ஹாலிவுட்டில் உலகளவில் புகழ் பெற்ற ஒரு கவுரவமாக கருதப்படும் 2026ம் ஆண்டுக்கான 'ஹாலிவுட் வாக் ஆப் பேம்' நடிகை தீபிகா படுகோனே பெற்றுள்ளார்
2026ம் ஆண்டுக்கான 'ஹாலிவுட் வாக் ஆப் பேம்' கவுரவத்தை பாலிவுட்டின் முன்னணி நடிகை தீபிகா படுகோனே பெற்றுள்ளார். இதற்கான அறிவிப்பை ஹாலிவுட்டின் வர்த்தக சபை அறிவித்தது. மோஷன் பிக்சர் பிரிவில் இவர் தேர்வாகி உள்ளார். தீபிகா இப்படியொரு அங்கீகாரத்தைப் பெற்ற முதல் இந்திய நடிகை என்ற பெருமையை பெற்றுள்ளார். ஹாலிவுட் நடிகர் ராமி மலெக் , உடன் பிரிட்டன் நடிகை எமிலி பிளன்ட், பிரெஞ்ச் நடிகர் டிமோதி சால்மெட் உடன் தீபிகா ஆகியோரும் இதே பிரிவில் தேர்வாகி உள்ளனர். அமெரிக்கா, கலிபோர்னியாவின் ஹாலிவுட் நகரில் உள்ள நடைபாதையில் பொழுதுபோக்குத் துறைகளில் சிறந்து விளங்கிய பிரபலங்களை கவுரவிக்கும் வகையில் நட்சத்திர வடிவிலான பதக்கங்கள் பதிக்கப்படும். இந்த கவுரவமிக்க அங்கீகாரத்தை தீபிகா பெறுவது இந்தியாவிற்கு பெருமை சேர்க்கும்.
0
Leave a Reply