கமல் இயக்கி, நடித்த 'விருமாண்டி' படம் மூலம் பிரபலமானவர் அபிராமி, இவர் அளித்த பேட்டியில் 'விருமாண்டியில் நடித்தசமயத்தில் நான் சைக்காலஜி மற்றும் கம்யூனிகேஷன் படிக்க அமெரிக்காவில் ஓகியாவில் இருக்கும் கல்லுாரியில் சேர விரும்பினேன். அதற்கு இங் கிருந்து பிரபலமான ஒருவ ரின் சிபாரிசு கடிதம் இருந் தால் நன்றாக இருக்கும் என நினைத்தேன். கதாசிரியரும், இயக்குனருமான அடூர் கோபா லகிருஷ்ணன் எனக்கு சிபாரிசு கடிதம் தந்தார். கமலிடமும் கடிதம் கேட்டேன். அதற்கு அவர் சினிமாவை விட்டு நீ போகக்கூடாது, உனக்கு நல்ல எதிர்காலம் இருக்கு எனக் கூறி மறுத்தார். விருமாண்டி படம் முடிந்த பின் அந்த கல்லுாரியில் அட்மிஷன் கிடைத்து படிக்க சென்றுவிட்டேன்" என்றார்.
ராணியாக வாழ்ந்த கே ஆர் விஜயா 75 ஆண்டு தமிழ் சினிமாவில் சாதித்து சொந்தமாக விமானம் கப்பல் ஹோட்டல் தனக்கென புல்லட் வைத்திருந்த முதல் நடிகையும், கடைசி நடிகையும் நம்ம கே ஆர் விஜயா அம்மா அவர்கள் மட்டும்தான் அழகிலும் சிரிப்பிலும் சிறந்து விளங்கியவர் நம்ம கே ஆர் விஜயா அம்மா.
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக இருக்கும் கவுதம் மேனன், முதன்முறையாக மலையாளத்தில் மம்முட்டி நடிப்பில், 'டொமினிக் அண்ட் தி லேடீஸ் பர்ஸ்' படத்தை இயக்கினார். சுமாரான வெற்றி பெற்றது. அடுத்ததாக நடிகர்கள் மோகன்லால், பிரித்விராஜ், டொவினோ தாமஸ் ஆகியோரிடமும் அடுத்தடுத்த படங்களுக்காக பேசி வருகிறார் கவுதம்மேனன். இப்போதைக்கு தமிழில் பெரிய ஹீரோக்களுடன் படம் பண்ணும் வாய்ப்பு குறைவு என்பதால் சிறிது காலம் மலை யாளத்தில் பயணிக்க அவர் முடிவெடுத்துள்ளார்.
சின்னத்திரையில்இருந்து வெள் ளித்திரைக்கு வந்தவர் நடிகர் ரியோ ராஜ். ஜோ படத்திற்கு பின் அவர் நாயக னாக நடித்துள்ள படம் 'ஸ்வீட் ஹார்ட்'. நாயகி யாக கோபிகா ரமேஷ் நடிக்க, ஸ்வினீத் எஸ்.சுகுமார் என்பவர் இயக்கியுள்ளார். இசையமைப் பாளர் யுவன் ஷங்கர் ராஜா தயாரிக்கிறார். இளைஞர்களை கவரும் விதமாக காதல் கதை யில் உருவாகி உள்ள இப்படம் மார்ச் 14ல் ரிலீஸ் என அறிவித்துள்ளனர்.
சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜூன், ராஷ்மிகா நடித்த 'புஷ்பா 2' படம் ரூ.1800 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்தது.இதற்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சியில் பேசிய அல்லு அர்ஜூன், "சுகுமாருக்கு நன்றி சொல்ல விரும்பவில்லை. நன்றி மட்டும் அவருக்கு போதுமானது அல்ல" என்றார். இதனை கேட்ட சுகுமார் நெகிழ்ந்து கண் கலங்கினார். அதை பார்த்த அல்லு அர்ஜூன், "நீங்கள் கண் கலங்கி என்னையும் கலங்க வைக்காதீர்கள்" என்றார்.
