25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் 6-வது மைல் குடிநீர் தேக்கம் நிரம்பி, 2-வது குடிநீர் தேக்கத்துக்கும் தண்ணீரை சேமித்து வைக்கவும் நகராட்சி தலைவர் பவித்ரா ஷியாம், ஆணையாளர் நாகராஜன் உத்தரவு. பொதுமக்கள் மகிழ்ச்சி. >> பாரம்பரிய கொத்தலு திருவிழா, ராஜூக்கள் சமூகம் சார்பில்ராஜபாளையத்தில் விமர்சையாக கொண்டாடப்பட்டது. >> ராஜபாளையம் சர்வசமுத்திர அக்ரஹாரம் தெரு சந்தான வேணுகோபால சுவாமி கோயிலில் மகாதேவ அஷ்டமி. >> விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு ஒன்றியத்திற்குட்பட்ட கோபாலபுரம் கிராமத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான 10 நாட்கள் தொழில் முனைவோர் பயிற்சி முகாம். >> ராஜபாளையம் வேட்டை வெங்கடேச பெருமாள் கோயிலில் திருக்கல்யாண விழா. >> நீர்வரத்து அதிகரித்ததால், அய்யனார் கோயில் ஆற்றைக் கடந்து வழிபாட்டிற்கு செல்ல வனத்துறை தடை விதித்தனர். >> இராஜபாளையம் பீமா ஜூவல்லரி இராஜபாளையம் ஓராண்டை நிறைவு செய்கிறது. >> நீரின் ஆழம் குறித்து எச்சரிக்கை பலகை தேவை . >> அய்யனார் கோயில் ஆற்றில் கனமழையால் வெள்ளப்பெருக்கு.  >> "அல்ட்ராடெக் சுப ஆரம்பம்". >>


வெள்ளித்திரை

Apr 30, 2025

, 'ஹேர் டிரஸ்சர்' ஆலிம் ஹக்கீம் ஒரு தடவை ,முடிவெட்டஒரு லட்சம் ரூபாய்! 

முடிகளை ஸ்டைலாக பராமரிக்க, பாலிவுட்டை சேர்ந்த, 'ஹேர் டிரஸ்சர்' ஆலிம் ஹக்கீம் என்பவரை, நடிகர் ரஜினி சென்னைக்கு வர வைக்கிறார் .நடிகர் ரஜினியின் தலையில் வழுக்கை இருப்பினும், மீதமுள்ள முடிகளை ஸ்டைலாக பராமரிக்க, 'ஹேர் டிரஸ்சர்' ரை, சென்னைக்கு வர வைக்கிறார். தன் தலை முடியை ஒரு தடவை, 'கட்டிங்' செய்வதற்கே அவருக்கு, ஒரு லட்சம் ரூபாய், சம்பளம் கொடுக்கிறார், ரஜினிகாந்த்.ரஜினி மட்டுமின்றி, மகேஷ் பாபு, ராம்சரண், ரன்பீர் கபூர் மற்றும் கிரிக்கெட் வீரர்கள் எம்.எஸ்.தோனி, விராட் கோலி போன்ற பிரபலங்களுக்கும், ஹேர் டிரஸ்சராக இருந்து வருகிறார், ஆலிம் ஹக்கீம்.

Apr 30, 2025

சவாலான பட் - ஜெட் காரணமாக 'பொன்னியின் செல்வன்' தயாரிக்க மறுத்த  எம்.ஜி.ஆர், கமல்.

சவாலான பட் - ஜெட் காரணமாக எம்.ஜி.ஆர்., கமல் இருவரும் முன்னதாக எடுக்க முயற்சித்து தோல்வியடைந்த,.கல்கி எழுதிய சரித்திர நாவலான 'பொன் னியின் செல் வன்' கதையை இயக்குனர் மணிரத்னம் இரு பாகங்களாக திரைப்ப டமாக எடுத்து வெளியிட்டார்.. இதனை மணி ரத்னம் இயக்கி சாதித்தார். 'நாயகன்' படத்திற்கு பிறகு 38 ஆண்டுகள் கழித்து மணி ரத்னம்-கமல் கூட்டணியில் 'தக்லைப்' படம் தற்போது உருவாகியுள்ளது. இத் தனை ஆண்டுகள் இடை வெளி மற்றும் இடையில் இணைய முயற்சித்தீர்களா என செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, "பொன்னியின் செல் வன் படத்தின் முழு ஸ்கிரிப்டை எடுத்துக்கொண்டு மணிரத்னம் வந்தார். அவர் சொன்ன பட்ஜெட்டை பார்த்து என்னால் தாங்க முடியாது எனக்கூறிமறுத்துவிட்டேன்" என தயாரிக்க மறுத்ததை தெரிவித்தார் கமல். 

