திருவில்லிபுத்தூர் மற்றும் இராஜபாளையம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் ஆய்வு.
விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூர் மற்றும் இராஜபாளைம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் அரசின் திட்டங்கள் மற்றும் பயன்கள் தொடர்புடைய பொதுமக்களுக்கு சென்றடைவதை உறுதி செய்யும் விதமாக மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S, அவர்கள் (06.05.2025) நேரில் சென்று பார்வையிட்டு, பயனடைந்து வரும் பயனாளிகளிடம் கலந்துரையாடி கருத்துக்களை கேட்டறிந்து ஆய்வு செய்தார்.
அதன்படி, திருவில்லிபுத்தூர் ஊராட்சி ஒன்றியம் கொத்தங்குளம் ஊராட்சியில் கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் ரூ.3.50 இலட்சம் மானியத்தில் வீடுகள் கட்டப்பட்டுள்ளதையும்,இராஜபாளையம் ஊராட்சி ஒன்றியம், கொருக்கம்பட்டி ஊராட்சியில் கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் ரூ.3.50 இலட்சம் மானியத்தில் வீடுகள் கட்டப்பட்டு வருவதையும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்து, பயனாளிகளிடம் கலந்துரையாடி கருத்துக்களை கேட்டறிந்தார்.
தென்கரை ஊராட்சியில் உயிர் நீர் இயக்கத்தின் கீழ் ஊஞ்சாம்பட்டி கிராமத்தில் ரூ.16.75 இலட்சம் மதிப்பில் 30,000 லிட்டர் கொள்ளவு கொண்ட மேல்நிலை நீர் தேக்க தொட்டி கட்டப்பட்டுள்ளதையும்,பின்னர், இளந்திரை கொணடான் ஊராட்சியில் ஊரக வீடுகள் சீரமைப்பு திட்டத்தின் கீழ் ரூ.1.50 இலட்சம் மதிப்பில் வீடுகள் சீரமைக்கப்பட்டு உள்ள பணிகளையும்,மேலூர் துரைசாமிபுரம் ஊராட்சியில் கனிம வள நிதியின் கீழ் ரூ.8.11 இலட்சம் மதிப்பில் மயான காத்திருப்புக்கூடம் மற்றும் குளியல் தொட்டி கட்டப்பட்டுள்ளதையும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்து, அரசின் பல்வேறு திட்டங்கள், பயன்கள் குறித்து பொதுமக்களிடம் கலந்துரையாடி அவர்களின் கருத்துக்களை கேட்டறிந்தார்.
மேலும், நடைபெற்று வரும் பணிகளை விரைந்தும், தரமாகவும் முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வருவதற்கு சம்மந்தப்பட்ட அரசு அலுவலர்களை அறிவுறுத்தினார்.இந்த நிகழ்வுகளில், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், உதவிப் பொறியாளர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் இருந்தனர்.
0
Leave a Reply