தந்தையை நினைத்து நெகிழும் அஜித் இந்த வருடம் அவர் வாழ்வில் மறக்க முடியாத வருடம். கார் ரேசில் வெற்றி!! வெகு நாட்கள் கழித்து ஒரே வருடத்தில் இரண்டு படங்கள்.. இப்போ பத்மபூஷன் விருது.இந்த நாளைக் காண என் மறைந்த தந்தை இப்போது என்னுடன் இருந்திருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். ஆனாலும், நான் செய்யும் எல்லாவற்றிலும் அவரது வழிகாட்டுதல் இருக்கிறது என்பதில் அவர் பெருமைப்படுவார். என் அம்மாவின் நிபந்தனையற்ற அன்புக்கும், நான் என்னவாக விரும்பினேனோ அதுவாக மாற உதவிய அவரது தியாகங்களுக்கும் நான் நன்றி சொல்ல விரும்புகிறேன்.
ஸ்ரீ கணேஷ் இயக்கத்தில் சித்தார்த் நாயகனாக நடிக்கும் 40வது படம் '3பிஎச்கே'. இதில் சரத்குமார், தேவயானி, மீதாரகுநாத், சைத்ரா ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். நடுத்தர குடும்பத்து வர்க்கத் தினரின் பெரிய கனவுகளில் ஒன்று வீடு. இதை பின்ன ணியாக கொண்டு இப்படம் உருவாகிறது. இதன் படப்பி டிப்பு வளர்ந்து வரும் சூழலில் அறிமுக டீசரை வெளியிட்டு இதனை அறிவித்துள்ளனர்.
2013ல் மலையாளத்தில் ஜீத்து ஜோசப் இயக்கத் தில் மோகன்லால் நடிப்பில் வெளியாகி வரவேற்பை பெற்ற படம் 'திரிஷ்யம்' தமிழ், தெலுங்கு ஹிந் தியிலும் ரீமேக் ஆனது. தொடர்ந்து இரண்டாம் பாகமும் மலையாளம், தெலுங்கில் வெளியானது. இப்போது திரிஷ்யம் 3 உருவாவதாக மோகன்லால் அறிவித்துள்ளார். இதுபற்றி “கடந்த காலம் அமைதியாக இருக்காது. திரிஷ்யம் 3 உறுதியாகிவிட்டது" என்று அவர் குறிப்பிட்டுள்ளார்
மார்ச் 7ல், "அம்பி, அஸ்திரம், படவா, ஜென்டில்வுமன், கிங்ஸ்டன், லெக் பீஸ், மர்மர், நிறம் மாறும் உலகில்,எமகாதகி' ஆகிய 9 படங்கள் வெளியாவதாக அறிவிக்கப்பட்டுள்ளன. 2025 இரு மாதங்களில் இதுவரை தமிழில் 45 படங்கள் வெளியாகி உள்ளன. இவற்றில் மூன்று படங்கள் மட் டுமே லாபகரமாக அமைந்துள்ளன. . பிப்., 14ல் அதிகபட்சமாக 9 படங்கள் வெளியாகின.
பிரதீப் ரங்கநா தன் அனுபமா, கயாடு லோகர் ஆகியோர் நடிப் பில் பிப்.,1ல் திரைக்கு வந்த படம் 'டிராகன்', இப்படம் ரூ.100 கோடி வசூலை கடந்துள்ளது. இதற்கு நன்றி தெரிவித்துள்ள அஷ்வத், ரசிகர்கள் அளித்த அன்புக்கு 100 கோடி நன்றி.வெளியீட்டிற்கு முன் என் தன்னம்பிக்கையை உடைக்க முற்பட்ட போது 'நாங்க இருக்கோம் பார்த்துக்கலாம்' என்று சொன்ன எல்லோருக்கும் நன்றி" என குறிப்பிட்டுள்ளார்.