Apr 30, 2025

தீபிகா –ரன்வீர் குடிபோகும் வீட்டின் மதிப்பு ரூ.100 கோடி.

ரன்வீர் சிங்,தீபிகா படு கோனே  பாலிவுட்டின் பிரபலமான நட் சத்திர ஜோடியான தம்பதியினருக்கு கடந்த செப்டம்பர் மாதம் பெண் குழந்தை பிறந்தது. இவர்கள் மும்பையின் பாந்த்ரா பகுதியில் ஷாருக்கான் வீட்டிற்கு அருகில் பிரமாண்ட அடுக்குமாடி குடியிருப்பில் விரைவில் குடியேறப் போகிறார்கள். 11 ஆயிரம் சதுர அடி கொண்ட நான்கு அடுக்குமாடி குடியிருப்பான இதன் மதிப்பு ரூ.100 கோடி என்கிறார்கள்.

Apr 30, 2025

'யங் மங் சங்'.  நிதி பிரச்னையால் ரிலீஸ் ஆகாமல் இருந்த பிரபுதேவா படத்திற்கு விடிவு.

பிரபுதேவா, லட்சுமி மேனன், ஆர்ஜே பாலாஜி ,உள்ளிட்டோர் நடித்துள்ள எஸ்.ஜே.அர்ஜூன் இயக்கத்தில் 'யங் மங் சங்'. படம் ரெடியாகி 6 ஆண்டுகள் ஆகிறது. நிதி பிரச்னையால் ரிலீஸ் ஆகாமல் இருந்த இப் படத்தை தற்போது வெளியிடும் முயற்சி நடக்கிறது.  காமெடி கலந்த படமாக  குங்பூ கலையை வைத்து 17ம் நூற்றாண்டில் துவங்கி 1980 வரை நடக்கும் கதையாக உருவாகி உள்ளது.

Apr 30, 2025

. கடந்த பத் தாண்டுகளில் நான் பார்த்த சிறந்த படம் 'மெய்யழகன்'.நெகிழ்ந்து பேசிய நானி.

 'ஹிட் 3'. நடிகர் நானி நடிப்பில் மே 1 ல் ரிலீசாக உள்ள படம் ஒரு நிகழ்ச்சியில் பிரேம்குமார் இயக்கத்தில் கார்த்தி, அரவிந்த் சாமி நடித்த 'மெய்யழகன்' படம் பற்றி மனம் திறந்து பேசியுள்ளார் நானி. “தமிழ் சினிமாவில் மட்டுமல்ல. கடந்த பத் தாண்டுகளில் நான் பார்த்த சிறந்த படம் 'மெய்யழகன்'. அது ஒரு மேஜிக்கல் சினிமா. செட் அமைத்து ஆயிரம் கோடி செலவிடலாம். இந்த படம் ஒரு தனி மேஜிக். இவ்வளவு பர்சனலான ஒரு படத்தை எடுப்பது சாத்தியமில்லாதது. அதைப் பற்றி நினைத்தாலே சந்தோஷமாகி விடுவேன்" என பேசியுள்ளார் நானி.

Apr 23, 2025

மதராஸி செப்., 5ல் படம் ரிலீஸ் ஆவதாக அறிவித்துள்ளனர்.

ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில், உருவாகி வரும் படம் 'மதராஸி', கடந்தாண்டு பிப்ரவரியில் துவங்கிய படப்பிடிப்பு இன்னும் முடியவில்லை. இடையில் சல்மான்கான் நடிப்பில் ஹிந்தியில் 'சிக்கந்தர்' படத்தை எடுத்து முடித்துவிட்டார் முருகதாஸ். மார்ச் 30ல் ரிலீஸ் ஆனது. அதன்பின் ஏப்ரல் மாத மத்தியில் 'மதராஸி' படத்தின் படப்பிடிப்பை மீண்டும் ஆரம்பிக்க உள்ள முருகதாஸ், 20 நாட்களுக்கு மேல் தொடர்ந்து நடத்தி முடிக்க திட்டமிட்டுள்ளார். ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும். படம் 'மதராஸி, ருக் மணி வசந்த், வித்யூத் ஜம்வால், விக்ராந்த், சபீர் நடிக்கின்றனர். அனிருத் இசையமைக்கிறார் . 80 சதவீத படப் பிடிப்பு முடிந்துள்ள நிலையில் மீதமுள்ள படப்பிடிப்பு மற்றும் மற்ற பணிகள் துவங்கி உள்ளன. இந்நிலையில் செப்., 5ல் படம் ரிலீஸ் ஆவதாக அறிவித்துள்ளனர். 

Apr 23, 2025

ராம்சரணின் 'பெத்தி' அடுத்தாண்டு மார்ச் 27ல்வெளியாகும்.

'உப்பேனா' பட இயக்குனர் புஞ்சி பாபு சனா இயக்கத்தில் , நடிகர் ராம் சரண் தனது 16வது படமாக 'பெத்தி' எனும் படத்தில் நடித்து வருகிறார். இதில்  ஏ.ஆர்.ரஹ்மான் இசைய மைக்க ,கதாநாயகியாக ஜான்வி கபூர் நடிக்கிறார். சிவராஜ் குமார், ஜெகபதி பாபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்துவரும் சூழலில் அடுத்தாண்டு மார்ச் 27ல் படம் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

Apr 23, 2025

சிம்புவின்  49வது படத்திற்கு சாய் அபியன்கர் இசையமைப்பார் என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

ராம்குமார் பாலகிருஷ் ணன் இயக்கும் 49வது படம், அஸ்வத் மாரிமுத்து இயக்கும் தனது 50 வது படங்களிலும் அடுத்தடுத்து நடிக்கிறார். இதில் 49வது படத்திற்கு சாய் அபியன்கர் இசையமைப்பார் என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். சாய் அபியன்கர் இசைய மைப்பில் இதுவரை எந்த படமும் வெளியாகாத நிலையில், அவர் கைவ சம் சூர்யாவின் 45வது படம், அட்லி அல்லு அர் ஜூன் படம், ராகவா லாரன்சின் 'பென்ஸ் 'பிரதீப் ரங்கநாதனின் 4வது படம் என வரிசையாக படங்களில் ஒப்பந்தம் ஆகியுள்ளார். கமல் நடிப்பில் 'தக்லைப்’ படத்தில் நடித்துள்ள நடிகர் சிம்பு, அடுத்து தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் தனது 48வது படத்தில் நடிக்க உள்ளார்.

Apr 23, 2025

'கேப்டன் பிரபாகரன்'  '4கே'யில் ரீ ரிலீசாகும்.

மறைந்த நடிகர் விஜய காந்தின் 100வது படம் 'கேப்டன் பிரபாகரன்'.அவரது திரையுலக பயணத்தில் மைல்கல்லாக அமைந்த இப்படம் வெளியாகி 34 ஆண்டு கள் ஆகிறது. இதைதற்போது '4கே' தொழில்நுட்பத் தில் புதுப்பொலிவுடன் ரீ-ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர். ஆர். கே.செல்வமணி இயக்கிய இந்தபடத்தில், இளைய ராஜா இசையில், சரத்குமார், மன்சூர் அலி கான், ரூபிணி, ரம்யா கிருஷ்ணன், லிவிங்ஸ் டன் ஆகியோர் நடித்திருந்தனர்.

Apr 23, 2025

தொடர்ச் சியாக இரு வெற்றி படங்களை கொடுத்த ஹரிஷ் கல்யாண்.

'பார்க்கிங், லப்பர் பந்து' என தொடர்ச் சியாக இரு வெற்றி படங்களை கொடுத்த ஹரிஷ் கல்யாண் கைவ சம், 'நுாறு கோடி வான வில், டீசல்' ஆகிய படங்கள் உள்ளன. இத னையடுத்து தற்போது 'லிப்ட்' பட இயக்கு னர் வினித் வரபிரசாத் இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வருகி றார் ஹரிஷ் கல்யாண். இது அவரது 15வது படம். இதில் பிரீத்தி முகுந்தன் நாயகியாக நடிக்கிறார்.

1 2 ... 21 22 23 24 25 26 27 ... 59 60

AD's



More News