களை பகிர்ந்து "உங்களை நீங்களே அடிக்கடி பாராட்டிக் கொள்ளவும், நன்றி சொல்லவும் ஒரு மென்மையான நினைவூட்டல்.காரணம் உலகில் உள்ள எல்லா அன்புக்கும் கருணைக்கும் நீங்கள் தகுதியானவர்கள்" என குறிப்பிட்டுள்ளார் ராஷ்மிகா.
சாய் பல்லவி அளித்த பேட்டி : எனக்கு விருதுகள் முக்கியமல்ல; ரசிகர்கள்தான் முக்கியம். என் கதாபாத்தி ரங்களின் எமோஷனல் உணர்வுகளுடன் அவர்கள் தங்களை இணைத்துக் கொள்ள வேண்டும். அதுதான் எனக்கு கிடைக் கும் உண்மையான வெற்றியாக, விருதாக பார்க்கிறேன். அப்படியான நடிப்பை வெளிப்படுத்த வேண்டும்.. 'அமரன், தண்டேல்' படத்திற்கு பிறகு ஹிந்தியில் தற்போது 'ராமாயணா' என்ற படத்தில் சீதை வேடத்தில் நடித்து வருகிறார் சாய் பல்லவி.
கன்னட இயக்குனரான பிரசாந்த் நீல்'கேஜிஎப், சலார்' படங்களை இயக்கி,அடுத்து ஜூனியர் என்.டி.ஆரி.,ன் 31வது படத்தை இயக்குகிறார். இதில் ருக்மணி வசந்த், டொவினோ தாமஸ் ஆகியோரும் நடிக்கின்றனர். படத்திற்கு 'டிராகன்' என தற்காலிக தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. அடுத்தாண்டு ஜூன் 25ல் படம் ரிலீசாகும் என அறிவித்துள்ளனர். இதே தலைப்பில் தமிழ், தெலுங்கில் பிரதீப் ரங்கநாதன் நடித்த படம் வெளியாகி ஹிட்டானது.
நடிகர் புகழ், டிவி'யில் காமெடி நிகழ்ச்சி மூலம் பிரபலமான இவர் சினிமாவில் காமெடி ரோலில் நடிக்கிறார். இதுதவிர 'மிஸ்டர் ஜூ கீப்பர்' என்ற படத்தில் நாயகனாகவும் நடித்துள்ளார். நாயகியாக ஷிரின்நடிக்க, சுரேஷ் இயக்கி உள்ளார். ஒரு புலிக்குட்டியை பூனைக் குட்டி என நினைத்து ஹீரோ வளர்க்க, அது வளரும்போது, என்ன நடக் கிறது என்ற ரீதியில் காமெடியாக இந்த படம் எடுக்கப்பட்டுள்ளது. இப்படம் தற்போது ஜூன் 27ல் ரிலீஸாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நடிகர் அஜித் கார் ரேஸில் பிஸியாகி , ரேஸிற்காக பெராரி, போர்ஸே போன்ற கார்களை வாங்கினார். இப்போது ரூ.15 கோடி மதிப்புள்ள மெக்லாரன் சென்னா என்ற காரை வாங்கி இருக்கிறார்.. ரேஸிற்காகவே ஸ்பெஷலாக உருவாகி உள்ள இந்த காரை இங்கிலாந்தை சேர்ந்த ஆட்டோ மொபைல் நிறுவனம் தயாரித்துள்ளது. மறைந்த அயர்டன் சென்னாவின் நினைவாக தனது கார் ரேஸ் ரோல் மாடலான இந்த காரை அஜித் வாங்கி உள்ளார்.
அதர்வா நடிப் பில் உருவாகி நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் வரும் படம் 'டி.என்.ஏ'. நிமிஷா சஜயன், காயத்ரி நாயகிகளாக நடிக்கின்றனர். இப் படத்தை ஜூன் 20ல் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. அதே நாளில் தனுஷ், நாகார்ஜூனா நடிப் பில் சேகர் கம் முலா இயக்கிய 'குபேரா' படமும் வெளியாகிறது.
.தமிழ், மலையாளத்தில் தயாராகும் இந்த படத்திற்கு 'அனந்தன் காடு' என பெயரிட்டு முதல் முதல் பார்வை மற்றும் டைட்டில் டீசரை வெளியிட்டுள்ளனர். காட்டை பின்னணியாக கொண்டு மக்கள், அரசாங்கம் இடையே நடக்கும் போராட்டம் தான் கதை களமாக இருக்கும் என தெரிகிறது.'மிஸ்டர் எக்ஸ், வேட்டுவம்' ஆர்யா, இவற்றுடன் தனது 36வது படமாக ஜியென் கிருஷ்ணமூர்த்தி இயக்கும் படத்திலும் நடிக்கிறார். எம்புரான் பட கதாசிரியர் முரளி கோபி கதை எழுதி உள்ளார். ரெஜினா, நிகிலா விமல் நாயகி களாகவும் மலையாள, தமிழ் நடிகர்களும் நடித்துள்ளனர்.
பிரபாஸ் நடிப்பில் 'சலார் 2' படத்தை இயக்குவதாகவும், 2026ல் ரிலீஸ் என்றும் 'கேஜிஎப், படங்களை சலார்' இயக்கிய பிரசாந்த் நீல், அறிவித்தனர்.ஆனால் ஜூனியர் என்.டி.ஆர்., நாயகனாக நடிக்கும் புதிய படத்தை ஆரம்பித்துள்ளார் பிரசாந்த் நீல். பிரபாஸ் மற்ற படங்களில் நடித்து வருவதால் ஜூனியர் என்.டி.ஆர்., படத்தை துவக்கி உள்ளார். இதனால் 'சலார் 2 படப்பிடிப்பும், வெளியீடும் தள்ளிப்போகிறது.
ஹிந்தி படங்களில் நடித்து வரும் மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மூத்த மகளான ஜான்வி கபூர். ஜூனியர் என்டிஆர் நடித்த 'தேவரா' படம் மூலம் தெலுங்கில் அறிமுகமானார். தற்போது ராம்சரணின் 'பெத்தி' படத்தில் நடிக்கிறார். தமிழில் ரஞ்சித் இயக்கத்தில் அட்டக்கத்தி தினேஷ் நடிக்க உள்ள படத்தில் நாயகியாக நடிக்க ஜான்வி கபூரிடம் பேச்சுவார்த்தை நடக்கிறது. ஒப்புக்கொள்ளும் பட்சத்தில் தமிழிலும் அறிமுகமாவார்.
தமிழ் சினிமாவில் டப்பிங் கலைஞராக இருந்து, 'ஒரு கிடாயின் கருணை மனு, லவ் டுடே, மாமன்னன்' படங்கள் மூலம் நடிகையாக மாறியவர் ரவீணா ரவி. தற்போது மலையாளத்தில் ஜோ ஜார்ஜ் இயக்கியுள்ள 'ஆசாதி' என்ற படத்தில் வாய் பேசாத சிறை கைதி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இதுப்பற்றி ரவீணா கூறுகையில் "இந்த படத்தில் முதலில் என்னுடைய கதாபாத்திரம் பேசும் விதமாகத்தான் இருந்தது. ஆனால் என் மீது இரக்கம் வரவேண்டும் என்பதற்காக வாய் பேசாத மற்றும் கர்ப்பிணி கதாபாத்திரமாக மாற்றினர். வாணி விஸ்வநாத் போன்ற சீனியர் நடிகருடன் எப்படி நடிக்க போகிறேன் என பயந்த நிலையில் பேசாமலேயே நடிக்க வைத்ததால் தப்பித்தேன்" என்றார்.