பிரித்விராஜ் இயக்கிய 'எல்2 எம் புரான்' படம் மோகன்லால், மஞ்சுவாரியர், டொவினோ தாமஸ் உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த வாரம் வெளியானது. ஆட்சேபனைக்குரிய காட்சிகள், வில்லன் பெயர் என தொடர் சர்ச்சையில் சிக்கிய 2 நிமிட காட்சிகளை நீக்கி ,மறு தணிக்கை செய்து திரையிடப்பட் டது. ரிலீசாகி 5 நாட்களில் இப் படம் ரூ.200 கோடி வசூலித்துள்ளது. முதலிடத்தில் ரூ. 250 கோடியுடன் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' உள்ளது. இதன்மூலம் 200 கோடி வசூலை கடந்த 2வது மலையாள படமானது.
கண்ணப்ப நாயனாரின் வாழ்க்கையை தழுவி தெலுங்கில் உருவாகி உள்ள படம் 'கண்ணப்பா'. தெலுங்கு நடிகர் விஷ்ணு மஞ்சு தயாரித்து, கண்ணப்பராக நடித் துள்ளார். பல மொழிகலைஞர்கள் நடித்துள்ளனர். ஏப்., 25ல் ரிலீஸாக இருந்த படம் தள்ளிபோய் உள்ளது.. உயர் தரத்தில் கொடுக்க நினைக்கிறோம். விஎப்எக்ஸ் பணிகள் முடிய தாமதம் ஆகிறது. எங்கள் குழுவினர் ஓய்வின்றி உழைக்கின்றனர். விரைவில் புதிய ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும். ஏப்., 25ல் பான் இந் தியா படமாக வெளியாகிறது. சமீபத்தில் இப்படத்தின் டீசர் வெளியான நிலையில் சிலர் அதனை கிண்டல் செய்தனர். இதுபற்றி இதில் நடித்துள்ள ரகு பாபு கூறுகையில் "இப் படத்தை யார் கிண்டல் செய்தால் கடவுள் சிவனின் கோபத்துக்கு ஆளாவார்கள். இது 100 சதவீதம் உண்மை" என்றார்.
சசிகுமார், சிம்ரன் இணைந்து நடிக்கும் படம் அபிஷன்ஜீவ்னித் இயக்கத்தில் 'டூரிஸ்ட் பேமிலி'. இலங்கையிலிருந்து தமிழகத்திற்கு வரும் குடும்பத்தினர், இங்குள்ள வாழ்க்கைக்கு எப்படி தங்களை பொருத்திக் கொள்கிறார்கள் என்பதை கலகலப்பாக சொல்லும் படம் இது. படப்பிடிப்பு முடிந்து மற்ற பணிகள் நடந்து வரும் சூழலில் மே 1ல் படம் ரிலீஸ் என அறிவித்துள்ளனர்.
சிபி சத்யராஜ் நடித்துள்ள படம் 'டென் ஹவர்ஸ்” இளையராஜா கலிய பெருமாள் இயக்கத்தில் ,பேருந்து ஒன் றில் ஒரு நாள் இரவில் நடக்கும் ஒரு கொலையை மையமாக வைத்து ஆக்க்ஷன் கலந்த கிரைம் திரில்லராக இப்ப டம் உருவாகியுள்ளது. இந்த படம் ஏற்கனவே பொங்கல் வெளியீடு எனஅறிவித்து. பின்னர் ஏப். 18ல் ரிலீஸ் என புதிய டிரைலரை வெளியிட்டுள்ளனர்
லோகேஷ் கனகராஜ் இயக்கும்,கூலி படத்தில், ரஜினி,, 'ஹீரோ' மட்டுமின்றி வில்லத்தனமான காட்சிகளிலும் நடிக்கிறார். இந்நிலையில், கூலி படப்பிடிப்பு முடிந்ததும், மூன்று மாதங்கள் தனிமையில் அமர்ந்து, தன்னுடைய சுயசரிதையை எழுதப் போவதாக கூறுகிறார், ரஜினிகாந்த்.தன்னை பற்றி கடந்த காலங்களில் சர்ச்சையாக பேசப்பட்ட சில விஷயங்களை சுயசரிதையில் தெளிவுபடுத்தும், ரஜினி, எதிர்காலத்தில் இந்த கதையில் நடிப்பதற்கும் திட்டமிட்டு இருக்கிறார்.'
