பான் இந்தியா படமாக உருவாகும் 'நாகபந்தம்'
தெலுங்கில் அபிஷேக் நாமா இயக்கத்தில் விராட் கர்ணா, நபா நடேஷ், ஐஸ்வர்யா மேனன் நடிப்பில் உருவாகும் படம் 'நாகபந்தம்'. இதை பான் இந்தியா பட மாக வெளியிடும் நோக்கில் உருவாக் குகின்றனர். இதன் படப்பிடிப்பை நடிகர் சிரஞ்சீவி துவக்கி வைத் தார். "இதன் கதை இந்தியாவில் உள்ள 108 விஷ்ணு கோயில்களுடன் தொடர்புடைய நாகபந்தத்தைச்சுற்றி நடக்கும். மந்திரம், மர்மம் மற்றும் சாகசங்கள் அடங்கிய புதிய சாம்ராஜ்யத் திற்கு இந்த படம் அழைத்துச் செல்லும்" என்கிறார் அபிஷேக் நாமா.
0
Leave a Reply