மணிகண்டன் நடிப்பில் கடைசியாக வெளியான குட் நைட், லவ்வர், குடும்பஸ்தன்' ஆகிய 3 படங்களுமே 50 நாட்களுக்கு மேல் தியேட்டர்களில் ஓடின. ஹாட்ரிக் வெற்றியால் நெகிழ்ந்த மணிகண்டன், 'சிறிய வெற்றிகளுக்கு பெரிய இதயங்கள் தேவை. மக்களிடமிருந்து பெற்ற அன்பை வெளிப் படுத்த வார்த்தைகளைக் கண்டுபிடிக்க சிர மப்படுகிறேன். சிறிய படம் 50 நாட்கள் தியேட்டர்களில் கொண்டாடப்படுவது வெற்றி மற்றும் சாதனை. இதை சாத்தியமாக்கிய ஒவ்வொருவருக்கும் நன்றி. ஒரு முறை இரண்டு முறை அல்ல, மூன்று முறை இந்த அன்பு எங்களுடனே இருக்கும்' என்கிறார்.
சமீபத்தில் வெளியான படம் பெருசு'.வைபவ், நிஹாரிகா, சுனில், கருணாகரன் உள்ளிட்டோர் நடிப்பில் ,இளங்கோ ராம் இயக்கி இருந்தார். அடல்ட் கன்டென்ட் காமெடி படமாக வந்த இதனை ,ஹிந்தியில் ரீமேக் செய்ய உள்ளனர். இதற்காக உரிமையை ஹன்சல் மேத்தா மற்றும் முகேஷ் ஷாப்ரா ஆகியோர் வாங்கி உள்ளனர். பார் நடிப்பது, இயக்குவது உள்ளிட்ட விபரங்கள் விரைவில் வெளியாகும்.
ஏ.ஆர்., முருகதாஸ் இயக்கி உள்ள “சிக்கந்தர்” ஹிந்தியில் சல்மான் கான், ராஷ்மிகா நடிப்பில் ,மார்ச் 30ல் ரிலீஸாகிறது. ஹிந்தியில் முருகதாஸிற்கு பெயரை தந்த படம் தமிழில் அவர் இயக்கிய கஜினி படத்தின் ரீமேக் தான். 'ஹிந்தியில் அமீர்கான் நடித்தார். இப்படத்தின் இரண்டாம் பாகம் எப்போது என்ற கேள்விக்கு பதிலளித்துள்ள முருகதாஸ் "அதுபற்றி ஆலோசிக்கிறேன். தெலுங்கு தயாரிப்பாளர் அல்லு அரவிந்த் தயாரிக்க போகிறார். சரியான நேரம் வரும்போது, ஒரேநேரத்தில் தமிழ், ஹிந்தியில் கஜினி 2 வை இயக்க போகிறேன் என்றார்..
தெலுங்கு இயக்குனர் சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகார்ஜுனா, ராஷ்மிகா நடிக்கும் 'குபேரா' படம் ஜூன் 20ல் ரிலீசாகிறது. படம் பற்றி சேகர் கம்முலா கூறுகையில், "குபேரா படத்தை இயக்குவதில் பெருமை. படத்தை பார்க்கும் 'ரசிகர்கள் நிச்சயம் ஆச்சரியப்படுவார்கள். எனது படங்களில் மெசேஜ் இருக்காது. அதேசம யம் சமுதாய கட்டமைப்பை பாதிக்காத அளவிலேயே எனது கதைகள் இருக்கும்" என்றார்.
நடிகர். இத்தாலியில் நடந்த 12வது மிச்செலின் முகெல்லோ கார் பந்தயத்தில் நடிகர். அஜித் ரேஸிங் அணி ஜிடி992 பிரிவில் 3ம் இடம் பிடித்து அசத்தியுள்ளது. அவரது வெற்றிக்கு ரசிகர்கள் உள்ளிட்ட பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர். ஏற்கனவே துபாயில் நடந்த கார் ரேஸிலும் அஜித் அணி 3வது இடம் பிடித்தது.